Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
01/25/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
31
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை.

2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.  2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டதாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 30 ஆண்டுகாலம் பல்வேறு படுகொலைகள் சிங்களப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டன.

2005 ஆம் ஆண்டு தேர்தலிலின் வெற்றிக்களிப்பில் மகிந்த
2005 ஆம் ஆண்டு தேர்தலிலின் வெற்றிக்களிப்பில் மகிந்த

2004 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் பெருமளவில் சிங்களக் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ராஜபக்ச அரசின் நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைத் தோற்றுவித்தது. இதனால் கொழும்பிலும் மேலும் பல சிங்களப் பிரதேசங்களிலும் நடைபெற்ற சில தாக்குதல்களை இலங்கை அரசே திட்டமிட்டு நடத்தியது. கொழும்பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் வேலைக்குச் செல்லும் ஒருவர் வீடு திரும்புவாரா என்பதே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் அளவிற்கு குண்டுத் தாக்குதல் தொடர்பான அச்சம் பரவிப் படர்ந்திருந்தது.

இதனால் வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு, புலி அழிப்பு என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ராஜபக்ச குடும்பம் மைத்திரிபால சிரிசேன, ரனில், ஜேவிபி , இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சி(முன்னைய ஜே.வி.பி இன் உள்ளணி) போன்ற அனைத்துகட்சிகளதும் ஆதரவோடு நடத்திய இனப்படுகொலை ராஜபக்சவை சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாக்கியது.

ஆரம்பத்திலிருந்தே இந்திய அரசாலும், ஏகாதிபத்திய நாடுகளாலும் தொடர்ச்சியாகக் கையாளப்பட்ட விடுதலைப் போராட்டம் வட-கிழக்குத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் வகையிலேயே கட்டமைக்கபட்டிருந்தது. தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தேசியக் கூச்சலிடும் விதேசிகளும் இத் தனிமைப்படுத்தலில் கணிசமான பங்கு வகித்தனர். இவர்கள் அனைவரும் ஏகதிபத்தியங்களதும் இந்திய அரசினதும் நிகழ்ச்சி நிரலின் அடிபடையிலேயே செயற்பட்டனர்.

இவை சிங்கள மக்களையும், முஸ்லீம் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் போராட்டத்திலிருந்து முழுமையாக அன்னியப்படுத்திற்று.

வன்னி இன அழிப்பு முடிந்ததும் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவைக் கதாநாயகனாக்குவதற்கு இவை அனைத்தும் பெரும் பாத்திரத்தை வகித்தன,

NYT2009042609180059Cபோர் வெற்றியை மட்டும் வைத்துக்கொண்டே அரசியல் நடத்திய மகிந்த ராஜபக்ச முழுமையான பாசிச சர்வாதிகார அரசை நிறுவிக்கொண்டார். புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் பேசப்பட்ட இனவாதத்தையே தேசிய விடுதலைப் போராட்டம் என தமிழ் மக்களைப் போன்றே சிங்கள மக்களும் நம்பவைக்கப்பட்டனர். இது ராஜபக்சவின் பலத்தை மேலும் வலுப்படுத்தியது.மீண்டும் 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு இவை பெரும் பங்காற்றின.

மகிந்த ஜனாதிபதியானதும் ராஜபக்சவின் மீதான போர்க்குற்றங்களைக் காட்டி மிரட்டியே மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும், இந்தியாவும் இலங்கையை சூறையாட ஆரம்பித்தன. இலங்கையின் இராணுவச் செலவின் அதிகரிப்பும், ராஜபக்ச குடும்பத்தின் கொள்ளையும். ஏகாதிபத்திய நாடுகளின் சூறையாடலும் இலங்கையின் சாமனிய மனிதனை இதுவரை கண்டிராத வறுமையின் பிடிக்குள் சிக்கவைத்தது.

சிங்கள மக்கள் தமது வாழ்வாதரத்திற்காக நடத்திய போராட்டங்கள் மீது மிருகத்தனமான இராணுவ ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மூன்று தடவைகள் அமைதிப் பேரணிகள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நட்தப்பட்டது. அன்றாட நுகர் பொருட்களின் விலை பலமடங்காக அதிகரித்தன. சிங்களக் கிராமங்களில் தற்கொலை வீதம் வரலாற்றில் காணமுடியாத அளவிற்கு அதிகரித்தது. போரின் போது உருவாகியிருந்த இராணுவப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, ராஜபக்ச குடும்பத்தின் சூறையாடல் போன்றன இலங்கையின் வறிய மக்களை கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றது. இலங்கை என்ற சிறிய நாட்டில் ஒரு நாளைக்கு 11 பேர் வறுமையால் தற்கொலைச் செய்துகொள்கிறார்கள்.

Companies-own-The-Worldஅபிவிருத்தி என்ற பேரில் நடத்தப்பட்ட பல்தேசிய நிறுவனங்களின் பகற்கொள்ளையில் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கபட்டது. இவ்வேளையில் தான் மக்கள் ராஜபக்சவின் உண்மையான முகத்தைக் கண்டுகொண்டனர். தமிழ்ப் பேசும் மக்களின் வலியை சிங்கள மக்களின் ஒரு பகுதி உணர ஆரம்பித்தது. இதனை உணர்ந்து கொண்ட ராஜபக்ச அரசு முஸ்லீம்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் திசைதிருப்ப முயன்று தோல்வியடைந்தது.

ஊவா மகாணத் தேர்தலின் வீழ்ச்சி ராஜபக்ச அரசை அச்சத்திற்கு உள்ளாக்கியது. இழந்த செல்வாக்கை மீட்பதற்கு ராஜபக்சவிற்கு வேறு வேலைத்திட்டம் அற்றுப்போன நிலையில் தேர்தலுக்கான திகதி அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 8ம் திகதி 2015 இல் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் சுருக்கமான பின்புலம் இதுவே.

ராஜபக்ச ஜனாதிபதியனதும் அவரின் போர்க்குற்றங்களைக் காரணம்காட்டியே மேற்கு ஏகாதிபத்தியங்களும், இந்தியாவும், சீனாவும் தமது தங்குதடையின்றிய தலையீட்டை ஆரம்பித்தன. கடந்த ஐந்துவருட ஆட்சிக்காலத்தில் இலங்கையின் எல்லா முனைகளிலும் மேற்கு ஏகாதிபத்தியங்களதும் அவர்களின் இலங்கைத் தரகுகளதும் ஆளணிகளும் அடியட்களும் ராஜபக்சவின் ஆசியுடன் நிறுத்தப்பட்டன.

மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கு ராஜபக்சவின் சேவை இத்தோடு தேவையற்றதாகப் போனது. தனக்குத் தேவையான அளவிற்கு ராஜபக்சவைப் பயன்படுத்திக்கொண்ட ஏகாதிபத்திய அரசுகளும், பல்தேசிய வியாபார நிறுவனங்களும், இந்தியாவும், தேவை முடிந்ததும் புதிய ஒருவரை நியமிக்க தீர்மானித்தன.
இனக்கொலை, பல்தேசியச் சுரண்டல் ஆகியவற்றிற்கு ராஜபக்ச ஏற்படுத்திய வெளியை நிர்வகிப்பதற்கு மேற்கு நாடுகளுக்கும் உள்ளூர் தரகர்களுக்கும் சிக்கல்களற்ற நிர்வாகிகள் தேவைப்பட்டனர். அதற்கான தெரிவே மைத்திரிபால சிரிசேன.

மேற்கு நாடுகளின் கணிப்பின் அடிப்படையில், ராஜபக்சவின் இருப்பு,

1. வட-கிழக்கில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தும்.

2. நீண்டகால ஆட்சியென்பது சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் போரட்டங்களையும் தோற்றுவிக்கும்.

3. ராஜபக்சவால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட இராணுவ மற்றும் வர்த்தகப் பரப்பை சீனாவின் தலையீடின்றிப் பயன்படுத்தலுக்கு இடையூறாகும்.

ராஜபக்ச வெளியேற்றப்பட்டல் மேற்கு நாடுகளுக்கு மேலும் சில பயன்கள் உண்டு:

1. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அமைப்புக்களுக்கு ராஜபக்சவைத் தூக்கிலிடுவது மட்டுமே அரசியல். ராஜபக்ச அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டல் புலம்பெயர் அமைப்புக்களுக்கு நினைவஞ்சலிகளை நடத்துவதைத் தவிர வேறு அரசியல் கிடையாது. அதன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் வாழும் போராட்ட சக்திகளைத் தனிமைப்படுத்தி அழிப்பது இலகுபடுத்தப்படும்.

2. ராஜபக்சவை மையமாக வைத்து புலம்பெயர் நாடுகளில் ஏகதிபத்திய எதிர்ப்புணர்வு தமிழர்கள் மத்தியில் வளர்ந்து வருகின்றது. இதனை ஆபத்தானதாகக் கருதும் மேற்கு அதிகாரவர்க்கங்கள் ராஜபக்ச நீக்கப்படுவதை விரும்புகின்றன.

3. புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளும் புலிகளின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் இலங்கையில் முதலிடுவதற்கு தயக்கம் காட்டுவதற்கு ரஜபக்சவின் இருப்பே பிரதன காரணம். ஏகாதிபத்தியங்களின் உளவுப்படைகள் போன்று செயற்படும் புலம்பெயர் வியாபாரிகள் தடையின்றி இலங்கையில் முதலிடுவதற்கு ராஜபக்சவின் அரசியல் நீக்கம் வசதியேற்படுத்தும்.

இதனல் ராஜபக்சவின் ஏகாதிபத்திய அடியாள் என்ற பணியத் தொடர்வதற்கு புதிய முகம் ஒன்று தேவைப்பட்டது. அதுவே மைத்திரிபால சிரிசேன.

ஆக, ராஜபக்ச ஏற்படுத்திய சுரண்டல் அமைப்பையும், இனச்சுத்திகரிப்பையும் தொடர்வதற்கு மைத்திரிபால சிரிசேன ஏகதிபத்திய அரசுகளல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri-Lanka-Commonwealthபிரித்தானியக் காலனி ஆதிக்கத்தின் தொன்மையை இரைமீட்கும் பொது நலவாய நாடுகளின் 23 வது உச்சி மாநாடு இலங்கையில் நடைபெற்ற காலப்பகுதியிலேயே இலங்கையில் ராஜபக்சவிற்குப் பதிலாக புதியவரை அமர்த்துவதற்கான முனைப்புக்கள் ஆரம்பமாகிவிட்டன எனலாம். தெற்காசியாவிலேயெ இலங்கையின் சிறப்பான இயல்பாக விளங்கிய இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் ஐ.எம்.எப் இன் நிதிக்கொடுப்பனவு ஊடாக போருக்குப் பின்னய காலத்தில் அழிக்கப்பட்டது.

உலக நாணய நிதியம் வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புதல் வழங்கியிருந்த கடன் தொகைகளை 2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது. ராஜபக்ச அரசிற்கு நிபந்தனைகளை விதித்தது. ரூபாயின் மதிப்பைக் குறைக்குமாறும், அரச செலவினங்களை குறைக்குமாறும் வற்புறுத்தியது. 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இரண்டு கடன் தொகைகளையும் தற்காலிகமாக நிறுத்தும் முன்பே ராஜபக்ச அரசு கல்வியையும் மருத்துவத்தையும் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது. ஐ.எம்.எப் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தனியார் மயமாக்கலை விரைவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டது.

ஐ.எம்.எப் இனதும் மேற்கினதும் கொள்ளைக்கு ராஜபக்ச உட்பட யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ராஜபக்ச அரசையும் அதன் எதிரணையையு மேற்கு அரசுகளே வழிநடத்தின. ராஜபக்சவை மேற்கு ஏகாதிபத்தியங்களோடு இணைந்து தூக்கில் போடுவோம் என்று புலம்பெயர் தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைவரும் கூச்சலிட்டுக்கொண்ருக்கும் போதே இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நீண்டகால அடிப்படை உரிமைகள் உருவி எடுக்கப்பட்டன.

பிரித்தானியாவில் குடிகொண்டிருக்கும் ஜே.சி.பி, லைக்கா போன்ற பல்வேறு பல்தேசிய நிறுவனங்களின் நிதி வழங்கலில் கோலாகலமாக நடைபெற்ற பொது நலவாய மாநாட்டின் போது கல்வியையும் மருத்துவத்தையும் தனியார்மயப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரித்தானியாவின் பல்கலைக்கழகங்களில் ஒன்றான லங்கஷ்யர் யூனிவர்சிட்டி, 180 ஏக்கரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் அப்போதைய பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹக் இனால் நாட்டப்பட்டது. என்ற goldshield-pharmaceuticals மருத்துவ நிறுவனம் இலங்கையின் மருத்துவத்தில் புதிய ஒப்பந்ததின் ஊடாகப் புகுந்துகொணது.

இலங்கையின் மாணர்வர்கள் மத்தியில் எழுசிகள் ஏற்படாதவகையில் வில்லியம் ஹக் தன்னார்வ நிறுவனங்களை ஆரம்பித்துவைத்தார்.

வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னன காலம் முழுவதும் ஏகாதிபதியங்களின் நேரடித் தலையீட்டிற்கான அனைத்து கதவுகளும் தட்டப்படுவதற்கு முன்பே இலங்கை அரசால் திறக்கப்பட்டன.

இனிமேல் அதனை நிர்வகிப்பதற்குரிய அரசும் தேவையானல் மக்களி ஒடுக்கி அழிக்கும் அரசுமே பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன.

தேவாவுடன் ரனில்
தேவாவுடன் ரனில்

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்காக இலங்கைக்குச் சென்றிருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக், கொன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரத் தரகர் நிர்ஜ் தேவா ஆகியோர் உட்பட மேலும் சில பிரமுகர்களின் பிரசன்னத்தோடு கொழும்பில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டவர்களில் பிரதானமானவர் ரனில் விக்ரமசிங்க. ராஜபக்சவின் எதிரணித் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரனில் மேற்கின் நேரடிச் செல்வாக்கிற்கு உட்பட்டவர். வில்லியம் ஹக்கின் முதற்பெயரை விழித்து அழைக்கும் அளவிற்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கமானவர்.

இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் மற்றொரு பிரமுகரே நிர்ஜ் தேவா. நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக Distilleries Co. of Sri Lanka Ltd., Aitken Spence Plc, The Kingsbury Plc, Aitken Spence Hotel Holdings Plc (Sierra Leone), MTD Walkers Plc, Melstacorp Ltd., Aitken Spence Hotel Holdings Plc போன்ற நிறுவனங்களில் தேவா நியமிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் ஆரம்பித்து வடக்கின் குடி நீரை நச்சாக்கும் எம்.ரி.டி வோக்கர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் நிர்ஜ் தேவ என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ஜ் தேவா மகிந்தவிற்கு எதிரான அணியின் சார்பில் இன்று செயற்படுகிறார்.

இலங்கையிலுள்ள தரகு முதலாளிகளின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் தம்மிக பெரேரா என்ற வர்த்தகர். ஹேலிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், இலங்கையில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராடிய வெலிவேரிய மக்கள் மீது அரசாங்கப் படைகளை அனுப்பிக் கொலைசெய்வதற்குக் காரணமாக அமைத்தவர் தம்மிக்க பெரேராவே. போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க இலங்கையின் முதல்தர பணக்காரர்.

மேற்கின் முதல்தர தரகு முதலாளியான தம்மிக்க இப்போது யூ.என்.பி இன் ஆதரவாளர். 150 மில்லியன் ரூபாய்களை யூன்.என்.பி தேர்தல் நிதியாக வழங்கியதாக அணியினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளில் உச்சி மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கைகளின் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சியின் உச்சிமாநாட்டிற்கு இலங்கையிலிருந்து ரனில் அழைக்கப்பட்டிருந்தார்.

பிரித்தானியாவிற்குச் சென்ற ரனில் நிர்ஜ் தேவா மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகளின் பிரதானிகளுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபடுகிறார். ரனில் இலங்கைக்குச் சென்றதும் ராஜபக்சவின் தேர்தல் தொடர்பான வதந்திகள் பரவ ஆரம்பிக்கின்றன.

இதே காலப்பகுதியில் கொழும்பின் பாதுகாப்பு இலங்கையின் மத்திய புலனாய்வும் பிரிவிடமிருந்து இராணுவத்தின் கைகளிற்கு மாற்றப்படுகின்றது. இதற்கான ஆலோசனை ராஜபக்ச அரசிற்கு உள்ளிருந்தே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ராஜபக்ச எதிரணியின் அசைவுகள் இலகுபடுத்தப்படுகின்றன.

புலனாய்வுப் பிரிவு அகற்றப்பட்ட நிலையில் மைத்திரிபால மற்றும் ரனில் போன்றவர்களின் அசைவுகள் கண்காணிக்கப்பவில்லை. இதனால் யாருமே எதிர்பார்க்காமல் திட்டமிட்டு எதிரணி உருவாக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து ராஜபக்ச இன்னும் விடுபட்டாகவில்லை.

டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் மகிந்த ரஜபக்சவின் அரசில் சுகாதார அமைச்சராகப் பதவிவகித்த மைத்திரிபால சிரிசேன பதவி விலகி எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகிறார்.

ராஜித சேனாரத்ன
ராஜித சேனாரத்ன

மைத்திரியுடன் எதிர்க்கட்சிக்கு முதலில் தாவிய அமைச்சர் ராஜித சேனரத்ன என்ற மீன்பிடி அமைச்சர். மகிந்தவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய ராஜித மேற்கு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கான ராஜபக்சவின் அடியாளாகச் செயற்பட்டார்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பொது உறவு நிறுவனமான பெல் பொட்டிங்டரைக் கையாள்வதற்காக ராஜிதவே மகிந்தவால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் மேற்கு ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ராஜித எதிரணியின் முக்கிய உறுப்பினரானார்.

போரை நடத்திய மேற்கு அரசுகளே மனித உரிமை, போர்குற்றம் போன்ற அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தமது ஆளுமைக்கு உட்படுத்தின.

இலங்கையிலிருந்து மனித உரிமைவாதியாகச் செயபட்ட அரசியல் செல்வாக்குமிக்க ஜே.சி.வெலியமுன ஜேர்மனியிலிருந்து இயங்கும் ட்ரன்ஸ்பரன்சி இன்ட்ர்னஷனல் உட்பட பல உரிமை அமைப்புக்களின் முகவர். ராஜபக்ச ஆட்சியில் நீடிப்பதற்கு இதுவரை தனது மறைமுக ஆதரவை வழங்கிய வெலியமுன இப்போது அவரின் எதிரி. தேர்தலில் அரச வன்முறை தலைவிரித்தாடுவதாகவும் தேர்தல் நீதியாக நடைபெறாது என்றும் இப்போது கண்ணீர் வடிக்கிறார்.
இவ்வாறு ராஜபக்சவை இயக்கிய மேற்கின் நிறுவனங்களின் அத்தனை பிரதிநிதிகளும், அடியாட்களும் தரகர்களும் இன்று மத்திரிபால சிரிசேனவின் ஆதரவாளர்கள்.

இலங்கையின் தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மின்சாரம், கட்டுமானத் தொழில், விவசாயம், ஆடைத் தொழில் ஆகிய அனைத்துத் துறைகளும் மேற்கினதும் அதன் தரகர்களதும் நேரடிக் கட்டுப்பாட்டினும் உள்ளது. இத்தரகர்களில் பொதுவாக அனைவருமே முன்பு ராஜபக்சவின் ஆதரவாளர்கள். இப்போது மைத்திரியை ஜனாதிபதியாக்குவதன் பின்புலத்தில் செயற்படுகின்றனர்.
மேலும் ஆழமான பல்வேறு தரவுகளும் தகவல்களும் மேற்கு ஏகாதிபத்தியங்கள் மகிந்தவின் சேவையை நிறைவு செய்து மைத்திரியை நியமிக்க முற்படுகின்றன என உறுதிசெய்கின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சியில் அடிப்படை வாழ்வாதாரங்களைக்கூட இழந்து நிற்கும் மக்கள் மைத்திரிபால சிரிசேனவிற்கு வாக்களிக்கும் நிர்பந்தத்தை நோக்கி வலிந்து தள்ளப்பட்டுள்ளனர். ராஜபக்சவிற்கு எதிரான மக்களின் வாக்குகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு இலங்கை முழுவதும் மைத்திரிபாலவிற்கான ஆதரவு பெருகிவருகின்றது.

எது எவ்வாறாயினும் இத் தேர்தலில் யார் தோல்வியடைந்தாலும் வெற்றிபெறுவது ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசுமே.

இந்த நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்ற ஆய்வில் முன்னணி சக்திகளும் இடதுசாரிகள் என்று தம்மைக் கூறும் போலிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதெல்லாம் இடதுசாரிகள் அதனோடு தொற்றிக்கொள்ள, மக்கள் மத்தியிலான செயற்பாடுகளைத் தன்னார்வ நிறுவனங்களே மேற்கொள்ளும். திட்டமிடப்பட்ட இச்சமன்பாடுகள் சந்தைப்படுத்தலுக்கான அல்லது சுரண்டலுக்கான சூழலை உருவாக்குவதற்கான ஏகாதிபத்தியத் தந்திரோபாயமாகும்.

1. மகிந்தவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோருபவர்கள்:

douglasஇலங்கையில் தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் மத்தியிலிருந்து மகிந்த அரசிற்கு ஆதரவான வாக்குகளை எண்ணிக்கூடப் பார்க்கமுடியாது.  நகர்களும் நகர் சார்ந்த பகுதிகளும் மகிந்த அரசிற்கு எதிராகவே வாக்களிக்கும். மகிந்தவைப் போன்றே மத்தியதர விவசாயி என்ற விம்பத்தை வழங்கும் மைத்திரிபால சிரிசேனவிற்கு விவசாயிகள் மத்தியிலிருந்து கணிசமான வாகுக்களை எதிர்பார்க்கலாம். இந்தச் சூழலில் மைத்திரியின் வெற்றி வாய்ப்பு மகிந்தவை விட பலமடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் மகிந்தவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இனப்படுகொலைக்கும் பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் வாக்களிக்கக் கோருபவர்களே.

2. மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோருபவர்கள்:

விக்ரமபாகு
விக்ரமபாகு

அடிப்படையில் மகிந்தவின் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இனவழிப்பைத் தொடர்வதற்கும், இலங்கையில் ஏற்கனவே மகிந்தவால் உருவாக்கப்பட்டுள்ள நவகாலனித்துவ சுரண்டல் அமைப்பை நிர்வகிப்பதற்கும் ஏகபோக அரசுகளால் நியமிக்கப்பட்ட ஒருவரை ஆதரிப்பது என்பதே இதன் உள்ளர்த்தம். தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு மைத்திரிபாலவை ஆதரித்தால் அதன் கருத்தியல் புரிந்துகொள்ளக் கூடியதே. அதிகாரவர்க்க அரசியல் தவிர்ந்த வேறு எதையும் அறியாத வாக்குப் பொறுக்கிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வெறு எதுவும் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மக்களா பேரினவாதிகள என்ற தெரிவுகளுக்கு இடமில்லை. மைத்திரியா மகிந்தவா என்ற எல்லையை அவர்கள் தாண்டமுடியாது.

சாரிசாரியாக அழிக்கப்படும் மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகள் என அறிவித்துக்கொண்டு பேரினவாதி ஒருவருக்கு வாக்களிக்கக் கோரவேண்டிய நிலையில் அவலத்துள் வாழ்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். அதற்கான அவர்கள் கூறும் அபத்தமான நியாயங்கள் பேரினவாத அரசியலை நியாயப்படுத்துகிறது.

இதுவரைக்கும் தெகிவள பகுதியில் தமிழர்களின் வாக்குகளுக்காக தேசியவாதிகளின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட விக்கிரமபகு கருணரத்ன, இப்போது மைத்திரியுடன்! பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் விக்கிரமபாகு என்ற ட்ரொஸ்கிஸ்ட் ஒரே மேடையில் அமர்ந்து ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார். நாட்டின் ஒருபகுதிச் சிறுபான்மையினருக்கு ஜனநாயகத்தை மறுக்கும் மைத்திரிபால விக்கிரமபாகுவிற்கு ஜனநாயகவாதியகத் தெரிகிறார்.

3. தேர்தலைப் நிராகரிக்கக் கோருபவர்கள்:

கஜேந்திரகுமார்
கஜேந்திரகுமார்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே இக்கருத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் நியாயமாகத் தென்படும் இக்கருத்து மைத்திரிபாலவின் வாக்குப்பலத்தைச் சிதைக்கும் என்பதும் வெளிப்படையானது, மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டமும், தேர்தலுக்கு மாற்றான வழிமுறைகளையும் முன்மொழிந்தால் இக்கோரிக்கை வலுவானது மட்டுமல்ல தேவையானதுமாகும். எந்த மாற்றுத் திட்ட்மும் இன்றி மைத்திரிபாலவைப் பலவீனப்படுத்துங்கள் என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும்.

கஜேந்திரகுமாரிடம் சில முழக்கங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் உணர்ச்சிவசப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் இந்த வெற்று முழக்கங்கள் எந்தப் பயனும் அற்றவை. வன்னி அழிப்பு முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னரும் குறைந்தபட்டச வேலைத்திட்டத்தை முன்மொழிவதற்குக் கூட இக்கட்சிகள் முன்வரவில்லை. ஆக, தேர்தலைச் சுற்றியே இயங்கும் இவர்களின் அரசியல் வழிமுறை ஒடுக்கப்படும் தேசிய இனம் சார்ந்ததல்ல. தேர்தலை நிராகரிப்போம் இவர்கள் முன்வைக்கும் கருத்து மாற்றுத் திட்டங்களற்ற வெற்று முழக்கங்களே.

4. இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்பவர்கள்:

சிறீதுங்க விஜயசூரிய
சிறீதுங்க விஜயசூரிய

இவர்கள் இரண்டு வேறு வேட்பாளர்களை நிறுத்தியுள்ள்னர். முதலாவதாக, முன்னிலை சோசலிசக் கட்சி என்ற இனவாதக் கட்சி இதுவரையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்ததில்லை. ஆக, இக்கட்சியிடம் தேசிய இனங்கள் தொடர்பாகவோ அன்றி ஒடுக்கப்படும் சிங்கள மக்களை அணிதிரட்டுதல் தொடர்பாகவோ எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பது வெளிப்படை. பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குள் புதைந்து சிதைந்துபோன வாக்குப் பொறுக்கிகளின் இக்கட்சி சேடமிழுக்க ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. சுய நிர்ணைய உரிமையை என்ற அடிப்படை ஜனநாயகத்தை மறுக்கும் இக் கட்சி மக்களின் உரிமை குறித்துப் பேசுவது வேடிக்கையானது.

அடுத்த வேட்பாளர், சிறீதுங்க விஜயசூரிய. ட்ரொஸ்கியக் கட்சியான ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரான சிறீதுங்கவிற்கு ஜனாதிபதித் தேர்தல் அனுபவம் இது முதல் தடவையல்ல. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 35405 வாக்குக்களைப் பெற்று மூன்றாமிடத்திற்குச் சென்றவர்.

சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரும் சிறீதுங்க தமிழ்ப்பேசும் மக்கள் சார்ந்த ஒருபகுதியினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வார் என்பது வெளிப்படையானது. இத்தேர்தலில் புறக்கணிக்கத்தக்க மகிந்தவிற்கு எதிரான வாக்குகளில் ஒருபகுதி சிறிதுங்கவை நோக்கிச் செல்லும். வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதரவோடு, விக்கிரமபாகுவைப் போன்று ஒருசில ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள சிறீதுங்கவிற்கு ஆரம்பப் புள்ளியாக அமையும்.

2005 ஆம் ஆண்டில் மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் வெற்றிடமான நிலையில் வாக்குக்கேட்ட சிறீதுங்க 10 வருடங்களின் பின்பும் அதே நிலையில் காணப்படுகிறார். இனிமேலாவது வெகுஜன வேலைத்திட்டம் ஒன்றை  முன்வைப்பதும். அதனூடாகப் பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றை நிறுவிக்கொள்வதும் ஜனாதிபதித் தேர்தலை விட சிறீதுங்கவிற்கு முக்கியமானது.

சிறீதுங்கவின் முன்னாலுள்ள பணி சிங்கள் மக்களை அணிதிரட்டுவதும், சமூக மாற்றத்திற்காகவும் அதன் ஒரு பகுதியான சிறுபான்மைத் தேசிய இனங்களில் அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமைக்காக அவர்களைப் போராடப் பயிற்றுவிப்பதுமே. தேர்தல் வழிமுறைகளைக் கண்டுகொள்ளாது, மக்களை அணிதிரட்டிப் போராடினால் எதிர்வரும் 10 வருடங்களில் சிறீதுங்க தேர்தலில் வாக்குப் பொறுக்க வேண்டிய நிலை ஏற்படாது.

இத் தேர்தல் உணர்த்தும் மறைக்க முடியாத உண்மை என்னவென்றால் இலங்கையில் சிங்கள மக்களுக்கோ அன்றி தமிழ் மக்களுக்கோ அரசியல் தலைமைகள் கிடையாது என்பதே. மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் தேர்தல் ஜனநாயகத்திற்கு அப்பால் மக்களின் புதிய ஜனநாயகத்திற்கான குறைந்தபட்சத் திட்டத்தையாவது முன்வைக்க வேண்டிய தேவை எம்முன்னால் உள்ளது. இத்தேர்தலில் வாக்குக் கேட்கும் எந்தக் கட்சியிடமும் இக் குறைந்தபட்ச வேலைத் திட்டங்கள் இல்லை. வெற்று முழக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்குக் கேட்பதற்கான வெளியை தேர்தல் என்ற தலையங்கத்தில் பெருந்தேசியவாதக் கட்சிகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதானதும், உழைக்கும் மக்கள் மீதானதுமான யுத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்துவதே இன்று எம் முன்னாலுள்ள தேவை.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வெளியான குறிப்பிடத்தக்க கருத்துக்கள்:

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றியஉரை.
சனாதிபதி தேர்தலில் என்ன செய்திட வேண்டும்? : பழ றிச்சர்ட்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தர்ஷனின் ‘பிரதிபலிப்பு’  விரைவில் வெளியாகிறது

தர்ஷனின் 'பிரதிபலிப்பு' விரைவில் வெளியாகிறது

Comments 31

  1. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    ஸ்ரீதுங்க ஜெயசூரியா போன்றவர்களை முன்னிறுத்தி தமிழ் தரப்பு தமது கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இதற்கான அழுத்த குழுவாக அல்லது கருத்தூக்கியாக இனிஒரு செயல்பட்டிருக்கலாம். காலம் கடந்த பின் சபா நாவலன் இப்பதிவினை எழுதுவது எவ்விதத்தில் பயன் தரும்? நீங்கள் எழுதிய கட்டுரையில் நான் தவறுகளை காணவில்லை. இனியும் காலம் தாளவில்லை. சிறிதுங்க ஜெயசூரியாவின் தேர்தல் நிலைப் பாட்டுக்கு வலிமையை சேர்க்க முடியும். தேர்தலை புறக்கணிக்கக் கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயல் திட்டங்கள் அற்ற அமைப்பு, அவர்கள் குறைந்த பட்சம் தமிழ் மக்களின் கொரிக்ககைகளை முன்வைத்து தமிழர் தாயக பகுதியில் ஸ்ரீதுங்க ஜெயசூரியாவுக்கு ஆதரவு அளித்து இருக்க முடியும். இனியும் காலம் போகவில்லை செய்வார்களா?

    • lala says:
      10 years ago

      ஜனாதிபதி தேர்தலகளை பொறுத்தவரை தமிழ் மக்கள் தலைவர்களின் வாயிலிருந்து என்ன வருகீரது என்று பார்த்து வாக்களிப்பதில்லை .அது சம்பந்தனாக இருந்தாலும் சரி , கஜேந்திரகுமாராக இருந்தாலும் சரி , போலி இடதுசாரி தலைவர்களாக அதனைதூக்கி பிடிக்கும் தொண்டர்களாக இருந்தாலும் சரி , தமிழ் மக்கள் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதனை கண்டுகொள்வதுமில்லை , அவர்கள் சொன்னபடி வாக்களிப்பதுமில்லை..
      உதரணமாக 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எடுத்துக்கொள்ளலாம்.
      கூட்டணி தேர்தலை பகிஷ்கரித்தது ,ஜேவிபி , வாசுதேவா உட்பட பல இடது சாரிகளும்  ஜெயவர்த்தன , கொப்பேகடுவவோடு  போட்டியிட்டனர் . குமார் பொன்னம்பலமும் பல பரிமானங்களையும் ( !?? ) காட்டுவதற்காக போட்டியிட்டார்.
      தமிழ் மக்கள் பெருமளவில்  கொப்பேகடுவவிற்கும் , அடுத்தபடியாக குமாருக்கும் வாக்களித்தனர். 
      வாசுதேவா கூட  தென்னிலங்கையில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக தமிழ் பிரதேங்களில் வாக்குகள் பெற்றார் .
      எனவே தமிழ் மக்கள்  ஜனாதிபதி  தேர்தலில் வக்களிப்பதற்கு பெரும்  சட்ட மேதை தலைவர்களின் வாயை எதிர்பார்த்து  காத்திருக்கின்றனர் எனக்கூறுவது  கடந்த கால வரலாறு தெரியாதவர்களின் பிதற்றல்

  2. தமிழ் மூடன் says:
    10 years ago

    “இத் தேர்தலில் யார் தோல்வியடைந்தாலும் வெற்றிபெறுவது ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசுமே” 
    ஆனால் இறக்கப் போவது ………?
    இம்முறை இலங்கையில் அதிசயம் நடக்கப் போகின்றது
    தேர்தல் வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை உலக சாதனையாக இருக்கும் .

  3. ajeevan says:
    10 years ago

    சபா நாவலனின் கட்டுரை பல தகவல்களை சொல்கின்றன. மேற்குலக அழுத்தங்கள் அல்லது ஆதரவு இல்லாமல் பெரும்பாலும் தேர்தல்கள் நடந்ததில்லை. 

    இன்று இலங்கை மக்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனை – தமக்கு நடக்கும் அநீதியொன்றுக்காக படி ஏறி நீதி கேட்க எந்தவொரு இடமும் இல்லாமல் இருப்பதாகும். சட்டம் – ஒழுங்கு – பாதுகாப்பு – சிவில் நிர்வாகம் அனைத்தும் அதிபர் சொல்வதை செய்ய வேண்டியுள்ளது. அதிபர் மகிந்த நினைத்தால் ; எந்தவொரு தண்டனையையும் இல்லாமலும் செய்யலாம். தேவைப்பட்டால் எவருக்கும் எந்த தண்டனையும் வழங்கலாம். இது  ஒரு கொடிய நடைமுறை சிக்கல். மக்கள் அடிப்படையில் அடிமைகளாக வாழ்கிறார்கள். கிரிமினல்கள் கொடி கட்டிப் பறக்கவும் – அப்பாவிகள் குற்றவாளிகளாகவும் செய்யக் கூடிய அமைப்பொன்று அரசாளுகிறது. இது மாற வேண்டும். 

    அடுத்தது ஒரு குடும்பம் தான் நினைத்த அத்தனை வளங்களையும் சுரண்டிக் கொண்டிருக்கிறது. 
    எத்தனை அமைச்சர்கள் இருந்தாலும் ; பசிலால் நியமிக்கப்படும் ஆட்கள்தான் செயலாளர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் பெயருக்கு மட்டுமே. அனைத்து நிர்வாகமும் மகிந்த குடும்பத்தினரால்தான் செய்யப்படுகிறது. அப்படித்தான் ஆட்சி நடக்கிறது. 
    மகிந்தவால்  தான் விரும்பிய அனைத்தையும்  செய்ய வழி செய்கிறது. அதற்கான காரணம் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறை பெரும் தீங்காக இருப்பதுதான்  . இது முதலில் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும்.  அந்த மாற்றத்துக்காக மட்டுமல்ல 2 முறைக்கு மேல் அதிபராக முடியாது எனும் முறை  நீட்டி – ஒரு குடும்ப ஆட்சிக்காக ; அதாவது நாமல் ஒரு நிலையை எட்டும் வரை ; இருந்தே  ஆக வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதை தடுப்பதற்காகவாவது இத் தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இன்னொரு கடாபி ஆட்சியொன்று இலங்கையில் உதயமாகும்.  அதன் பின்  இனவாதம் நிற்காது. மகிந்த குடும்பத்தை தெய்வமாக வழி பட்டால் மட்டுமே சுவாசிக்கவே முடியும் எனும் நிலை உண்டாகும். அது எல்லா தர்கத்தையும் விட சிந்திக்க வேண்டிய தர்க்கமாகும்.

    • islamiyawalkkai says:
      10 years ago

      கடாபியின் பசுமை புரட்சி இஙுகு உருவாகுமாக இருந்தால் மகிந்த ஆட்சியில் இருப்பதில் தப்பில்லை எனநினைக்கின்ரென்… லிபியாவில் அனைவருக்கும் வீடு, திருமனதிர்கு பனதவி போன்ரநல்ல திட்டங்கழ் இருங்தன…

  4. Ithayachandran says:
    10 years ago

    தேர்தலில்,மலையகக் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி இக்கட்டுரை குறிப்பிடவில்லையே..

    • sivaram says:
      10 years ago

      சபா நாவலன் எவ்வளவு முற்போக்கு கதைத்தாலும் மலையகத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மறந்து தான் எதையும் எழுதுவது வழமையாகிவிட்டது. எல்லா யாழ்ப்பாணத்தவர்களுக்கும் பொதுவான குணம் தான் இது. நீங்கள் யாழ்ப்பாண ஆதிக்க மனநிலையிலிருந்து விடுபடும் வரை ஒரு இஞ்சி கூட முன்னேற முடியாது.

      • lala says:
        10 years ago

        எவ்வளவுதான் முற்போக்காக  பொதுவாக கதைத்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள சிலருக்கு  உள்ள தாழ்வு மனப்பானமை போகப்போவதில்லை . அவர்கள் இந்த தாழ்வு மனப்பானமை வியாதியிலிருந்து  மீளாதவரை அவர்களுக்கு விமோசனமில்லை ..

        • Ithayachandran says:
          10 years ago

          நீங்களாகவே கண்டு பிடித்த வியாதிக்கு நீங்கள்தான் மருந்து கண்டு பிடிக்க வேண்டும். விமோசனம் எல்லாம் ஆண்டவன் அருளுவதில்லை. உங்களுக்கும் கருணாவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை.

    • lala says:
      10 years ago

      மலையக கட்சிகளைப்பற்றி ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதானே .
      எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக்கட்சியில் , ஆட்சியில் இணைந்து பதவிகள் பெற்றுக்கொள்வது . இப்போது இதொக  ராஜபக்சவை ஆதரித்தாலும் , மைத்திரிபால  வென்று விட்டால் ஆறுமுகன் தொண்டமான் கூச்சநாச்சமில்லாமல் அடுத்தநாளே அந்த  அணிக்கு ஆதரவு தெரிவித்து பதவியும் பெற்றுக்கொள்வார் .
      இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே .
      இதை வேறு கட்டுரையில் அலச வேண்டுமா ?

  5. Kumar says:
    10 years ago

    வல்லரசுகளின் நலன்களிற்கேற்ப அல்லது பல்தேசிய கம்பனிகளின் நலன்களிற்கேற்ப ஜனநாயகம் என்ற போா்வையில் ஆட்சி மாற்றங்கள் நடப்பது இலங்கையில் மட்டுமல்ல இது ஏறக்குறய உலகம் பூராகவும் உள்ள சிறிய நாடுகளில் இதையே நடைமுறைப்படுத்துகின்றாா்கள் இந்த நிலை மாறுவதற்கு வேற்றுவழியொன்று அண்மையில் இருப்பதாக தொியவில்லை மக்கள் நலன்சாா்ந்த தலைவா்கள் உருவெடுத்தாலும் அவா்களை நமது நாடுகளில் இலகுவாக அளித்துவிடுவாா்கள் பொிய அளவிலான பணத்தொகையை இந்த விடயத்திற்காக செலவிடுவதும் பின்பு அதை சுரண்டலின்மூலம் நிரப்பிக்கொள்வதும் சாதாரணமாக நடக்கின்றது.மகிந்தராஜபக்சவின் அனுமதியுடனேயே மேற்குலகம் மைத்திாியைஅறிமுகப்படுத்தியதாக நான் நம்புகிறேன் அதாவது போா்க்குற்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டுமாயின் இவா் பதவியைவிட்டு விலகுவதே சிறந்ததாகும் அதன் பின்பு யாருமே போா்க்குற்றம்பற்றி பேசப்போவதில்லை.

  6. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    ஆம் உண்மையில் மைத்திரி வந்த பின் பின்பு யாருமே போா்க்குற்றம்பற்றி பேசப்போவதில்லை. ஆனால் மகிந்தாவின் அனுசரணை என்பது தவறு என நினைக்கிறேன், சிங்கள தேசத்தின் கொள்கை வகுப்பாளர்களே இலங்கையின் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் எத்தனிப்பில் இறங்குகின்றார்கள். பேரினவாத சிந்தனைகளை முன்னெடுத்து சிறுபான்மை இன அழிப்பை முன்னெடுக்கும் உத்தியில் அவர்களுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு.

    நாளைய மைத்திரியின் ஆட்ச்சியில் லலித் வீரதுங்காவும், பீரிசும், தானும், ரஜீவ வியசிங்காவும், மிலிந்த மிரகொடவும் இன்னும் பலரும் அணிவகுத்து நிற்பார்கள்.

    ஆனால் எம்மத்தியில் டக்லஸ், தவராசா, ஆனந்த சங்கரி, தொண்டமான், கருணா, பிள்ளையான், அருண் தம்பி முத்து, மற்றும் கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி என்பன, கூறு கூறாக நின்று கொக்கரிப்பார்கள், இதில் இஸ்லாமிய கட்சிகள் கூட சளைத்தவர்கள் அல்ல.

    இந்த தேசத்தின் இனஅழிப்பு முற்றுப் பெறாமல் தொடர்கதையாகவே இருக்கும். இன அழிப்புக்கு தடை போடா திராணியற்ற தமிழ் பேசும் சிறுபான்மை கட்சிகளும், அப்படி தடை போடும் எத்தனிப்புகளை உடைத்துவிடும் கன்றாவித்தனங்களை தவிர எம்மத்தியில் இப்போது வேறு வெளிச்சங்கள் எதுவும் தெரியவில்லை.

    • Alex Eravi says:
      10 years ago

      I ‘Like’ it…

    • Kumar says:
      10 years ago

      இலங்கை சாித்திரத்தில் மிகவும் பல் வாய்ந்த ஒரு ஜனாதிபதி ஒரு மன்னன் என்றே கூறக்கூடிய நிலையிலிருந்த  ராஜபக்ச யாருமே எதிா்பாா்க்காதவகையில் அவா் சகோதரா்களைத்தவிர அவரைச்சூழ்ந்திருந்த ஒரு பொிய கூட்டம் கலைந்ததென்றால் தனியே மக்களோ அல்லது அரசியல்வாதிகளோ அவா்மேல் நம்பிக்கையிழந்து நோ்மையான தலைவரை தேட புறப்பட்டுள்ளாா்கள் என்றால் இதைவிட நகைச்சுவை எது இருக்கமுடியும் ஆகவேதான் சந்தேகம் எழுவது சாதாரணமாகின்றது.
      என்னைப்பொறுத்தவரை போா்குற்றம் என்ற ஒன்றை வைத்து பேரம் பேசப்பட்டுள்ளது என்றே நம்புகிறேன்.

  7. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    லாலா அவரளுக்கு!

    லாலா அவர்களே சிறந்த சமூகவியலாளர்களை கொண்டு எமது சமூகத்தை ஆய்வு செய்தால் ஒப்பீட்டளவில் ஏனைய மாவட்டங்களைவிட அதிகூடிய தாழ்வு மனப்பான்மை யாழ் சமூகத்திடமே உண்டு. இதற்குநீண்டபாரம்பரியம்உண்டு. பெற்றோர்கள் மற்றும் மரபுவழி கல்வி பண்பாட்டு கலாச்சார அம்சங்கள் மூலமாக சிறுவயதிலேயே தாழ்வுச் சிக்கலை உண்டு பண்ணக்கூடிய முறையில் போட்டிகளை உண்டாக்கிவிடுவர் (அறிந்தும், அறியாமலும்) இதுவே பின்னாளில் அவர்களது பல்வேறு காலகட்ட வளர்ச்சிகளிலும் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. குறிப்பாக மாணவப்பருவம், பல்கலைகழகங்கள், வேலை வாய்ப்புத்தளங்கள், இன்னும் பொதுநிலை சமூக இயக்கங்கள் என்பவற்றில் நாம் காணலாம்.

    லாலா அவர்களே இப்போது இன்டர்நெட் உலகம் கூகிளை தட்டிவிடுங்கள் தாழ்வுச் சிக்கலை மதிப்பீடு செய்யும் தரவுகளை தேடி கண்டுபிடியுங்கள். தாழ்வுச் சிக்கலை மதிப்பீடுசெய்யும் ஆய்வினை மேல்கொள்ளுங்கள் தாழ்வுச்சிக்கல் சுட்டெண் எந்த மாவட்டத்தில் அதிகம் ஆய்வு செய்யமுடியும்.

    சிவராம்அவர்கள்கிழக்கையும், மலையகத்தையும் மறந்ததாக கட்டுரையாளரை நோகிறார், ஆனால், லாலா நீங்கள் கிழக்கின் தாழ்வுச் சிக்கலைபற்றி கதைத்துள்ளீர்கள், இது சிவராமுக்குரிய சரியானபின்னூட்டமாக இருக்கவேமுடியாது. ஒரு கேள்விக்கு அல்லது விமர்சனத்துக்கு தகுந்த பதிலை அளிப்பதில் ஏற்படும் குதர்க்கமும் தாழ்வுச் சிக்கல்தான்எனநான்கருதுகிறேன்.

    • lala says:
      10 years ago

      தாழ்வுசிக்கலை அடையாளம் கண்டுகொள்வதே தாழ்வுசிக்கல் என்றால் . கூகிளில்  அதன் தரவுகளை தேடி ஆய்வு செய்தவரை என்னவென்று சொல்வது ???

      • S.G.Ragavan (Canada) says:
        10 years ago

        • மலையக கட்சிகளை அல்லது தொண்டமானை வைத்து மலையைக் மக்களை எடை போடவேண்டாம், அதேநேரம் அத்தலைவர்களையோ கட்சிகளையோ காரணம் காட்டி நாம் மலையக மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணராது இருக்க முடியாது. அவர்களுக்காக போராடுவதும் பொது பண்பாக இருக்கவேண்டும்.

        • “தாழ்வுசிக்கல்” – தாழ்வுச் சிக்கலை மதிப்பீடு செய்ய உளவியலாளர்கள் பல்வேறு சமூக மதிப்பீடுகளை மேல் கொள்வார்கள். அந்த மதிப்பீட்டுக்குரிய அளவீடுகளை எவை என பார்த்து அதன் படி தாழ்வுச் சிக்கல் எந்த சமூக கட்டமைப்புகளில் கூடுதலாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனஒரு பருமட்டான பார்வையை செலுத்த முடியும். மற்றும் நீங்கள் கிழக்கு மாகணத்தவர்களுக்கு தாழ்வுச் சிக்கல் எனக் கூறியதால் மாத்திரம் யாழ்பாணத்திலும் தாழ்வுச் சிக்கல் உண்டு என்பதை சொன்னேன். (இவ்விவாதம் தேவையற்றது நிறுத்துவோம்).

        • lala says:
          10 years ago

          மலையக  மக்களை தொண்டமானை வைத்து எடை போட வேண்டாம் எனக்கூறும் நீங்கள் , ஏனைய பகுதி குறிப்பாக வட கிழக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பு சட்ட மேதைகளின் வாயை பாரத்துக்கொண்டிருப்பதாக கூறியிருப்பதன் மூலம் அப்பகுதி மக்களை கூட்டமைப்பை வைத்து எடை போட்டிருக்கிறீர்கள் .

  8. kumar2 says:
    10 years ago

    தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க!!

    மாட்டை கொண்டுபோய் தென்னையிலை கட்டீட்டு தென்னையைப்பற்றி எழுத தொடங்கீட்டாங்க!!

    • S.G.Ragavan (Canada) says:
      10 years ago

      மாட்டை பற்றி எழுதச் சொன்னால் தென்னையை பற்றி எழுதுவது பழைய கதை, புதுக்கதை மாட்டுல உள்ள உண்ணியை பற்றி எழுதுவது…………………….

      • lala says:
        10 years ago

        தங்கள் கருத்துக்கு நன்றி . தாங்கள் கூறுவது பொதுவாக தெற்கு ஆசியாவிலுள்ள  ஒரு மனப்பாங்காகும் .அதிலும் குறிப்பாக இந்திய இலங்கை மாணவர்களிடையே இது அதிகளவிலுள்ளது . கற்பித்தல் முறையும் , மாணவரிடையே ஆசிரியர் ,பெற்றோர் போட்டியை ஏற்படுத்துவதும் இந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
        இதனை யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டுமே உள்ளதுபோல் ஒரு புது விதமான உளவியல் பிரதேச வாதம் பேச முயன்றுள்ளீர்கள் .

      • lala says:
        10 years ago

        உண்மை , உண்ணியில் உள்ள குறைபாடுகள் பற்றி விலாவாரியாக அலசப்படும் . உண்ணியை எப்படி அகற்றுவெதென்பது மட்டும் சொல்லப்பட்டிருக்காது ..

  9. kumar2 says:
    10 years ago

    ஒற்றை பரிமான சிந்தனையிலிருந்து வாங்கோடா(one dimensional Y=Mx +C))!!

    .

    .
    இது அல்லது அது என்கின்ற (biary thinking) சிந்தனையிலிருந்தும் வெளியே வாங்கோடா பேராண்டிகளே !!

    • S.G.Ragavan (Canada) says:
      10 years ago

      ஒற்றை பரிமாணச் சிந்தனையின் நோய்யாக்கியையும் நோய்கூறையும் மேலே சொல்லிவிட்டேன் நோய்க்கான மருந்து சமூகவியல் ஆளர்கள் கண்டு பிடிக்கவேண்டும். அது இது என அங்கலாய்க்கும் அரசியல் தவிர தமிழ் மக்களிடம் வேறு அரசியல் எதுவும் இல்லை, சரியான அரசியலை முன்னெடுக்க யாரும் இல்லை.

      மகிந்த , மைத்திரி பற்றி சுழல்வதிலும் நாம் கூட்டமைப்பின் தலை பிசகானவர்களின் (சட்ட மேதைகள்) முடிவை கேட்பதற்காக காத்திருக்கிறோம்.
      தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை கூட பல பரிமாணங்களை கொண்டது.

      சரி இருக்கட்டும் தங்களின் பரிமாண கோலங்களை எடுத்து விடுங்களேன். நாமும் கேட்டுப் புட்டு வெளியிலை வருவம்.

  10. Sujevan says:
    10 years ago

    குமார்,  நீங்கள் நினைப்பது போல ராஜபக்ஷ உடன் டீல் போட்டு தான் மைத்திரி வந்திருக்க முடியாது. தேர்தலில் மைத்திரி குழுவுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே இதற்கு உதாரணம். மைத்திரியும் ரனிலும் சந்திரிகாவும் ராஜபக்ஷவுக்கு  செக் வைத்துவிட்டர்கள். அவர் மீளமுடியாமல் உள்ளார். இறுதியில் தேர்தலில் ஊழல் நடத்தி ராஜபக்ஷவே வெல்லுவார் என்பதே எனது கருத்து. இப்போது வெள்ளம் ஏற்பட்ட மாவட்டங்களில் வாக்களிக்க முடியாதவாறு செய்துவிட்டனர். கஜேந்திர குமார் கூட்டமைப்பை கண்காணிக்க ராஜபக்ஷவால் இறக்கிவிடப்பட்டவர். முன்னிலை சோசலிச கட்சியும் அப்படித்தான். இல்லையென்றால் ஆஸ்திரேலியாவிலிருந்து கள்ளப்பாஸ்போர்ட்டில் வந்து பிடிபட்ட அதன் தலைவர் ஒரு தண்டனையும் இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றிவருவது எப்படி? சீறீ துங்க கட்சியின் தலைமை சோசலிஸ்ட் ஆல்டர்னேடிவ் என்ற பேரில் அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ளது. அவர்களின் சொல்படி புரஜெக்ட் ஒன்றை நடத்த வேண்டும். அதற்கு தான் ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல் வந்தால் வேட்பாளராக நிற்பார்கள். 

  11. a voter says:
    10 years ago

    சரியான கருத்துள்ள ஒரு கட்டுரை. 
    சர்வதேச சக்திகள் மகிந்தவிற்கு மாற்றுத் தேடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அரசியல் ரீதியாக இலங்கையை ஸ்திரமாக வைத்திருக்கவேண்டும். அதற்கு மேலே உள்ளவர்கள் மாறுவது அவசியம். இல்லையேல் மறுபடி ஜேவிபி கிளர்ச்சி போன்றவை உருவாகலாம்.
    முஸ்லீம் சிங்கள மோதலை சிங்கள மக்களே ரசிக்கவில்லை. எனவே மறுபடி இன மத மோதல்கள் மூலம் ஆட்சியைத் தக்கவைப்பது கடினம். (புலிப்பயம் இன்னமும் போகவில்லை என்பதால் அதுமட்டும் விதிவிலக்கு)
    எனவே சற்றுத் தாராளமான ஜனநாயகத்துடன் மைத்திரி முன்னிறுத்தப்படுகிறார்.
    எந்தக் கட்சியையும் சாராத மக்கள் நலன் பற்றிச் சிந்திக்கின்ற சிங்கள மக்களை நான் அறிவேன். அவர்களில் பலர் மதிந்தவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை அறிவார்கள். ஆனால் மைத்திரி வந்தால் கிடைக்கக் கூடிய சொற்ப கால ஜனநாயக சூழல் மக்கள் நலன் நாடும் சக்திகள் மூச்சுவிடக்கூடிய சூழலை உருவாக்கும் என்பதால் (அக்காலத்தைப் பாவிக்கும் நோக்குடன்) மைத்திரியை ஆதரிக்க நினைக்கிறார்கள். இன்னும் சிலர் முதல் வாக்கை சிறிதுங்க அல்லது நாகமுவவிற்கு வழங்கி இரண்டாம் வாக்கை மைத்திரிக்கு வழங்க நினைக்கிறார்கள். இதன் மூலம் யாரும் முதற் தடவையில் 50 வீதம் பெறாமல் தடுக்கவும் மகிந்தவிற்கு எதிராக மைத்திரியை ஆதரிக்கவும் முயற்சிக்கிறார்கள்.

  12. a voter says:
    10 years ago

    முன்னிலை சோசலிசக் கட்சி பற்றி..
    இரஜாகரன் அதைப்பற்றிய தனது கட்டுரையொன்றில் சுயநிர்ணயம் பிரிவினைவாதமாகவே சிங்கள மக்களால் நோக்கப் படுவதாகவும் அதனால் இக்கட்சி சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குவடுதாகவும் ஆனால் தேசிய இனங்களிற்கு சுயாட்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். (தனிநாடு கிடையாது எனக்குக்குக்கீழ் சிற்றரசாக இருந்து திறை செலுத்து என்பது போல)
    இதற்கும் மைத்திரி சிங்கள மக்களிடையே ஏற்படக்கூடிய வாக்கு வீழ்ச்சியைத் தவிர்க்கும் முகமாக தமிழர் பிரச்சினை பற்றிப் பேசாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
    தமிழீழத்திற்குப் போராடிய இரஜாகu

  13. a voter says:
    10 years ago

    தமிழீழத்திற்குப் போரறாடிய இரஜாகரன் பின்னர் சுயநிர்ணய உரிமை என்றார். இப்போது சுயாட்சி நிலைக்குத் தரம் தாழ்ந்து விட்டார். (மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்றுசொன்னவர் நிலை தெரியும் தானே!)

  14. lala says:
    10 years ago

    டெல்லியில்  இந்தியன் ஆளட்டும் . தமிழகத்தில் தமிழன் ஆள்வான்.சிம்பிள்.

  15. Parai player says:
    10 years ago

    2008 இலிருந்து இழுபட்டு 209 ஜூன் அளவில் வழங்கப்பட்ட சர்வதேச நாணய நிதியம்-இன் கடனும் புதிப்பிக்கப்பட்ட கடனாளி அந்தஸ்தும், ராஜபக்ச சர்வதேச நாணய நிதியத்துக்கும் உலக வங்கிக்கும் பொய் எதிர்ப்பு நாடகமொன்றை ஆடியே பெற்றுக்கொள்ளப்பட்டது.
    அத்தருணத்தில் மிலிந்த மொறகொட-இனால் 2002 அளவில் தனியார்மயப்படுத்த்ப்பட்டிருந்த சீறீலங்கா காப்புறுதிக்கூட்டுத்தாபனமும் பல முன்னணி உபநிறுவனங்களும் பொதுவுடமையாக மீற்கப்படவேண்டும் என வாசுதேவ நாணயகார கள்ளனால் சட்டமண்றில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் வெற்றியுமீட்டப்பட்டு மக்கள் பேய்க்காட்டப்பட்டனர்.
    அமெரிக்க பொருளாதாரப் பேரரசின் ஏமாற்று வித்தை அடியாற்களாக அரசைத் தூக்கிப்பிடித்த தூண்கள் பல. அவர்களில் பலரும் பலராலும் கவனிக்கப்படாமல் தொடர்ந்தும் எவர் வென்றாலும் என்ன என்ற நிதானத்துடன் செயற்படுகின்றனர்.

  16. நக்கீரன் says:
    10 years ago

    ஏகாதிபத்தியம், சேசிய வியாபாரிகள் இப்படியான முழக்கங்கள் வெற்று முழக்கங்கள். செத்துப் போன சோசலீசம், வர்க்கப் போராட்ட பற்றி கட்டுரையாளர் ஒரு பாட்டம் அழுதிருக்கிறார். கட்டுரையாளருக்கு நாடாளுமன்றத் தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை. அது ஏகாதிபத்தியங்களின் கைப் பொம்மை என்ற உளுத்துப்போன கருத்தை முன் வைக்கிறார். அதனால்தான் ததேகூ யை வாக்குப் பொறுக்கிகள் என தடித்த வார்த்தையால் அர்ச்சிக்கிறார். இதன் மூலம் தேர்தல்களில் ததேகூ வாக்களிக்கும் மக்களை இவர் கொச்சைப்படுத்துகிறார். எள்ளி நகையாடுகிறார். இப்படி நீட்டி முழக்கி கட்டுரை தீட்டிய இவர் தமிழர்களுக்கு இருக்கும் தேர்வு என்ன என்பது பற்றி மூச்சுவிடவில்லை. நோயை சொல்லுகிறாரே ஒழிய நோய் போக்க மருந்து சொல்லப்படவில்லை. காரணம் அவரிடம் மருந்து இல்லை. இவர் ஒரு போலி வைத்தியர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...