தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரத்பொன்சேகாவும் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் தமிழ் மக்களின் வாழும் உரிமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெவித்தார்.
கண்டி, சுவிஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மனிதாபிமான படை நடவடிக்கைகளின் மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் நன்மையடைந்ததோடு சுதந்திரமாக வாழும் உரிமையைப் பெற்றனர்.
நாம் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் வாழும் உரிமை கிடைத்தது.
ஆனால் ஈழக் கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரத் பொன்சேகாவும் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தால் இலங்கையின் மீது வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகத்துள்ளன.
நாட்டில் சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகளின் நடவடிக்கை அதிகரித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட மறுகணமே கனடா, ஜெர்மன் மற்றும் பல நாடுகளில் புலி ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி ஆரவாரம் செய்தார்கள்.
எமது நாட்டின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் சுமத்தியதோடு ஐ. நா. வின் மனித உரிமை ஆணைக் குழுவும் எமது நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தியது.