இந்தியாவிலிருந்து பல ஈரானிய மாணவர்கள் கடந்த பல மாதங்களாக வெளியேற்றப்படதைத் தொடர்ந்து ஈரான் நான்கு இந்திய மாணவர்களை ஈரானிலிருந்து வெளியேற்றியுள்ளது.
ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் நான்கு இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 4 முதல் 10 ஆண்டு காலமாக மருத்துவம் மற்றும் பல்வேறு மேற்படிப்புகளை ஈரான் அரசு வழங்கும் உதவி மூலம் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில திகதிகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரஷீன் என்ற மாணவர் ஒருவர் கடந்தாண்டு சூலை மாதம் 21ம் திகதி தன்னுடைய மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளார்.