28.03.2009.
26 வயதான ரமணி தனது சிறிய, மங்கலான வெளிச்சமுடைய தங்குமிட அறையொன்றினுள் இருந்தவண்ணம் மரக்கறிகள் நறுக்குகிறார். இவ்விடம் கொழும்புக்கு வெளியிலுள்ள கைத்தொழில் பட்டினமாகும். அவர் மணம்செய்வதற்குத் தனது சொந்த இடமான கிராமத்திற்கு மே மாதத்திற் திரும்ப எண்ணியுள்ளார்.
அவர் கூறியதாவது;
அநேகமான பெண்பிள்ளைகள் ஆடைத் தொழிற்சாலைகளில் இரண்டு வருடங்கள் வேலைசெய்த பின்னர் மணம் செய்வதற்குத் தமது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.ஸ்ரீலங்கா முழுவதும் பரந்துகிடக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலை செய்துவந்தனர். அவர்கள் பயோகமா போன்ற பட்டினங்களிலுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் நெருங்கி வாழ்ந்தனர். இன்று அவர்களது பொருட்களுக்கு குறைந்தளவு கேள்வியுள்ளதனால் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலை எழுந்துள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதிப் பொருளான ஆடைகளின் ஏற்றுமதி ஐரோப்பாவின் வரிகளற்ற சலுகை நின்றபின் அதனால் ஏற்பட்ட பாரிய பாதிப்பும், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியும் பெண்களை வேலையற்ற நிலையை எதிர்நோக்கச் செய்ததுடன் கூடிய வசதிகளை உருவாக்குமாறு கேட்பதற்கும் துணிவை ஏற்படுத்தவில்லை.
ஜே.ஏ.ஏ.எவ்.வின் தலைவர் அஜித்டயஸ் கூறியதாவது;
ஏப்ரல் ஜூனுக்கான காலாண்டுப் பகுதிக்கான கேள்வி கவலையைத் தருவதாகும். அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது;
“”பொதுவாக வாங்குபவர்கள் இப்போது பொருட்களுக்கான கட்டளைகள் தர முன்கூட்டியே அதிகம் விருப்பம் காட்டுவதில்லை’.
இந்த நெருக்கடி நிலை தொழிற்சாலைகளை வேலைசெய்யும் நாட்களை கிழமையில் 5 ஆகக் குறைக்கவும், சனிக்கிழமை அரைநாள் வேலைக்காக நாடோறும் 1 மணி நேர வேலையை அதிகப்படுத்தியும் உள்ளன. இது சக்திவளம் போன்றவற்றைச் சேமிக்கும் நடவடிக்கையாகும்.
இலங்கையின் முதலாளிகள் சம்மேளனம் 5 நாட்கள் வேலை ஒழுங்குப் பிரேரணையை அரசாங்கத்திற்கு அனுப்பி அதனது பதிலை எதிர்பார்த்திருக்கிறது.
2006 ஜூலை தொடக்கம் பெண் தொழிலாளர்கள் அதிகமாக உள்ள தொழிற்சாலை ஒன்றில் 40,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
சென்றமாதம் 25 வயதான எண்ணெய் கம்பனியொன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் தனது தொழிற்சாலையை மூடியுள்ளது. அது அமெரிக்காவின் கட்டளைகளை துரிதகதியில் இழந்து வருவதாகவும், அதனது 2000 தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டியிருப்பதாகவும் கூறுகிறது.
தொழிற்சங்கத் தலைவர்கள் மேற்கிலிருந்து கட்டளைகளை இழந்துவருவதனால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன என்ற கூற்றை ஏற்கமறுக்கின்றனர். அவர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்களது சீரற்ற நிர்வாகமும், தொழிற்சங்கத் தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே பிரதான காரணங்களாகும் என அவர்கள் கூறுகிறார்கள். இதனைக் கூறுவது சுதந்திர வர்த்தக வலயத்தினுள் உள்ள பொதுச் சேவைத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அன்ரன் மாக்கஸ்.
உலகளாவிய நெருக்கடி உள்ளூர் ஆடைத் தொழிற்துறையைப் பாதிக்கவில்லை. மாக்கஸ் கூறியதாவது;
“”கட்டளைகள் இன்னும் இருக்கின்றன. தொழிலும் நல்ல நிலையிலேயே உள்ளது.’ அவர் மேலும் கூறுவதாவது;
“”இந்த பொருளாதார நெருக்கடியை உபயோகித்து சில முதலாளிமார் தமது தொழிற்சாலைகளை மூடி, பின்னர் புதியனவாகத் திறந்து குறைந்த தொகையான, மலிவான தொழிலாளர்களை எடுப்பது அவர்களது உபாயமாகும்’.
குறைந்தளவான ஏற்றுமதி கட்டளைகள், தொழில் வழங்குநர்களுக்கும், யூனியன்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் சிறிய அறைகளில் தொழில்புரியும் ரமணி போன்றவர்களை எவ்வகையிலும் பாதிக்காது. ஆனால், ரூபா 10,000 ஐக் கொண்டு மாதந்தோறும் வாழ்க்கை நடத்துவது கஷ்டமானதாகும்.
அவரது மாத வருமானத்தில் மூன்றிலொரு பங்கு இடவாடகைக்கு வேண்டும். இன்னும் மூன்றில் ஒன்று வீட்டுச்செலவுக்கு அனுப்ப வேண்டும். தனது உணவு ஆகியவற்றிற்கு இருப்பது மிகுதித் தொகையே.
ரமணியிடம் ஒரு ஸ்ரோவ் அடுப்பு, ஒரு ரெலிவிஷன், மின்விசிறி, கையடக்கத் தொலைபேசி ஆகியன உண்டு. மேலும், கதவுகளற்ற, தூரத்திலுள்ள உடைந்த கழிப்பறைகளும் உண்டு.
தங்களது முதலாளிமார், தொழில் வழங்குநர்களது கோபத்திற்கு ஆளாவதற்குப் பயந்து பலர் தமது பெயர்களை வெளிப்படுத்த அஞ்சினர்.
மிகச் சிக்கனமாக வாழும் அவர்கள் நாளாந்த உணவாக சோறும், மரக்கறிகளும் உண்கின்றனர். மீனோ, முட்டையோ கிடைப்பதில்லை. “”நாங்கள் இறைச்சி மாதத்தில் ஒருமுறை தான் உண்கின்றோம். அவை சாப்பிட எமக்குப் பணம் கிடையாது.’ என்கிறார் 21 வயதான குமாரி. இளம் வயதுப் பெண்கள் வேலைக்குப் போகும்போதும், வரும்போதும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
“”முச்சக்கரவண்டிச் சாரதிகள் வண்டிகளில் எம்மை ஏற்றிச்செல்வதாகக் கூறுவர். மோட்டார் சைக்கிளிற் செல்பவர்கள் எமது மயிரைப் பிடித்து இழுப்பர்’ என அவர் கூறுகிறார். அவர்கள் நகைகளை அணிவதைத் தவிர்ப்பதாகவும் இருட்டிவிட்டால் தனித்து செல்வதைத் தவிர்ப்பதாகவும் கூறுகிறார். நாங்கள் அக்கறையாகவே, கூட்டமாகச் செல்கிறோம். அவர் கூறுவதாவது;
நாங்கள் இந்த சம்பளத்தைக் கிராமங்களிற் பெறமுடியாது. எனவேதான் நகரத்திற்கு வருகிறோம்.
ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல டசின்கணக்கில் உள்ளன. இவை பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ளன. அங்குள்ள நகரவாசிகள் வலயத்தைச் சூழ தங்குமிடங்களை உருவாக்கியுள்ளனர்.
இவை வசதிகள் குறைந்தவை. இவை தூர இடங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
பல இடங்களில் பெண்கள் தமது தேவைகளுக்கான நீரைக் கிணற்றிலிருந்து எடுக்கின்றனர். தங்குமிட உரிமையாளர் பைப் நீரைப் பெறுகிறார். இவர்களது தங்குமிடங்கள் பலவற்றிற்கு யன்னல்கள் இல்லை. சில தங்குமிடங்கள் ஆண்தொழிலாளர்களை மாத்திரம் சேர்க்கின்றனர். இது சிலநேரங்களில் நன்மையையும், சில வேளைகளிற் பிரச்சினைகளையும் உருவாக்கும்.
“”சிலவேளைகளில் ஒரு ஆணின் சமூகம் எங்களுக்கு வெளியாளிடமிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால், சிலவேளைகளில் பாலியல் ரீதியான பிரச்சினையும் உருவாகும். தனிமை, நாங்கள் ஒரே கழிப்பறையை உபயோகிப்பதால் பிரச்சினை உருவாகிறது என்கிறார் ரமணி.’
ஆறு வருடங்களுக்கு முன்னர் 800 ஆக இருந்த ஆடைத் தொழிற்சாலைகள் 200 ஆகக் குறைவடைந்துவிட்டது. ஸ்ரீலங்கா ரெக்ஸ்ரைல் கோட்டா முறையில் நன்மை பெற்றகாலம் அதுவாகும்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 350,000 ஆக இருந்த ஆடைத் தொழிலாளர்கள் 250,000 ஆகக் குறைவடைந்துள்ளனர். இன்று உற்பத்தியாளர்கள் ஒரு தொழிலுடன் மாத்திரம் அமையாது பல திறமைகளைப் பெறக்கூடிய பயிற்சிகளை அளிக்கிறார்கள் அதே சம்பளத்தில்.
தொழிற்சங்கத் தலைவர் மார்க்குள் கூறுவதாவது;
இப்பெண் பிள்ளைகள் மேலதிக வேலை, ஏனைய கொடுப்பனவுகள் உட்பட ரூபா 10,000 மாதமொன்றுக்குப் பெறுகின்றனர். இவர்களிடமிருந்து வேலை வாங்கப்படுவதனால் இதிலும் கூடிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
அவர் கூறினார்;
“”வெளிநாட்டு வர்த்தகர்கள் ஒழுக்கக் கோவை, வசதியான வேலைத்தலம், சமூக பொறுப்புணர்வு ஆகியவை பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், எமது பொருட்களுக்கு அதிகளவு பணம் கொடுக்க விரும்பவில்லை’.
2009 ஆம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறை இன்னும் சுருங்கும் நிலையுண்டு. ஏனெனில், பொருளாதார நெருக்கடியில் தப்பிப்பிழைப்பதற்காக பல தொழிற்சாலைகள் ஒன்றிணைகின்றன.
“”இந்தத் தொழிலாளர்களுக்கு மதிப்புள்ள வேலை நிலைமையில்லை. அண்மையில் அரசாங்கம் தங்குமிட உரிமையாளர்களுக்கு வேலையாட்களின் தங்குமிடங்களை மேல்நிலைப்படுத்திக் கடன்களை வழங்கியுள்ளது. ஆனால், சில உரிமையாளர்கள் தமது வீடுகளைத் திருத்தவே அப்பணத்தை உபயோகித்துள்ளனர்’ என மாக்குஸ் கூறினார்.
மேலும், அரசாங்கம் ஆடைத் தொழிலாளர்கள் தங்குமிட வசதிகள் அமைக்கத் தொழிலதிபர்களுக்கு இலவசமாக நிலங்களை அளித்தது. அது நீண்டகாலமாக ஆராயப்பட்டுவந்த விடயமாகும்.
ஆடைத்தொழிலதிபர்கள் தாங்கள் தொழிலாளர்களது வேளைத்தலங்களை முன்னேற்றமடையச் செய்துள்ளதாகவும், இலவச உணவு, மருத்துவ உதவி, கழிப்பறை வசதிகள் அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், மாக்கஸின் பிரகாரம் அரசாங்கம் சுதந்திர வர்த்தக வலயத்தின் வெளியில் என்ன நடைபெறுகிறது என்பதைப் பார்ப்பதில்லை. ஆனால், முதலீட்டாளர்களுக்கு மலிவான தொழிலாளர்களையும், வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. “”அரசியல்வாதிகளும் லாயக்கற்றவர்கள். இப்பெண்கள் பல பகுதிகளிலிருந்தும் வருவதால், வாக்குகள் நிலையிலும் பயன்பெறமுடியாது. இவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு உதவாதவர்கள்’.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் இலங்கையின் பிரதான வாடிக்கையாளர்கள். இத்தொழிற்துறை சலுகை முறை நீட்டிக்கப்படாதமையினால் கலவரமடைந்துள்ளது.
ஜாஸ் கூறுவதாவது;
உற்பத்திச் செலவு அண்மைக்காலத்தில் வெகுவாக உயர்ந்துள்ளது. ஆனால், கொள்வனவு செய்வோர் கொடுக்கும் பணம் உயரவில்லை. அவர்கள் இன்னும் அதிகளவு கொடுத்தால், மற்றவர்களுடன் இதனைப் பகிரமுடியும். இந்த நிலையில் நாம் கலவரமடைகிறோம்.
ரமணி வேலைக்குச் சேரும்போது வயது 16. நான் இளவயதினராதலால் இன்னும் நியமனக் கடிதம் தரவில்லை. அவர் இன்று 20. திருமணம் செய்து ஒருநாள் கிராமத்திற்குத் திரும்பவிருப்பதாக நம்புகிறார். எப்போது அது நடைபெறும் என்பது எனக்குத் தெரியாது என்கிறார் ரமணி.
ஐ.பி.எஸ்.
Thanks:Thinakkural.