இஸ்பானியாவில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களின் தொகை 25 வீதமாக அதிகரித்துள்ளது என்று இஸ்பானிய பொருளாதார சமூக ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இளைஞர்களின் வேலையின்மை அதிகரிப்பு, சமூக உதவித்தொகைகளின் நிறுத்தம் ஆகியன வறுமையை மேலும் அதிகரிக்கும் என இந்த ஆணையகம் எச்சரித்துள்ளது.
24 வீதமான இஸ்பானியர்கள் வேலையற்றோராக உள்ளனர். 50 வீதமான இளஞர்கள் வேலையின்மையால் துன்புறுகின்றனர். இதே நிலை ஏனைய ஐரோப்பவில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே வேளை சமூக உதவிகளை நிறுத்துமாறு ஐரோப்பிய பணமுதலைகள் மிரட்டுகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்தவாரம் மட்டும் 1.6 வீதமான முதலீடுகளை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
They have some trade mark traits, Now, Hugo Chavez wants to be as popular as Fidel Castro. They all speak Spanish.