ஈபீடீபியின் உறுப்பினர் வாகரை காவற்துறையினரால் கைது:

ஈபிடிபியின் உறுப்பினர் ஒருவரை வாகரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு செங்கலடியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈபிடிபியின் உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் கொலை மற்றும் குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வாகரை காவல்துறையினர் கூறியுள்ளனர்.