ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சில வேளைகளில் இந்த விசாரணை முடிவுகள் நீதியின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில ஊடகமான பொஸ்டன் க்ளோப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள் காட்டி, ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. விசாரணைகளை நடத்தும் பொறுப்பை கண் மூடித்தனமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.