Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை செல்லும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராக சென்னையில் போராட்டம்

இனியொரு... by இனியொரு...
04/11/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

ficci-siege1போர் என்பதே முதலாளிகளின் நலனுக்காகத்தான், ஷெல் குண்டுகளின் துகள்களும் பிய்ந்து தொங்கும் குழந்தையின் உடலும் சிதைக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிறுகளும் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட உடமைகளும் எல்லாமே முதலாளிகளின் லாபத்துக்காகவே. முதலாளிகளை விமர்சிக்காமல் இருப்பது அநீதிக்கு துணை நிற்பதற்கு சமம்.

ஆனால் ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை, ஏதோ சோனியாவின் தாலியை அறுத்ததால்தான் அவருக்கு கோபம் வந்து பேயாட்டம் போடுவதாக மந்திரங்கள் ஓதப்பட்டு கொண்டிருக்கின்றன. சோனியா மட்டுமல்ல பாஜக, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசிய – ஓட்டுப்பொறுக்கிகள் அனைவருமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனப்படுகொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே. முதலாளிகளின் நலனே இந்தக் கட்சிகளுக்கு பெரிது என்பதால் அவர்களுக்கு லட்சக்கணக்கான உயிர்கள் முக்கியமல்ல.

அதனால்தான் போர் முடிந்த சில வாரங்களிலேயே ஏர்டெல் தன் சந்தையை விரிவாக்க ராஜபக்சேவிடம் சென்றது. டாடா, பிர்லா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் வரிசையாக ஈழத்தமிழரின் ரத்தத்தில் பங்கு போட்டுக் கொண்டார்கள். தமிழ் தேசியம் பேசும் பல அமைப்புக்கள் முதலாளிகளை தொடுவதே இல்லை. இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட இந்தப் போரை முதலாளிகளை தொடாமலேயே விமர்சிப்பது எவ்வளவு அநீதி.

இந்திய அரசு ஈழத்துக்கு உதவி செய்வது போல நடித்து வந்த காலம் தொட்டு , இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தின் நலனுக்காக செய்து வரும் நாடகத்தை அத்துமீறலை, போரை அம்பலப்படுத்தி வந்திருக்கின்றன மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புக்கள்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாணவர் எழுச்சி தமிழகம் முழுவதும் படர்ந்து பற்றி 25 நாட்களாக எரிந்தது. அது முழுதாக அடங்குவதற்கு முன்னர் இந்திய தரகு முதலாளிகள் சங்கம் தனது பங்கினை வாங்குவதற்காக காங், பிஜேபி, பகுஜன் சமாஜ் போன்ற தனது கைக்கூலி கட்சிகளிலிருந்து எம்பிக்கள் கொண்ட குழுவை நேற்று அனுப்பியுள்ளது.

(FICCI) பிக்கியின் தமிழகப்பிரிவு இந்த நேரத்தில் இந்தப்பயணம் வேண்டாம் என்று கூறியும் கூட ரத்தக்கவுச்சி போவதற்குள் பிணங்களைத் தின்ன சென்றிருக்கிறது இக்குழு.

ஈழத்தைக் கொள்ளையிட பிக்கியின் சார்பில் சென்ற எம்பிக்களின் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தரகுமுதலாளிகளின் நலனுக்காகவே இப்போர் நடந்தை அம்பலப்படுத்தியும் ம க இ க , புமாஇமு,புஜாதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்கள் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய தரகு முதலாளிகள் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. புஜதொமுவின் மாநில அமைப்புச்செயலர், தோழர். வெற்றிவேல் செழியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 25 பெண்களும் அடங்குவர்.

காலை முதல் பிக்கி அமைந்துள்ள ஸ்பார்டாங் சாலையில் போலீஸ் படை குவிக்கப்பட்டு இருந்தது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே கூடிய தோழர்கள் அங்கேயே கைது செய்ய பார்த்த போலீசின் முற்றுகையை உடைத்துக்கொண்டு அங்கிருந்து பேரணியாக சென்றனர்.

அந்தச்சாலையில் போக்குவரத்து நின்றது, இந்திய தரகு முதலாளிகள் லாபவெறிக்காக ராஜபக்சேவுடன் கூடிக்குலாவுவதை நிறுத்தும் வகையிலும் ஈழப்போர் என்பது தரகு முதலாளிகளின் நலனுக்காகவே என்பதை அம்பலப்படுத்தும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர், வெற்றிவேல் செழியன் இதையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த போது ‘மாவீரனும்’ சேத்துப்பட்டின் ரவுடியுமான சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் நடராஜ் “பிரஸ் பீப்பிள் எல்லாம் நகருங்க, நடு ரோட்ல பேட்டி கொடுக்கக் கூடாது. இதை நான் பார்த்துக்கறேன்” என்று கத்திக் கொண்டே வந்தார்.

பத்திரிக்கையாளர்களோ ” ஏன் கத்துறீங்க, பேட்டி எடுத்த பின்னாடி நகர்ந்து போறோம்” என்றனர்,. தொடர்ந்து நடராஜ் கத்த, இன்னொரு பத்திரிக்கையாளர் கூறினார் ” எத்தனை போராட்டத்திற்கு போயிருக்கோம், ரொம்ப ஓவரா பண்ணறீங்க” என்றதும் “சரி பின்பக்கம் போறேன்” என்றபடி கிளம்பினார். ஏசி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்,ஐக்கள், வந்து கொண்டே இருந்தனர், கடைசியாக வந்த டிசி பவானீஸ்வரி பெண் தோழர்களை மரியாதையின்றி பேச , அவருக்கு மரியாதையை கற்றுக்கொடுத்தார்கள் தோழர்கள்.

தொடர்ந்து முற்றுகையிட சென்றவர்களை மறித்து கைது செய்து பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளது காவல்துறை. ராணுவ மையத்தைக் கூட முற்றுகையிட அனுமதி தரமுடியும் ஆனால் முதலாளிகள் சங்கத்தின் பக்கமே விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது போலீசு . அனைவரையும் வண்டியில் ஏற்றியபின்னர் முதலாளிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று சாலையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்களையெல்லாம் கைது செய்ய போலீசு முயல, அதை தோழர்களும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞரும் போராடி முறியடித்தனர்.

இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?

ficci-siege-3ficci-siege-13ficci-siege-16

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பொதுபல சேனாவிற்கு எதிராக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...