வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விலையுயர்ந்த மரங்கள் இராணுவத்தினரால் சூறையாடப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் பகுதியில் வீடமைப்புத் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் நிறுவனத்திற்காக தமிழ்ப் பகுதிகளிலிருந்து இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டு தெற்கு நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. மக்கள் குடியிருக்கும் வீடுகளிலிருந்தே இவ்வாறான மரங்கள் வெட்டப்படுகின்றன. பாரிய அளவில் நடைபெறும் இந்தச் சூறையாடலில் தமிழ் முகவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தொடருமானால் வடகிழக்கில் பருவகாலமழை வீழ்ச்சி அருகிப்போவதற்கான அபாயம் காணப்படும் என்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வவுனியா பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுமட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படும் தொடர்ச்சியில் நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது
இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர்.
தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது என்பதுடன் இதற்கு வெற்றிலையில் தெரிவு செய்யபட்ட யாழ். மாநகர சபையின் முதல்வர், வெற்றிலையில் தற்போது வாக்கு கேட்பவர்களின் அனுமதிக்கு அமையவே உடைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
மேலும் nuNyh ,af;f Nghuhspfis Gypfs; capUld; vupAk; neUg;gpy; J}f;fp tPrp nfhiy nra;tjpy; ,tUf;Fk; fpl;Ltpw;Fk; ,ilapy; fLk; Nghl;b epytpajhf aho; kf;fs; ,d;Wk; epidT $u;fpd;wdu;. ,NjNghy; nuNyh jiytu; rpwP rghuj;jpdj;jpdj;ij nfhiy nra;tjpy; ntwpeha;Nghy; Juj;jp jpupe;jJk; ,Nj jpyPgd;jhd;. Mdhy; vd;dNth rpwP ia nfhy;Yk; ‘ghf;fpak;’ fpl;Ltpw;Nf filrpapy; fpilj;jJ.