24.10.2008.
இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை பாதுகாப்பு அமைச்சகம் இடைநிறுத்தியுள்ளது.
நடைமுறை பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய செய்திகள் இராணுவ தாக்குதல்களின் வெற்றியைப் பாதிக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மிக அண்மையில் நடந்த சில மோதல்களில் இலங்கைத் துருப்பினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல் வெளியிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கை விபரங்களை வேறொரு அரசாங்க திணைக்களம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.