இலங்கை சர்வாதிகாரியும் பேரினவாதியுமான மகிந்த ராஜபக்ச இலங்கையில் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்களத்தில் மட்டுமே பாடலாம் என உத்தரவிட்டுள்ளார். இதுவையில் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் பாடப்பட்டு வந்த தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்ற மகிந்த ராஜபக்ச முன் மொழின்மொழிவை பின்னதாக அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. வட கிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழ்ல் பாடப்படும் தேசிய கீதம் இனிமேல் நடைமுறையில் இருக்காது.
மகிந்த பிரித்தானியா சென்று திரும்பிய பின் கடந்த புதனன்று இரவு அமைச்சரவையில் இந்த முன்மொழிவை முன்வைத்தார். விமல் வீரவன்ச இந்த முடிவை ஆதரிக்க, மிக நீண்ட விவாதத்தின் பின்னர் இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் வடக்ல்லில் சிரிமாவோ பண்டாரநாயக்க ஒரு நிகழ்வை விட்டு வெளியேறினார் என்று மகிந்த சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டின் அனைத்து அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அதிபர் வெளிப்படையாகவே இனவாதத்தைப் பேசுகின்ற நிகழ்வு இலங்கை போன்ற நாடுகளில் இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது.
சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த சிங்கள மயமாக்கல், திட்டமிட்ட இனப்படுகொலை ஆகிய இலங்கை அரசின் நிகழ்சி நிரலின் மிகப்பிரதான சோவனிசச் சிந்தனையாக இது கருதப்படுகிறது.
இவ்வாறான வெளிப்படையான பேரினவாத முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரச் துணைக் குழுக்கள் போன்ற யாருமே இதுவரையில் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில்களீல் சமஸ்கிருதம்.பள்ளீவாசல்களீல் அரபிக்.தேவாலயங்களீல் ஆங்கிலம். தேசிய கீதம் சிங்களமாக இருக்கட்டும்.ஜெய்கிந்த் தமிழா இல்லயே.
மா புளிப்பது அப்பத்துக்கு நல்லது என்பது கிராமத்துப் பழமொழி. நாங்கள் எவ்வித போராட்டமும் செய்யாமல் ஒற்றுமையாக இருப்பதே இன்றைய தேவை. மகிந்த மகராசன் தானாகவே பேரினவாதச் செயற்பாடுகளின் உச்சத்தைத் தொட்டுத் தமிழர்களுக்கு உலகளாவிய அனுதாபத்தைத் தேடித்தருவார். சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென ஜனாதிபதி கூறியபோது அதனை எதிர்த்த ராஜிதவுக்கும் வாசுதேவ நாணயக்காரவுக்கும் தமிழர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழ் அமைச்சர்கள் வாய்மூடி மெளனிகளாக வாளாவிருந்தபோது வாய்திறந்து எதிர்ப்பைக் காட்டியவர்கள் அவர்கள். இதனை எதிர்த்த ஜே.வி.பி.க்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
அதனால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது!என்ன,வட,கிழக்கிலுள்ள பாடசாலைகள் காரியாலயங்களில் பதிவு செய்து ஒலி பரப்பப் போகிறார்கள்!நல்லது தானே?தேசிய கீதம் தமிழ் மக்களுக்கானதல்ல என்று மேதகு?!ஜனாதிபதி அவர்களே முடிவு செய்ததற்கு அப்புறம் யாராவது தேசிய கீதம் பாடச் சொல்ல முடியுமா?அப்படிச் சொன்னால் அதுவும் கூட ஒருவகைத் திணிப்பு,உரிமை மீறலுக்குள் அடங்குமே?அமேரிக்கா வெளிப்படையாக மீண்டுமொரு முறை அழுத்தி சொல்லியிருப்பதை அவதானிக்க வேண்டும்,///தொடர்ந்தும் கண்காணித்து வருகிறோம்///வயிற்றில் புளி கரைக்கும்,இப்போது!
அப்பே, அப்பே, ரட்ட சிங்கலென் தமாய் இத்தின் ஒக்கம. வென காட்டாத் இட நகெ.
தேசிய கீதத்தின் மொழி?
மகிந்த ராஜபக்ஸ
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினா
நண்பரே
மகிந்தவுக்கு வக்காலத்து வாங்குவதற்கும் ஒரு அளவு இருக்கின்றது. அவரால் ஒரு முன்மொழிபு கொண்டுவரப்பட்டால் அது அவரின் சிந்தனையில் உதித்ததுதான் என்பதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். தமிழுக்கும் தேசிய அந்தஸ்து உள்ளதென உலகெங்கும் கூறும் மகிந்த இலங்கையின் ஜனாதிபதியே தவிர சிங்களவர்களின் ஜனாதிபதியல்ல. உலகியல் தெரியாத குழந்தையுமல்ல. தமிழும் தேசியமொழியானால் ஏன் தேசியகீதத்தைத் தமிழில் பாடக்கூடாது?
தீர்மானம் நிறைவேறியதா இல்லையா என்பதல்ல கேள்வி சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டுமெனவும் அதற்கு உதாரணமாக சிறிமாவின் வெளிநடப்புப் பற்றிக் கூறப்பட்டதுமே அவரது மனநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றது. நித்திரை கொள்பவரை எழுப்பலாம். ஆனால் நித்திரை கொள்வதுபோல் நடிப்பவரை எழுப்ப முடியாது. விடுதலைப் புலிகளை அழித்ததுக்காகச் சிலதமிழர்களால் மகிந்த பாராட்டப்படுகின்றார். ஆனால் தமிழரை தமிழை அழிப்பதற்காகவும் சிலதமிழர்களால் மகிந்த பாராட்டப்படுவதனை அல்லது அவரது கெளரவத்தைப் பாதுகாக்க முற்படும் செ யல்களை இப்போதுதான் பார்கின்றேன். வாழ்த்துக்கள்
தனது தேசத்தின் தேசியகீதத்தை இன்னொரு தேசக்காரன் அவனது மொழியில் பாட யாருமே அன்னுமதிக்கமாட்டார்கள்தானே?
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட முடியும் – அரசாங்கம்
ஜ திங்கட்கிழமைஇ 13 டிசெம்பர் 2010இ 02:12.54 Pஆ புஆவு +05:30 ஸ
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிகழ்வுகள் மற்றும் விழாக்களின் போது தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும் என அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் சரியான முறையில் பாடப்பட வேண்டும் என்பது தொடர்பில் மட்டுமே அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என தெரிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஇ சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதத்தை பாடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் ஆதரவு வழங்கியதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடபட்டிருந்தன.
தமிழக மாநிலத்தின் முதலமைச்சர் மு.கருணாநிதிஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பல கட்சிகள் உட்பல பலரும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
பல்வேறு தரப்பினராலும் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தேசிய கீதத்தை தமிழ் பாட முடியாது என்ற அராசங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் எற்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
என்ன நடக்கிநது?
எங்கே டக்லசு? என்ன நடக்குது?
அந்த —ளி கீதத்தை எந்த மொழியில் பாடினால் எமக்கென்ன.
ஆக அவா்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து செல்கின்றார்கள் என்பதை இட்டு நாம் மகிழ்ச்சி அடைவதை விட்டு கதறி அழவேண்டியதில்லை.
குமார் கோயில் விளக்கு மாதிரி சரியாகவே பெசுவார்.
புரியவில்லை தமிழ்மாறா????
கோயில் விளக்கு அழகானது அது போல தங்கள் கருத்துக்கள் தெளீவாக இருக்கிறது.