இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாக ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் , பென்டகன், தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. அதிபர் ஒபாமாவுக்கு இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து வருவதாகவும். இலங்கை நிலவரத்தை ஜனாதிபதி ஒபாமா கூர்ந்து அவதானித்தி வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன.இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் தடவை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.