இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.defence.lk, விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ‘ஹேக்கர்ஸ்’ என்போரால் ‘சைபர்’ தாக்குதலுக்குள்ளாகி சிதைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஊடுருவி அதிலுள்ள தகவல்களை சீர்குலைத்துள்ளதாக இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ராணுவ இளையதள நிர்வாகிகள் கூறுகையில் 1997ஆம் ஆண்டு முதலே விடுலைப்புலிகள் தங்களது பிரச்சாரத்தை இணையதளங்கள் மூலம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சவின் முயற்சியால் இணையதளங்களில் நாங்கள் பதில் பிரச்சாரம் செய்ய துவங்கினோம், இப்போது விடுதலைப் புலிகள் எங்கள் இணையதளத்திற்குள் ஊடுருவி அதிலுள்ள தகவல்களை சிதைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகளின் தவிர்க்க முடியாத தோல்வியையே இது காட்டுகிறது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இணையதளத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ இணையதள நிர்வாகி தெரிவித்துள்ளார்.