ஈரான் அணு விஞ்ஞானியான ஷராம் அமிரி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் காணாமல் போய்விட்டார், இது சம்மந்தமாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காதான் அவரை கடத்தியதாக தெரிய வந்துள்ளது என்று ஈரான் நிதியமைச்சர் மோட்டாகி தெஹ்ரானில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். அமெரிக்காதான் அவரை கடத்தியுள்ளனர் என்பதால் அவரை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சவூதி அரேபியாவிற்கு புனித யாத்திரை ஒன்றை மேற்கொண்டபோதே அவர் காணாமல் போய் உள்ளார். எனவே சவூதி அரேபியா அரசைத்தான் நாங்கள் இது குறித்து கேள்வி கேட்க வேண்டும். இது தொடர்பாக பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அந்நாட்டு அரசுக்கு உள்ளது என மோட்டாகி தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ரமின், சவூதி அரேபியாதான் விஞ்ஞானி அமிரியை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர் என்று குற்றம் சாற்றினார்.