இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து தம்முடன் ஏதும் கலந்துரையாடவில்லை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
அவர், இலங்கைக்கு செல்லும் முன் தம்மை சந்தித்ததாகவும், இதன் போது இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிரந்தர தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த போவதாகவும் நிருபமா ராவ் தம்மிடம் தெரிவித்ததாகவும், ஆனால் இலங்கை சென்று வந்த பின்னர் இதுவரையிலும் என்னை சந்திக்கவில்லை எனவும் தெரிவித்தார்.