பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில் அதி உன்னத நிலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக போர் முடிவடையும் கடைசிக் கட்டத்தில் இராணுவத்தினர் வேண்டுமென்றே படை நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டுள்ளனர் என்பதை ஆணைக்குழுவால் அவதானிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காயமடைவதையோ உயிரிழப்பதையோ தடுப்பதற்கான உத்திகளைப் படையினர் மிகக் கவனமாகக் கையாண்டமை அல்லது பொதுமக்களின் உயிரிழப்புகளையும் காயமடைவதையும் ஆகக் குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதில் அவதானமாக இருந்தமையைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று அறிக்கை கூறுகின்றது.
சர்வதேச சமூகம் என்ற போலியான அடைமொழியில் அழைக்கப்படும் மேற்கு நாடுகள் இனப்படுகொலையில் சூத்திரதாரியான மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுவாக ஏற்றுக்கொள்ளும் என எதிர்வு கூறப்படுகிறது.