“நான் இறுதிக்காலத்தில் வாழ்வதற்காகச் சேமித்துவைத்த ஓய்வூதியப்பணத்தையும் அவர்கள் திருடிக்கொண்டார்கள். எனக்கு வாழ வேறு வழி தெரியவில்லை. எனது வயது காரணமாக நான் இதைவிட வேறு தீவிர வழிகளில் போராடவில்லை. ஆனால் ஒரு நாள் இளைஞர்கள் ஆயுதமேந்தி தேசத்துரோகிகளை இதே சிந்தாக்மா சதுக்கத்தில் தலை கீழகத் தொங்கவிடுவார்கள்.” எனக் குறிப்பு எழுதிவைத்துவிட்டு கிரேக்கத்தில் ஓய்வூதியம் பெறும் வயதை எட்டிய ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பார்மசிஸ்ட்டாக வேலை செய்து ஓய்வெடுத்த டெமிட்ரி கிறிஸ்ரோலஸ் என்பவரின் தற்கொலை கிரக்கத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் வங்கிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் நியமிக்கப்பட்ட அரசு மக்களை அடிமைகளாக்கியுள்ளது. ஐரோப்பா முழுவதும் பரவிவரும் பொருளாதார நெருக்கடி முதலில் கிரேக்கத்திலேயே ஆரம்பித்தது. பெருமளவில் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்ட வங்கிகளும் பல்தேசிய நிறுவனங்களும் மிகுதிப் பணத்தையும் ஏழைகளிடமிருந்து அபகரித்துக் கொள்கிறது.
தற்கொலையைத் தொடர்ந்த ஆர்பாட்டத்தை பொலிசார் கண்ணீர்ப் புகைக தடியடி நடத்தி ஒடுக்கினர். இரு ஊடகவியளார்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
04.04.2012 அன்று இத் தற்கொலைச் சம்பவம் நடைபெற்றது. தற்கொலை செய்துகொண்ட மரத்திற்கு அருகாமையில் இது கொலை அல்ல கொலை என்ற பதாகை காணப்பட்டது.








Greeks are Catholic like the Irish who should come back into the UK because of Osama Bin Laden. Euro is in trouble. Sri Lankan Tamils are awesome. They are driving the world history.Economy is growing in Sri Lanka – Shri Lanka since 1997.
இதைவிட ஏராளமான தற்கொலைகள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தி இருக்கின்றன..ஏற்படுத்திக் கொள்ளுகின்றன. அதுவும் அரசியல் தற்கொலைகளே!.
துனேசியா கிரேக்கம் ஒரு தனிமனிதனின் தற்கொலைக்கு வழிதேடுமாக இருந்தால்… அந்த தேடல் இந்தியா இலங்கைக்கும் இருந்தாக வேண்டும். இதுவே அரசியல். இதுவே வர்க்கப்போராட்டம். இதுவே மானிடவரலாற்றின் ஒரு பகுதியாகவும் இருந்தாக வேண்டும்.
In Sri Lanka they will definitely prevent another another armed uprising by the Tamils.