உலகம் முழுவதும் இடதுசாரிகளும், மனிதாபிமானிகளும், ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்ட்டுக்களுமே தேசிய இனங்களின் சுயாநிர்ணய உரிமைகாகக் குரல்கொடுக்கும் போது இலங்கையில் கம்யூனிஸ்டுக்கள் என்ற தலையங்கத்தில் நகல் போலிகள் மக்களை ஏமாற்றிவருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர் இலங்கை அரச கம்யூனிஸ்ட் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இலங்கை சிங்களஇ பெளத்த நாடாக இருந்தாலும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தினை தடை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் பிரிவினைகளை தவிர்த்து அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரே வழிமுறை தேசிய கீதம் மட்டுமே. ஒரு விழாவில் ஒரே சந்தர்ப்பத்தில் இரு மொழிகளில் தேசிய கீதத்தினை இசைக்க முடியாது. ஆனால் மொழி பெயர்ப்பு செயற்றிட்டங்களை உபயோகிக்க முடியும். சிங்களத்தல் தேசிய கீதத்தினை இசைப்பதில் தமிழ் மக்களுக்கு சிக்கல்தான் இருக்கின்றது என்றார்.
அதனால் தான் தமிழிலில் பாடுகின்றனர். தேசிய கீதத்தினை எந்த மொழியில் பாடினாலும் அது ஒரே அர்த்தத்தினை வெளிப்படுத்துகின்றது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இலங்கை சிங்கள பெளத்த நாடென்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பெளத்த கலாசாரங்களுக்கும் மதவிடயங்களுக்கும் முன்னுரிமை இருக்கின்றது. ஆனால் ஏனைய மதங்களும் இனத்தவர்களும் அடக்கப்பட வேண்டுமென எவரும் குறிப்பிடமுடியாது என்றார்.
Democracy is slow and democratic changes are permanent. That is the situation about the National Anthem. Once Kingsley Wckremaratne said, Vasi Deva and not Vasu Deva. He also mentioned about his son studying in America in the parliament. I will always remember the other thing he said. Sri Lankans are eating too much and doing less and less work. I thought he was talking about my weight. He also said in National Television that his spouse is of different religion and caste. I thought then and now too that he is indeed very Sri Lankan. .