இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் கேலிக் கூத்து.

மெலொக் பிரௌனின் பிரித்தானியாவின் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்திற்கான பிரதி வெளியுறவு அமைச்சர் பிரபு அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதுரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் இதனால் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிக்கை விடுத்திருந்தது. ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை என பிரித்தானிய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு இராஜதந்திரிகள் சந்திப்புக்களை மேற்கொள்ளும் வேளையில் குறித்த இருநாடுகளும் இணைந்தே அறிக்கை வெளியிடுவது வழமையானதென பிரித்தானிய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இலங்கை ஜனாதிபதி செயலகம் தன்னிச்சையாக இவ்வாறான ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பது மிகவும் வெறுக்கத் தக்கதோர் செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் மிலொக் பிறவுண் பிரபு தனது அதிருப்தியை ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது

One thought on “இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் கேலிக் கூத்து.”

  1. பிள்ளையர் பிடிக்க குரங்கான கதை நினைவுக்கு வருது. எந்த இராசதந்திர மரபும், பண்பும் தெரியாத காட்டுமிராண்டி இனத்தின் சனாதிபதியும் அவரது அரசும் என்பது இப்போது என்றலும் அந்த வெள்ளைகார துறைக்கு புரியுமா?

Comments are closed.