நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் இலங்கை இராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து இராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று மாலை அங்கு சென்றனர்.
அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று குன்னூர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இன்றும் போராட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
எனவே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக குன்னூர் சோதனைச் சாவடியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருபுறத்தில் மன்மோகனுக்குக் கடிதம் எழுதும் ஜெயலலிதா மறுபுறத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக போலிஸ்படையை ஏவி போராட்டக்காரர்களை ஒடுக்குகிறார்.
இவர் சார்ந்த அதிகாரவர்க்கத்திற்கு ஆதரவளிகிகும் பிழைப்புவாதிகளின் பிடியியிலிருந்து ஈழப் போராட்டம் விடுவிக்கப்பட வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ◌அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு சரியானதை பிரசுரம் ◌செய்ய முயற்சி செய்யுங்கள். போலீசார்
தடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியாதா?
I heard the voice of Diplomat and Peradeniya Graduate Mr. Prasad Kariyawasam on the Radio. Police Powers.