Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை காலி(Galle) இலக்கிய விழா – நம்பிக்கை தரும் எதிர்க்குரல்கள் : சபாநாவலன்

இனியொரு... by இனியொரு...
01/23/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
19
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகத்தின் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மனிதப்பிணங்களுள் புதைத்துவிட்டு தெற்காசியாவின் தென்கோடியில் அரசியல் தர்பார் நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரச பாசிசம். அடிப்படை உரிமைகள் குறித்துச் சிந்திக்க முற்படுகின்ற மனிதனைக்கூட காணாமல் போனவனாக, தேசத் துரோகியாக மாற்றுகின்ற வல்லமை பெற்றிருக்கின்றது ராஜபக்ச அரசு. மூன்று தினங்களுள் ஐம்பதாயிரம் அப்பாவி மனிதர்களை, தமிழ்ப் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக நந்திக் கடலோரத்தின் கிராமங்களில் கனரக ஆயுதங்களோடு கொன்றுபோட்ட இலங்கை அரசு, உலகின் அனைத்து அரச பயங்கரவாதங்களையும் விஞ்சியிருக்கின்றது.

ஜனநாய முகம்காட்டும் அனைத்து உலக வல்லரசுகளின் மௌனத்தின் மத்தியில், ஐக்கிய நாடுகள் அண்ணார்ந்து பார்த்கொண்டிருக்க இந்திய அரசின் துணையோடு, சீனாவின் ஆசியோடு இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்து இன்னும் இரண்டு வருடம் முழுமையடையவில்லை. அமரிக்கா உலகின் பொதுப்புத்தியாகக் கற்றுக்கொடுத்த “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ” என்ற தலையங்கத்தின் ஒவ்வொரு உள்ளார்ந்த அர்த்ததையும் புரிந்துகொண்டு, அப்பாவி மக்களை அழித்து உலகின் ஒவ்வொரு மனிதனையும் அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது இலங்கையரசு.

அப்பாவிகளை அழித்துப் போரை முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர், முழு இலங்கையையும் இராணுவ மயமாக்க ராஜபக்ச சர்வாதிகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், உரிமைவாதிகள், அரசியலாளர்கள் என்று இலங்கை அரசை விமர்சிக்க எண்ணும் ஒவ்வொருவரும் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள், காணாமல் போகிறார்கள் அல்லது கொலைசெய்யபடுகிறார்கள். இயலுமானவர்கள் கொலைக் கரங்களிலிருந்து அன்னிய தேசங்களுக்குத் தப்பியோடியிருக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இன்னும் ஆயிரக்கணக்கனோர் காத்திருக்கிறார்கள்.

உலக அரச பயங்கரவாத்திற்கு அதீத நம்பிக்கையும், முன்னுதாரணத்தையும் வழங்கியிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் குறைந்தபட்ச ஜனநாயக்ப் பெறுமானங்களையாவது மக்கள் மீளமைக்க வேண்டும் என்பதில் மக்கள் பற்றுள்ள அனைவரும் உறுதி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் “சரவ்தேச தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற இலங்கை அரசிற்கு ஜனநாயகச் சாயமிடுகின்ற நிகழ்வை இலங்கை அரச ஆதரவாளர்களின் ஆதரவோடும் பங்களிப்போடும் சென்ற மாதம் நடத்தி முடித்திருக்கின்றனர். இந்த மாநாட்டிற்கு எதிர்வினையாற்றிய இனியொரு, தேடகம், சமூக அசைவிற்கான எழுத்தியக்கம், புதிய திசைகள் போன்ற அமைப்புக்கள் கூட்டறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தன.

இந்த நிலையில் ஜனவரி மாதம் 20ம் திகதி ஆரம்பித்து பத்து நாட்கள் காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) இனக்கொலைக் குற்றவாளிகளின் மண்ணில் இலங்கை அரச ஆதரவுப் போக்குடையோர் ஏற்பாடுசெய்துள்ளதற்கு எதிரான கண்டனம் உலக முற்போக்கு எழுத்தாளர்களின் மத்தியிலிருந்து மேலெழுந்தது நம்பிக்கை தருவதாக அமைகிறது.

ஆரவாரமின்றி திரை மறைவில் ஜனநாயக நாடு ஒன்றின் சாதாரண நாளாந்த நிகழ்வு போல ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கிய விழாவிற்கு எதிரான கண்டனங்கள் அருந்ததி ராய், தாரிக் அலி, நாஓம் சொம்ஸ்கி போன்ற போர்குணம் மிக்க குரல்கள் ஒலிப்பது, ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றுகளாகும்.

அமரிக்கா, நெதர்லாந்து, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசு சார் நிறுவனங்களின் ஆதரவோடு நடைபெறும் விழா நமது எதிரிகளை தெளிவாக இனம்காட்டியுள்ளது.

எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பும்(Reporters Without Borders), ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பும்(Journalists for Democracy in Sri Lanka (JDS)) இணைந்து விழாவிற்கு எதிராக விடுத்த அறிக்கை அருந்ததி ராய், சொம்ஸ்கி, தாரிக் அலி போன்றவர்களால் கையெழுத்திட்டு ஆரம்பிக்கப்பட்டடுள்ளது.

இவர்களின் எதிர்ப்பியக்கத்தை இவ்வாறான நிகழ்வுகளின் பின்னணியிலுள்ள இலங்கை அரசின் அரசியலைப் புரிந்து கொள்ளும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் ஆதரிக்க வேண்டும்.

இவ்விரு அமைப்புக்களதும் கையெழுத்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் இணைந்து கொள்ளும் இணைய முகவரி:

 http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html?lang=en&var_confirm=LNyKxTiv#sp39355

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ் மாவட்டக் குற்றச் செயல்களுக்கு புலிகளே பொறுப்பு : ஈ.பி.டி.பி

Comments 19

  1. chandran.raja says:
    15 years ago

    அருந்ததிராய் சிறந்த எழுத்தாளர் எனப் பெயர் வாங்கியவர்.மனிதநேயம் மிக்கவர். அடக்கியொடுக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர்.ஏழை எளியதுகளுடன் சேர்ந்து வாழப் பழகியவர். அந்த வகையில் அவர் முற்போக்குவாதியே!.

    அரசியல் என்பதும் வரலாறு என்பதும் அப்படி பட்டது இல்லையே.மனிதரை மனிதர் பகையாளி ஆக்குவதும் மனிதனுக்கெதிராக மனிதனை ஏவிவிடுவதும் முதாலித்துவம் அல்லவா?.அதற்கெதிராகவே இந்த முற்போக்காளர் தம்மை வியூகப் படுத்தவேண்டும். அருந்ததிராய் பன்னாட்டுநிறுவனங்களின் செயல்பாடுகளையும் பழம்பெரும் குடிமக்களுடைய போராட்டத்தையும் ஆதரப்பது மட்டுமல்ல அவர்களுடன் வாழ்ந்து பேட்டியும் எடுத்து வருகிறார்.நல்ல விஷயமே!. ஆனால் நக்சலைட் என்று சொல்லப் படுபவர்களுக்கும் புலிகளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. முதாலித்தவத்தை எதிர்பதற்கு அழித்து ஒழிப்பதற்கு நக்சலைட்டுகளோ புலிகளோ ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை அருந்ததிராய் உணருவதற்கு இன்னும் காலம் பிடிக்கும்.எழுத்தாளர்கள் வேண்டுமானால் முதாலித்துவத்தின் அரசியல்வாதிகளாக மாறலாமே ஒழிய பாட்டாளிமக்களின் தலைமைப் பாத்திரத்தை ஒருபோதும் வகிக்க முடியாது.

    • mudikondan says:
      15 years ago

      மாவோயிஸ்டுக்களிடம் சில தவறுகள் உள்ளன அவற்றை விமர்சிக்கலாம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். புலிகளோ ரொஸ்கிஸ்டுகளொ அவற்றை ஒத்துக்கொள்ள மாட்டாத ஜனநாயக மறுப்பாளர்கள்.

      • chandran.raja says:
        15 years ago

        லெனினுக்கு இணையாக அக்டோபர் புரட்ச்சியை நடத்தியதும் அல்லாமல் பின்வந்த ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு எதிராக மாபெரும் செஞ்சேனையை ஸ்தாபித்தது அல்லாது அதை வழி நடத்திசென்று வெற்றியும் கண்டார். 1917-20 காலப் பகுதிகளில் ஸ்டாலின் எங்கிருந்தார் என்பதை வரலாற்று பகுதிகளில் தேடிப் பார்க்கிறேன் கண்டு பிடிக்கமுடியவில்லை. தாங்கள் அதைப் பற்றி அறிந்தால் அறியத் தரவும். அத்துடன்…… நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரே ரொக்ஸி அவர்கள் தான்.அவர் கொலைசெய்ய பட்டு எழுபது ஆண்டுகள் கழிந்த பின்பும் வேர் விட்டு கிளையெறிந்து விழுதுபரப்பி உலகமெல்லாம் கால்லான்றி இருக்கிறது. எகாதிபத்தியத்திற்கும் முதாலித்தவத்திற்கும் கனவிலும்
        தொந்தரவு கொடுத்து கொண்டிருப்பது நான்காம் அகிலமே!. இதற்கெதிராக சேற்றை வாரிவீசும் போது அந்த மாபெரும் உலகத்தலைவர் எழுதியதை வைத்து கருத்தை சொல்லுவதே உசிதமானது இனிவரும் நேரத்தில் அதை கைகொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.தனிமனித தாக்குதல் என்பது அறிவுக்கு அப்பால் பட்டது என்பது மட்டுமல்ல அற்பத்தனமானது கூடா என்பதை இன்னொருவர் சொல்லித் தான் தெரியவேண்டுமா?.

    • ramu says:
      15 years ago

      கட்டுரை பேசுகின்ற விடயம் என்ன? அதனை பற்றி கருத்துசொல்ல வக்கில்லை. அருந்ததிராய் பாட்டாளிகளுக்கு தலைமை தாங்குவதாக சொன்னாரா? மாவோயிஸ்டுகளின் மீது கூட சில விமர்சனங்களை வைத்திருந்தாரே. விடயம் இதுதான் சொந்தநாட்டுமக்களை ஒடுக்குகின்ற கொலைகார அரசிற்கு சல்லாரி(?) அடிப்பவர்கள் சர்வதேசபுரட்சி என்று பீலா விடுகின்றார்கள். தம்மை சூழவுள்ள மாந்தரின் கதையைபதிவதாகவும், மனவெழுச்சியையும், அறத்தையும் பற்றி பேசுகின்ற எழுத்தாளர்கள்( அம்புலிமாமா கதையெழுதும் அழகலிங்கமும், சிஸ்யப்பிள்ளை சந்திரன்ராசா வும்கூட தங்களை எழுத்தாளர்களாக பிகடனப்படுத்தக்கூடும்) சிலர் சோரம் போயிருக்கும் இன்றையநிலையில் ( இவர்களின் எழுத்துலக சாதனைபற்றிய கேள்விஒருபுறமிருக்க) சர்வதேச சாதனை படைத்த எழுத்தாளர்கள் இலக்கிய விழாவை புறக்கணிப்பது ந்ம்பிக்கையூட்டுகிறது என்றால் பொய்யர்களுக்கு பொறுக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் அருந்ததிராய் பாட்டாளிகளுக்கு தலைமைதாங்க முடியாது , மாவோயிஸ்டுகளும் புலிகளும் ஒன்று என்று புலம்புகிறார்கள். அதற்கும்மேல் ரொட்ஸ்கியை பற்றியும் சர்வதேசபுரட்சிபற்றியும் பினாத்தல் வேறு. ஊரில் சொல்வது போல கூரைஏறி கோழிபிடிக்கமுடியாதவன் வானமேறி வைகுண்டம் போக முயற்சிப்பதைபோல ரொட்ஸ்சிச ப்ன்னாடைத்தனத்தை( நிச்சயமாக நல்லவார்த்தை. ந்ல்லதைவிட்டு கழிவை கவ்விகொள்ளல்) பற்றி பேசுவதற்குரிய இடமில்லை இது.

      • chandran.raja says:
        15 years ago

        கரடி பிறை பார்த்து அறியாது.அதனால் பார்க்க முடியாது என்பதே! பொருள். ராமுக்கும் பாட்டாளிவர்க்கத்திற்கும் உள்ள தொடர்புகளும்
        அது போலத்தான். கரடியின் நிலை.

        காட்டுமிராண்டித் தனத்தில் இருந்த போராட்டத்தை ஜனநாயகவழிக்கு
        திசை திருப்பிக் கொண்டுவந்தவர் மிகிந்தா ராஜபக்சாவே தான். இதில் ராமுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறா?இல்லை தமிழ்நாட்டில் இருந்து மன்னர்கள் வந்து மீட்டெடுத்து கொடுத்தார்களா? தமிழ்மக்களுக்கு?.இனி இலங்கையில் போராட்டம் நடப்பதால் இருந்தால் இனவெறியும் மதவெறியும் பேசி நடக்க போவதில்லை. இனி அது செல்லா காசாகிவிட்டது. அது முதாலித்துவத்திற் கெதிரான போராட்டமாகவே இருக்கும். அப்படி வரும் போது பாட்டாளிவர்க்கத்தின் பாத்திரம் என்ன நிலையை எடுக்கும் என்பதை யாரிடமாவது நாளாந்த பாடமாக படிப்பாக கேட்டு அறிந்து கொள்ளவும் ராமு. இலக்கிய பரிசுபெற்றவர்கள் எல்லோரும் அரசியலில் தலையிடுவதில்லை.ஒரு சில கருத்துகள் சொல்வதோடு நின்றுவிடுவார்கள். அருந்ததிராய் விதிவிலக்காக காணப்காணப் படுகிறார்.அதற்காண மரியாதையை சமூகம் கொடுத்தே தீரும். இன்றைக்குள்ள கேள்வி எந்த வர்க்கத்து என்பது தான்.

        இப்படியான கேள்விகள் உங்களை சங்கடப்படுத்தும். இங்கு எழுதுவது ஒருவரை இருவரை குறிவைத்து தாக்குவதற்கு எழுதப் படுவதில்லையே!. எல்லோருக்கும் தேவையான ஒரு பொது கருத்தை தேடிச் செல்லத்தானே விவாதிக்கிறோம்.அதில் பல கேள்விகள் எழுப்பப் பட வேண்டியது நிபந்தனை அல்லவா?

        ஒரு கட்டுரைவந்தால் மனிதவாழ்வை அரசியலை தொட்டுதானே செல்கிறது. புது பணியாரம் எப்படி சுடலாமென்றா? சொல்லுகிறது.கட்டுரை என்னதான் சொல்லுகிறது என்று நீங்கள் சொல்வீர்களா? ராமு…..இப்ப பார்த்தீர்களா? என்ன மாதிரி குள்ளனாக சிறுத்துவிட்டீர்கள். இப்படித்தான் முப்பது வருடம் சீரழிந்து அறுபட்டு போய்விட்டது. இன்று போர்குற்றம…போர்க்குற்றம் என குரல் எழுப்புகிறார்கள். இப்படி குரல் எழுப்புபவர்கள் புலிஅட்டைகளே!. இந்த புலிஅட்டைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்த போர்குற்றங்களை யாராம் தண்டிப்பது.இல்லை தட்டிக்கேட்பதற்கு எந்த தமிழனுக்கு உரம் இருந்தது. ஆகவே பணியாரம் சுடுகிற மாதிரி முள்ளிவாய்காலை பார்க்காமல் முள்ளிவாய்காலை பார்கிறமாதிரி கட்டுரையை பார்க்காமல் அரசியல் அறிவோடு கட்டுரையை படிக்கவும். குட்டிமுதாலித்துவ சிந்தனையே…மத்தியவர்கத்திற்குரிய சிந்தனையே தமிழ்யினத்திற்கு ஏற்பட்ட அவலங்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள்.எமக்கு இனிதேவையானது பாட்டாளிவர்கச் சிந்தனையும் நிலைப்பாடுமே. அதில்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும்.அதற்காகத் தான் போராடவேண்டும்….அதுவே இலங்கை முதாலித்துவத்தை வீழ்துவற்கான வழிமுறை.இலங்கை பாட்டாளிவர்கம் தம் அறிவை பெருக்குவதன் மூலமே தீர்கமுடியாத இனபிரச்சனை கூடா தீர்பதற்கான வாய்ப்பை கண்டு கொள்ள முடியும்.

        • sacthivel thanikasalam says:
          15 years ago

          இதுவரை அசைக்க முடியாத முதலாளீயாய் எகிப்தை ஆண்ட முபாரக் ஒளீப்பதற்கு இடம் தேடுகிறார் அது போல மகிந்தவும்,கோத்தாவும் துண்டக் காணோம்,துணீயைக் காணோம் கதையாய் ஓடும் காலம் பக்கத்தில் வருகிறது.

        • Soorya says:
          15 years ago

          இப்படி எழுதுவதற்கு ஒன்றில் முளு முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது டக்லசு, கருணா போல் அப்பட்டமான சூடு சுரணையற்ற வங்குறோத்தாக இருக்கவேண்டும். ஆனால் இவ்விரண்டையும் வென்ற இணையற்ற ”ஆசான்” உ லகத் தலைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காது குட்டிமுதலாளித்துவ சிந்தனையுடன் குள்ளமாக இருக்கும் தமிழருடன் மினக்கெடுது!  

    • ramu says:
      15 years ago

      உங்கள் உவமைகள் உங்களுக்கே பொருத்தமாக இருப்பதுதான் முரண்நகை. பேரினவாத, கொலைகார மகிந்தகும்பலுக்கு சல்லாரி(?) அடித்துக்கொண்டே உலகப்புரட்சி பாட்டாளிவர்க்கம் பற்றி வாய்ச்சவாடல் அடிப்பது “கரடி பிறை பார்ப்பதில்லை” உவமையுடன் ஒத்து போகவில்லையா? நான் பாட்டாளியல்ல. கூடவே உங்கள் பிதாமகன் ரொட்ஸ்கி பாட்டாளி வர்க்கத்திலிருந்து வந்தவருமல்ல. ரொட்ஸ்கியின் துணைவியார் நத்தாலியா செடோவாவினால் ரொட்ஸ்கிய இலட்சியங்களிருந்து விலகிச்சென்றுவிட்டதாக புறக்கணிக்கப்பட்டதே நீங்கள் போற்றுகின்ற நான்காவது அகிலம். அது ஒருபுறம் எண்பதுகளில் புலிகளின் சிங்களமக்கள் மீதான படுகொலைகளை ஆதரித்த ரொட்ஸ்கிச கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்ததே. நீங்கள் அந்தகூட்டத்தை சேர்ந்தவரில்லையா?( கரடி பிறை பார்ப்பதில்லை) வார்த்தை விளையாட்டுக்கள் மூலம் புரட்சியர்களாக உங்களை நீங்களே கற்பிதம் செய்துகொள்வதைவிட மனிதர்களாக வாழமுயற்சித்தால் பேரினவாத,மக்கள்விரோத மகிந்தகும்பலுக்க்கெதிராக மக்களுடன் இணைய முடியும். இன்றேல் முதலில் கொமெனியின் ஈரான்(அவர்கள் இடதுசாரிகளையும், சமூக உணர்வுள்ள முற்போக்குசக்திகளையும் படுகொலை செய்துகொண்டிருந்தபோதே) பின்னர் புலிகள், இப்போ மகிந்த கும்பல் என்று மாறிமாறி சல்லாரிஅடிக்கலாம். தங்கள் அரசியல் வங்குரோத்தை அம்புலிமாமா கதையெழுதியோ, வர்க்கம்,உற்பத்தி உறவு,உபரி என்று பூச்சாண்டிகாட்டி மறைத்துக்கொள்ளலாம். என்னை கேட்டால் தன்னுடைய கற்பனாவாத அரசியலின்மூலம் வரலாற்றின் குப்பைதொட்டிக்குள் போனவர்தான் ரொட்ஸ்கி. புரட்சிக்குபின்னர் தொழிற்சங்கங்களுடைய பாத்திரம்பற்றிய விவாதத்தில்” இது தொழிலாளர் அரசு.தொழிலாள்ர்கள் பயப்பட ஏதுமில்லை.தொழிற்சங்கம் அரசிற்கு கீழ் ராணுவ அமைப்புகளை போலசெயல் படவேண்டும். தொழிலாளர் இராணுவ வீரர்களை போன்றவர்களாக கருதப்படவேண்டும். தொழிலாளி இடம்மாற்றப்பட்டால் அதை எதிர்த்தால் இராணுவத்தில் கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்களை கையாள்வதுபோல கையாளவேண்டும்” என்று இராணுவ வாதம் பேசினார். கட்சியே பிள்வுக்குள்ளாகும் நிலை தோன்றியது. ரொட்ஸ்கியின் வாதம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவே ருசியப்புரட்சியின் பெரியசாரிவின் ஆரம்பம். தளகர்த்தர் சாட்சாத் ரொட்ஸ்கியே. ருசியாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாவது சிவப்பு பயங்கரத்தில் ரொட்ஸ்கியின் பங்குபற்றி ஸ்ராலினிஸ்ற் அல்லாத எமா கோல்ட்மன் போன்றோரின் எழுத்துகளில் கண்டுகொள்ளலாம். ரொட்ஸ்கியத்தின் மாக்சிச மறுப்பை அதற்குரிய இடத்தில் விவாதிக்கலாம்.

      • chandran.raja says:
        15 years ago

        எழுத்துக்கள் எல்லாம் வரலாறுகள் ஆவதில்லை.அதே நேரத்தில் வரலாறுயானது போனவைகள் கூடா எழுத்துக்கள் ஆவதில்லை. அதற்கு உதாரணம் மாக்சும் ரொக்ஸியுமே! . மனிதவரலாறு முழுமையாக ரத்தித்தினாலும் தீ யினாலும் என்மை எழுதி இனிவரும் காலங்களில் தொழிலாளிவர்கம் தன்கையில் எடுக்கும் என்பதையும் எழுதிவைத்தார்.அவர்குரிய காலங்களில் அதற்காகவும் போராடினார். தோல்விகண்ட நேரத்தில் அதுவே அதன்
        வெற்றியின் படியும்யாயிற்று. ரொக்ஸியின் வரலாறு அவர் வாழ்ந்த
        வாழ்க்கை அதை நுண்னறிவுடன் படிக்கும் ஒரு தொழிலாளவர்க்க நிலைப்பாடுயுடைய மனிதன் இந்த மனிதனை மாக்ஸியத்தின் வெற்றியாளனகாவே கருதுவான். மனிதனை மனிதன் வதைகளில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் மாக்ஸின் “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற பொண்எழுத்துக்கள் கொண்ட வாசகத்தை மனிதத்திற்கு அளித்தார். வரலாற்றில் ஸ்டாலினோ முதாலித்துவத்துடன் பாசிஸிஸ்டுகளுடன் உடன்பாட்டிற்கு போனதுமல்லாமல் போல்ஷிக்கு புரட்ச்சியாளர்களையும் அழித்துதொழித்து தனக்கும் ஒரு இழிப்பெயரை தேடிக்கொண்டான்.ஒப்பீட்டளவில் கிட்டிலரின் நடவடிக்கைகளுக்கும் ஸ்டாலின்நடவடிக்கைகளும் வேறு பட்டதல்ல. முடிவில் வரலாற்று ரீதியாக முதாலித்துவதிற்கு சேவகனாகா மாறினான் ஸ்டாலின். தனது சொந்தநாட்டு தொழிலாள
        வர்க்கத்தை இரையாக்கியது. இதுவே மாக்ஸ்சிய ஆய்வின் முடிவு.

        இன்று ஸ்டாலின் கோட்பாட்டைநம்பி அரசியலைக் கொண்டு நடத்துவதற்கு உலகத்தில் ஒருகாக்கை அல்ல காக்கை குஞ்சைக் கூட கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் முள்ளிவாய்கால் மாதிரி இருந்த இடம் தெரியாமல் அலையடித்து மூடிற்று…… ஆனால் ரொக்ஸிக்குகோ அவரின் மாக்ஸிய வழுவாறா தன்மைக்கோ உலகம் முழுக்க பலகிளைகளைவிட்டு விழுதுகளுடன் கால்லூன்றி நிற்கிறது அவர் ஸ்தாபித்த நான்காம் அகிலம். அப்பனே
        ராமு ஆத்திரபடாதீர்கள். ரொக்ஸி அடிக்கடி சொல்லும் வார்த்தை இது தான். சமூக பிரச்சனைகளிலும் எழுச்சிகளிலும் எதிர்நீச்சல் போடத்தெரியாதவன் ஒரு முடமே!. இதுவென்னவென்பதை எதிர்காலத்தில் கண்டுகொள்வீர்கள். இன்னுமொன்று 1917-18 காலங்களில் புரட்சியின் பார்வையாளர்களாக கலந்துகொண்ட ஜான்ரீட்டை யாருக்கும் தெரியாமல் இருக்காது. அவர் எழுதிய “உலகைக் கலக்கிய பத்து நாட்கள்” உலகப்பிரசித்தமானது. என்றும் இறவாதன்மை கொண்டது.அதில் ரொக்ஸி என்ன சொன்னார் என்பதை தற்போதைக்கு உங்களுக்கு தருகிறேன். அது இதுதான்.

        “ருஸ்சிய புரட்சி ஐரோப்பிய முதாலித்துவத்தை தோற்கடிக்க வேண்டும்.இல்லையேல் ஐரோப்பிய முதாலித்துவம் ருஸ்சிய புரட்சியை தோற்கடிக்கும்”. இதுவே தொன்றூறுஆண்டுகளுக்கு பின்பும் கண்டுகொள்ளும் உண்மை. இனியென்ன வேண்டும் ராமு.
        தளர்ந்து விடாதீர்கள் தொடர்ந்து வாருங்கள். இப்படியான விவாதங்கள் இன்றையநிலையில் பெறுமதியானவை மட்டுமல்ல அர்த்தம் உள்ளவைமே. தொடர்ந்தும் இதுபோல் கேள்விகளை எழுப்புங்கள

    • suganthan says:
      15 years ago

      பேரினவாத கொலைகாரகும்பலின் காட்டுத்தர்பாரை ஆதரித்துக்கொண்டே மனித சமூக உயர்வு, ஒடுக்கப்பட்டோரின் கூட்டிணைவு, சர்வதேசியம் பற்றி பேசுவதாயின் நிச்சயமாக தீவிர ரொட்ஸ்கிச மனநோயாகத்தான் இருக்கவேண்டும் என பலர் கருதுகின்றார்கள். நீங்களே கேள்விகேட்டு மற்றவர் குள்ளமாகிவிட்டார், தளர்ந்துவிட்டார் என்று அம்புலிமாமா கதையெழுதுவது காரணமாகலாம். நான் அவ்வாறு சிறுமைப்படுத்த போவதில்லை. எனது கேள்விகளுக்கு பதிலில்லையே? எண்பதுகளில் புலிகளின் சிஙகள மக்கள் மீதான படுகொலைகள் உட்பட அனைத்தையும் உங்கள் கும்பல் ஆதரித்ததே? அதற்கு சர்வதேசபுரட்சியின் அங்கமாக பிரஸ்தாபித்தீர்களே அதற்கு காரணமென்ன? வலதுசாரிய கொமெனியின் ஈரானை ஆதரித்தீர்களே. அதுவும் ச.பு என வழக்கம்போல……. ரொட்ஸ்கியின் துணைவியார் நத்தாலியாவினால் கூட 50களில் புறக்கணிக்கப்பட்டதே உங்களது கும்பல். பதிலை ஆசான் வ.அ இடமும் கேட்டெழுதலாம். பணியாரம்சுடுதல், பால் ஊத்தல் என்று அம்புலமாமாக்கதைகளை சீடப்பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.

      • chandran.raja says:
        15 years ago

        மாக்ஸின் மணைவியை வைத்து மாக்ஸியத்தை புரியவைக்கிறவர்
        பாரீஸ் தலைநகரில் தான் இருக்கிறார்கள் என்பதை திரு சுகந்தன் அறிவார் என்று நான் நினைக்கிறேன்.நீங்கள் நத்தலியாவைக் கொண்டு புரியவைக்க முனைகிறீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நான் எந்தவேறுபாட்டையும் காணவில்லை. இப்படிப்பட்ட பேர்வழிகளை நுனிப்புல் மேய்ந்தவர்களாகத்தான் அடையாளப் படுத்த முடியும். இது இப்படியே இருக்க….. நீங்கள் எந்தசமூக முன்நோக்கில் இங்கு வருகிறீர்கள்?. தமிழ்மக்கள் பெயரில் முப்பதுவருடங்கள் நடந்த காட்டுதர்ப்பார் உங்கள் கண்களுக்கு தெரியாமல் இன்றுநடப்பது காட்டுத் தர்பார் என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்?. இன்றுநடக்கிற அரசாங்கத்தில் கணிசமானவர்கள் இடதுசாரிகள் உள்ளடக்கப் பட்டவர்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள். ரொக்ஸிய வாதிகளும் உண்டு. ரொக்ஸியத்தின் பெயரில் எத்தனை பிரிவுகள் உண்டு என்பதை தாங்கள் அறிவீர்களா? எனக்கு தெரிந்த வரை ஆறு உலகக்கட்சிகள் உண்டு.உங்களுக்கு தெரிந்தது எத்தனையோ?தளர்ந்து விட்டவர்கள் குள்ளமாகிப் போனவர்கள் சொல்லவேண்டிய பதிலுக்கு நீங்கள் ஏன் அவஸ்தை படுகிறீர்கள் அல்லது அதே பெயரில் வந்தது தாங்களா? அடுத்து…. பத்தொன்பதாம் நுரற்றாண்டில் வீறுடன் எழுந்துவந்த தத்துவம் பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒருமுறைவருகிற உலகபொருளாதார சரிவு அறுபத்தைந்து ஆண்டுகள் கழிந்து வந்தால் அந்த தத்துவம் பொய்யாகிவிட்டது…பொய்யாகி விடும் என்று எண்ணுவார்களா?..அரசியல் கோட்டுபாடுகள் பொருளாத்தின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப் படுகிறது என்பதும் பொய்யாகி விடுமா? பெரிய அளவில் வேறு ஒன்றும் உங்களுக்கு சொல்வதற்கு தற்போதைக்கு ஒன்றுமே இல்லை. இருந்தும் இரு விஷயங்களை தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1) முதாலித்துவத்தை எதிர்கிற சந்திரன்.ராஜா மகிந்தா அரசுக்கு அல்லது உங்கள் பாஷையில் வ. அ. பாஷையில் வங்காளத்து வாங்குவதாக எண்ணுகிறார்கள்.அதற்கு நான் என்ன செய்யமுடியும்? எனக்கிருக்கிற கேள்வி மகிந்தாராஜபக்சா இல்லா இடத்தில் இல்லை அவரை ஒதிக்கிவிட்டு அந்த இடத்தில் யாரை அமர்த்த போகிறர்கள்? இன்றைய நிலையில் தொழிலாளவர்கத் தலைமைகள் பலமடைய குறுகியகாலங்களே இருந்தாலும் இன்று இருக்கிறா? தமிழ்மக்கள் செய்தது தொழில்சங்கங்களை விவசாய சங்கங்களை புலிசங்கங்கள் ஆக்கிவிட்டது தானே? தொழில்சங்களை தொழில்சங்களை உருவாக்க நல்லதொருமுடிவை எடுத்தவன் எவனோ? அந்த வகையில் மகிந்தா டக்கிளஸ் கருணா கெளரவிக்கப் படவேண்டியவர்கள்களே வேறு எந்தவிதத்திலும் இல்லை. 2) ரொக்ஸியத்தை பற்றி தாங்கள் அறியவேண்டியதாக இருந்தால் நான்காம்அகிலத்தின் வேலைத்திட்டம் என்று பெயரிடப்பட்ட 8.ஆகஸ்ட் 1988 என்ற பதிப்பை வாங்கி படித்து…..முகர்ந்து பாருங்கள் அதில் சர்வதேச தொழிலாளவர்க்கம் கடந்துவந்த நெளிவு சுழிவுகள் உள்ளக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதைவைத்து விமர்சியுங்கள் கேள்வி எழுப்புங்கள் அது வாசகர்களுக்கும் உங்களுக்கும் பயன்யுள்ளது. இந்த பதிவுவை மூன்றுநாட்களில் உங்கள் வீடுவந்து சேரும். இதை எப்படி பெறுவது என்பதை பற்றிய விபரத்தை டவுள்யூஎஸ்.டவுள்யூஎஸ். ஓஆர்ஜி என்பதற்கு போனால் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.அவ்வளவு தான். இப்ப சொல்லுங்கள் யார் பணியாரம் சுடுவது பால்ஊத்துவது அம்புலிமாமா கதைகதைப்பது சுகந்தன்?.

  2. sacthivel thanikasalam says:
    15 years ago

    இலக்கியத்தில் இருந்து அறம் பேசுவோரெல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு இலங்கை அரசின் அடிவருடிகளாய் மாறீப் போயினர்.அழுது கொண்டிருப்பதா என அட்வைஸ் செய்து கொண்டு எல்லாம் இழந்த மக்களீடமும் இருப்பதை பறீக்க அலைகின்றனர்.மனசாட்சி மரித்துப் போன இவர்களீடம் மனிதம் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கிறது தமிழ் இனம்.ஒன்றாய் ஓரணீயாய் நின்றூ குரல் கொடுக்காது இன்னும் காய்கறீ வியாபாரி போல கத்திக் கொண்டிருக்கிறது.தமிழ்ச் சமூகம் புதியதிசையில் பயணீக்க வேண்டும்.

  3. Vijey says:
    15 years ago

    காலியில் நடைபெறவுள்ள இலங்கை இலக்கிய விழாவில்> நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஓர்கான் பாமூக்கும் கிரான் தேசாயும் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத்தொpவிக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பென்குயின் பிரசூpப்பாளர்கள் இவர்கள் இருவரும் காலி இலக்கிய விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என ஏ.எவ்.பி.க்கு தொpவித்திருக்கிறார்கள். ஆயினும் அதற்கான காரணத்தை அவர்கள் தொpவிக்கவில்லை.
    பாமூக்கும் கிரான் தேசாயும் காலி இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவதில்லையென தீர்மானித்திருப்பதற்கு இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான கவலைகளே காரணம் எனக்கூறப்பட்டு வருகிறது. ஆயினும் இலங்கை அரசாங்கம் இதனை நிராகாpத்திருக்கிறது.
    இதே வேளை ஓர்கான் பாமூக்கும் இந்தியா-ஜெய்பூரில் நடைபெறும் இலக்கி விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

    • sivanesan kandiah says:
      15 years ago

      இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மகாநாடு நடைபெற்றது
      சென்றமாதம் அல்ல : இம்மாதம் 6 – 9வரை! இம்மாதம்தான்
      26 ஆம் திகதி காலி இலக்கிய விழாவும் நடைபெறப்போகிறது!
      முருகபூபதி -ராஜேஸ்வரி – டொமினிக் ஜீவா – ஞானசேகரன் –
      நடேசன் – இயக்கச்சி கருணாகரன் – ச. முருகானந்தன் – த.கலா
      மணி கூட்டத்தினரின் “மனித உரிமை” “ஐனநாயகப் பொறுப்புணர்வு”
      பற்றி சிரிப்புத்தான் வருகுதய்யனே!

  4. மு. மயூரன் says:
    15 years ago

    காலி இலக்கிய விழா/ இலக்கிய விழாக்களின் அரசியல் பற்றி துலாவில் வந்திருக்கும் கட்டுரை:

    http://thulaa.net/home/archives/222

    //நியாயமான எந்தவொரு எதிர்ப்பும் மக்களிடமிருந்தே வரவேண்டும். ஒடுக்கப்படுகின்ற சூழலில் வாழ்கிறவர்களாலேயே ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட முடியும். நாட்டுக்கு வெளியே இருந்து போடப்படும் வெற்றுக் கூப்பாடும் கூச்சலும் எதையும் சாதிக்கப் போவதில்லை இங்குள்ள யதார்த்த சூழலை கவனத்தில் கொள்ளாது. வெறும் வசனங்களை மட்டும் முன்வைப்பது அர்த்தமற்றதாகும். மாறாக அவை நாட்டுக்குள்ளே வாழ்கின்ற மக்களின் இருப்பைத்தான் பாதிக்கின்றன. மக்களின் இருப்பின் நிச்சயமின்மைக்கான நிகழ்தகவை அதிகரிக்கின்றன. அதற்கு மேலாக இவ்வாறான கோஷங்களால் விளைவது எதுவுமல்ல.//

    • THAMILMARAN says:
      15 years ago

      மேடை தேடித் திரியும் மயூரன் போன்றோர் வேண்டுமானால் தம்மை விற்றூப் பிழக்கலாம்,ம்கிந்த ராஜ்ஜியத்தில் வானரங்களாக இருக்கலாம் அதற்காக நம்மையும் வாய்ச்சொல் வீரராக்குவது நகைச்சுவை.

    • கிறுக்கன் says:
      15 years ago

      ஆம் அங்குள்ள யதார்த்த நிலை LankaeNewsக்கு தீ மூட்டியதில் இருந்து தெரியவில்லையா? வெளியில இருக்கிறவைக்கு யதார்த்த சூழல் புரியாதுதான்…!! அவை சிங்களவனை கடுப்பேத்தி கிடைக்கிற கொஞ்ச்ச நஞ்சத்தையும் அனுபவிக்கவிடமாட்டினம் அவைக்கு என்ன அங்கை விஸ்கி பிராண்டி எண்டு போட்டுட்டு குஜாலா கிளப் வழிய கிடப்பினம் நமக்கு எப்பவாவது வருகிற Chancesய்யும் விடமாட்டினம். அதுசரி உந்த வெளியில இருந்து வாற ஆக்களை சும்மா போய்நிண்டு பிலாக்கா பாக்காமல் கடைசி காக்கா பிடிச்சாவது எங்கடை வருத்தங்களை சொல்லுங்கோ.. ‘தன்னை பெத்தாத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள் தம்பி கும்பகோணத்தில “கோ”தானம் செய்யுறாணாம்’ காலியில இலக்கிய மகாநாடு, கொழும்பில தமிழ் மகாநாடு இன்னும் என்னென்னவோ??…..  சும்மா தமாசுக்கு இல்லப்பா இவையெல்லாம் வயித்து பசிக்கில்லாட்டியும் அறிவு பசிக்கு வேணும். இல்லன்னா நம்மை சிங்களவன் ஏச்சுடுவான். 

    • சரவணா says:
      15 years ago

      ஆகா, மயூரன், உங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது. ஒரு பக்கத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை, மறுபக்கத்தில் சோபா சக்தி அடுத்தபக்கத்தில் புலி களின் அணுகு முறை இவை எல்லாம் சேர்ந்த கலவை நீங்கள். புலி அணுகு முறையும் சோபா சக்தியும் சேர்ந்து இலக்கியப் பேரவையைக் கொல்லும் போது உங்களிடமிருந்து இப்படியான சில முத்துக்கள் வெளிவரும்.
      நீங்கள் உதிர்த்த முத்துக்களில் புலிகள் எழுந்துவந்து “களத்தில் நிற்போர் மட்டும் தான் கருத்துச் சொல்லலாம்” என்கிறார்கள் அத்தோடு உங்கள் குருவின் சமரசப் மனோபாவமும் இணைந்து கொள்ள இதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறீர்கள். ம்.. பரவாயில்லையே..
      மயூரன், நானும் இலங்கைக்குள் இருந்து தான் எழுதுகிறேன். மக்கள் மூச்சுவிடக் கூடப் பயப்படுகிறார்கள். ஒரு பக்கத்தில் ஊடகங்களைக் கடாசும் மகிந்த மறுபக்கத்தில் இலக்கிய விழாவிற்கு அனுமதி கொடுக்கிறார் என்பதன் பின்னணி எல்லாம் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகப் பந்தின் எந்தப் பகுதியிலிருந்தாவது தமது அடக்கு முறைக்கு எதிரான குரல்கள் வருமா என மக்கள் எதிர் பார்க்கிறார்கள். அதான் அன்பரே .. நீங்கள் சொல்லும் வெற்றுக் கூச்சலைக் கூட..,

      புலிகளிலிருந்து சோபாசக்தியின் கையைப் பிடித்துக் கொண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையில் புகுந்து விளையாடுவது மாற்றம் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டுக்குள் உள்ளடக்கி விடலாம் என்றே வைத்துக் கொள்வோம். அதல்ல இங்கே பிர்ச்சனை உங்களின் இப்படியன கலப்பட முத்துக்களுக்கு தேசிய கலை இலக்கியப் பேரவை என்ன பதில் வைத்திருக்கிறார்கள்…
      அவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகத் தான் நீங்கள் துலாவுகிறீர்கள் என்றால் சரி .. நானும் இரகசியமாகவே வைத்துக் கொள்கிறேன்.

  5. Kumar says:
    15 years ago

    புலம் பெயா்ந்த மக்கள் கூட்டம் நாட்டைவிட்டு தப்பியோடியதும் பலா் புலிக்கொடியையே எப்போதும் தூக்கியதும் தவறாக இருக்கலாம் ஆனால் இந்தக்கூட்டத்தால்தான் ஒருவகையில் அங்குள்ளவா்கள் வயிற்றை நிரப்பமுடிகிறது என்பதோடு அரசாங்கமும் பயப்படுகிறது, பேச்சுக்களின் மூலம் தொடா்பை ஏற்படுத்த முனைகிறது, காரணம்,புலம் பெயா்ந்தவா்களின் கைகளில் பல ஆயிரம் கோடிகள் புரள்கின்றது சிறிய நாடான இலங்கையை நோக்கி அவ்வளவும் நகருமானால் எப்படிப்பட்ட மாற்றம் நிகழும் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், நம்மில் சிலரைத்தவிர.

     

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...