இலங்கை வடபகுதியில் : சர்வதேசப் புலனாய்வுச் சேவை?

உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக இலங்கை பாதுகாப்பு துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக வாராந்தம் செய்திமதி மூலம் புகைப்படம் எடுப்பதுடன் தற்போதைய போர் நிலைமைகளை கண்காணித்து அந்த தகவல்களையும் தமது நாடுகளுக்கு வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ளும் தகவல்களுக்கு மேலதிகமாக இந்த நாடுகள் பெற்றுக்கொள்ளும் இந்த ரகசிய தகவல்கள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்ததில் தீர்க்கமான கலாகட்டத்தின் போது, இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் நோக்கில் இந்த ரகசிய தகவல்கள் திரட்ப்படுகின்றதா என்பது குறித்தும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.