உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் முல்யானி இந்திராவதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து அவர் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை குறைந்த வருமானம்- Low income- ஈட்டும் நாடுகளின் வரிசையிலிருந்து மத்திய தர வருமானம் -middle income -ஈட்டும் நாடாக முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக மேம்பாடு மற்றும் சமாதானம் ஆகியனவற்றை மேற்கொள்வதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் வருமானச் சுட்டி என்பது அதன் கடன்வழங்கும் வசதிக்கு ஏற்றவாறு தகவமைக்கப்படுகிறது. மிகக் கோரமான பல்தேசியச் சுரண்டலுக்கு உள்ளகும் நாடுகளை மத்திய வருமான நாடுகளாக உலகவங்கி தரப்படுத்தியுள்ளதைக் காணலாம்.வறிய நாடுகளின் அவலத்தில் பணம் சுரண்டும் உலக வங்கியிடம் எதை எதிர்பார்க்க முடியும்? இன்றைய உலகத்தின் மிகப்பெரிய கந்துவட்டி நிறுவனம் உலக வங்கியே.
வஞ்சகப்புகழ்ச்சி, பிச்சைகாரனைப்பார்த்து இவன் நல்ல திடகாத்திரமாய் இருக்கிறான் இன்னும் நூறுவருஷம் பிச்சை எடுப்பான் என்பதுபோல்லுள்ளது
They have gievn the leadership fo fthe World Bank to a South Korean. Look like the Resident Representative is Indonesain. We are Sri Lankan Tamils. Just another statistic.