03.09.2008.
இலங்கை தமிழர் பிரச் சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது. அரசி யல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடி யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தி மதுரை மேல-வடக்குமாசி வீதி சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. இதனை துவக்கி வைத்து ஆர்.நல்லகண்ணு பேசியதாவது: இலங்கை யில் பல ஆண்டுகளாக தமி ழர்கள் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள். இத னால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர் கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் அடையாள அட்டை வழங் கும் போது 13 ஆயிரம் தமி ழர்களை சந்தேகத்திற்குரி யவர்களாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் உண் ணாவிரதம் நடைபெறு கிறது. இப்போராட்டத்திற் கும் தேர்தலுக்கும். அர சியலுக்கும் சம்பந்தமில்லை.
இலங்கை அரசு தமிழர் கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசிற்கு இந்திய அரசு ராணுவரீதியான உத விகளை செய்யக்கூடாது. ஆனால், இலங்கை ராணு வத்திற்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்ச னைக்கு தீர்வு காணவலி யுறுத்தி தமிழக சட்டமன் றத்தில் 2008 ஆம் ஆண்டு தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. இன்னும் அந்த தீர் மானத்தை செயல்படுத்த வில்லை. மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக, இந்த தீர்மானத்தை நிறை வேற்ற வலியுறுத்த வேண் டும் என்று அவர் கூறினார்.