இலங்கை அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாற்றியுள்ளார்.
அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி துறைமுகத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது :
இன்று தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு போல இலங்கையிலும் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.அது கூட நாடகம்தான்.
நேற்று கூட இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு அப்பாவிகுழந்தைகள், பெண்கள் என சுமார் 200 பேர் பலியாகி உள்ளனர்.ஆனால் சிலர் தாங்கள் பேரணி நடத்தியதால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கின்றனர்.
இப்படி கூறி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றார் அவர்.
பாண்டியன் செயலலிதாவோடு நிக்கிறபடியாலை இப்படிச் சொல்கின்றார்! காங்கிரசோடு நின்றால் கலைஞர் சொல்வதையே சொல்வார்! தேர்தல் முடிய யாரோடு கூட்டணியோ தெரியாது! இந்தப்போலிகளுக்கு தேசிய சர்வதேசரீதியாக சொந்தக் கொள்கையும் கிடையாது >சொந்தப புத்தியும் கிடையாது