இலங்கையில் பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் அடைத்து வைக்கப்படுச் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கில் வறுமை தலைவிரித்தாடுகிறது. கிழக்கு இலங்கையில் நிலவும் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது. அரசாங்கம் போரில் அழித்த வீடுகளை மீளமைப்பதற்குப் பணம் இல்லை என்று கைவிரிக்கிறது. இலங்கை நாலாம் மண்டல நாடாக தாழ்ந்து செல்கிறது. இந்த நிலையில் அரச துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவா இலங்கை பணக்கார நாடு என்று சொல்கிறார்.
2004ம் ஆண்டு இலங்கையின் தனிநபர் தலா தேசிய வருமானம் 1062 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாகவும், 2009ம் ஆண்டு தலா தேசிய வருமானம் 2053 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கண்டத்தின் அதிசயமாக இலங்கையை இந்த அரசாங்கம் மாற்றியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் இல்லாத அபிவிருத்தியோ அல்லது அபிவிருத்தி இல்லா சமாதானமோ நீடிக்காது என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர் அதிசயமானவர்தான். ஒரு மக்கள் பிரதிநிதி என்று இருப்பவர், பாராளுமன்றத்தில அங்கம் வகிப்பவர் சூளைமேடு, தமிழ்நாட்டிலை செய்த கொலைக்கு இதுவரை பிராயசித்தம் தேடவோ, வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ மனமில்லாமல் ஒரு மனச்சாட்சி இல்லாமல் அதெல்லாம் இந்திய இலங்கை உடன்படிக்கையுடன் முடிந்துவிட்டது என்று அறிக்கையும் விட்டு பேட்டியும் கொடுப்பவர் இப்போ அவர் அங்கம் வகிக்கும் பாராளுமன்றத்திலையே அதே யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த ஓர் பெண் தன் கணவனை (பாராளுமன்ற அங்கத்தினனாக அங்கம் வகித்த) கொன்ற கொலையாளியை கண்டு பிடிக்குமாறு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததும் பிரயோசனமில்லாமல் கடந்த வரவு செலவு விவாதத்தில், அப்பெண் வரவு செலவு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது அனாவசியமாக குறுக்கிட்ட இதே ஆண் அமைச்சரை என் கணவரை கொன்றவர் நீ தானே என்று கேட்க அதற்க்கு தகுந்த பதில் கொடுக்க முடியாமல், அது வழக்கில் உள்ளது என்று சலாப்பவர் ஓர் அதிசயமானவர்தான்.
இப்போ, ” நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையைத் தவறான முறையில் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது ஆதாரமற்ற அவதூறுகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகின்றனர். இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் பீடத்தினரும் கட்சி சார்ந்த நாடாளுமன்றக் குழுவினரும் ஆலோசித்து வருகின்றனர்” என்று வேறு அறிக்கை
மேலும், “மக்கள் பணிகள் குறித்து மக்களிடமிருந்து பெருகிவரும் பேராதரவு போன்றவற்றைக் கண்டு சகிக்க முடியாத சிலர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது திட்டமிட்ட முறையில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்” ஒ இவேன்ரை “மக்களிடமிருந்து பெருகிவரும் பேராதரவு” வள்ளல் தெரியும் தானே.
இது என்னவென்றால் கண்ணகி மதுரை அரசவையில் நீதி கேட்டதுபோல் முதல் தடவையாக ஓர் பெண் பாராளுமன்றத்தில் நீதி கேட்டது இவர்கள் கூட்டம் எதிர்பார்க்காதது.
எத்தனை பெண்களை விதவையாக்கியவருக்கு இப்போ நல்ல ஆப்பு. இதற்குதான் கொமுனிசம் பேசியவர் போற இடமெல்லாம் கோவில் கோவிலாக திரியிறார் போல. என்ன இருந்தாலும் தகப்பனை கொன்ற பாதகனை அந்த பிள்ளைகள் தன்னும் மறக்குமோ. இப்படி எதனை பேரின் வயிறு மனம் எரியும். இவையெல்லாம் இந்தக்கூட்டத்தை சேந்தவர்களை சும்மா விடுமா? இவர்களைப் போன்றோர் மனிதன் இயற்றிய சட்டத்திலிருந்து தப்பலாம், ஆனால் தர்மம் என்று ஒரு இருக்கிறது. இவருடன் இருந்த கே. எஸ். ராஜா, தினமுரசு ஆசிரியர் அற்புதன், பால நடராஜா ஐயர் எப்படி இறந்தார்கள் என்று மனம் திறந்து சொல்லட்டும் பார்ப்போம். ஆவி என்று ஒன்று இருந்தால் இவர்களின் ஆவி இவர்களின் கொலைக்கு பொறுப்பானவர்களை சும்மா விடுமா? இப்படி எத்தனை அநியாயக் கொலைகள். இதுக்கு கட்சியின் பெயர் வேறு ‘மக்கள் ஜனநாயக கட்சி’. இப்போ மாகாணசபை தேர்தலை நோக்கி ‘தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம்’ என்ற பெயரில் காய் நகர்த்துகிறார்கள். கூட்டு சேர்ந்த மற்றவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்டுக்காசை இழந்தவர்கள், அவர்களுக்கும் மக்கள் முன் செல்ல வேறு வழியில்லை. இவர்களின் கூட்டின் வண்டவாளங்களும் ஊரரிந்ததுதானே. எல்லோரும் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள. இதற்க்கு மகிந்தவின் கே.பி கூட்டமைப்பு சேர்ப்பு நல்ல ஆப்பாகப்போகிறது. மகிந்தவின் ஆசியுடன் கே.பி கூட்டமைப்பு சேர்ப்பு மாகாணசபை தேர்தலில் களத்தில் இறங்கினால் இந்த ‘தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம்’ செர்ந்தவர்கட்கு கட்டுக் காசும் கிடைக்காது.
டெல்கிகாரன் டெல்கி வடக்கன் மருமகன் மகள் குடும்பத்துடன் சேர்ந்துவிடுவார், இல்லாவிட்டால் நடிகை மகளுடன் ஊர் சுற்றுவார், வன்னிக்காரர் வன்னியில் இருந்து விரலுக்கு ஏற்ற வீக்கம் போலாவோ பானையில் இருப்பதை அகப்பையில் எடுப்பதைபோலவோ, ஏசுநாதர் அப்பத்தை பகிர்ந்து கொடுத்ததை போலவோ எதோ தம்மாலானத்தை செய்து கொண்டு இருப்பார், தலைவரும் ஒருவரே கட்சியும் ஒருவரே என்று அரசாங்கத்தின் பாதுகாப்பிலும் வன்னிக்காரரின் தயவிலும் இருப்பவர் வழைமை போல் அடுத்த தேர்தல் வரும் மட்டும் உலகம் சுற்றிக் கொண்டு எதோ நேரம் போக்குவதற்கு தட்டச்சில் அடித்து தானும் இருக்கிறேன் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். ரவிராஜை, மகேஸ்வரனை போட்டவர்தான் சூலைமேட்டுக்கும் போக முடியாது சிங்கப்பூர், லண்டன் தான்.
இதற்க்கு என்றுதான் உண்மையான மக்கள் ஆணை கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை. எல்லாம் மகிந்தவின் கே.பி- கூட்டமைப்பு வேண்டுமா அல்லது இதே மக்களை பகடைக்கைகளாக வைத்திருக்கும் முன்னால் போராளி தொடர்ந்து வேண்டுமா என்ற அடுத்த காய் நகர்த்தலில் தான் இருக்கிறது.
எதோ தர்மம் என்றோ ஒருநாள் வெல்லும். அன்று இவர்கள் உண்மையான அதிசயத்தை பார்ப்பார்கள்.
இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு நம் அடையாளம்.சிந்திக்கத் தெரியாத மனிதக் கூட்டமாய் அதிகாரங்களூக்கு மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.மனித உயிர் மதிப்பற்றூ நாசம் செய்யப்படுகிறது.கோத்தபாயா போன்ற மனநோயாளீகள் பிதற்றூவதை உலகமும் கேலி செய்கிறது தேவானந்தாவை நாம் கேலி செய்கிறோம்.நினைத்துப் பார்த்தால் நம் வாழ்க்கை வசந்தமாய் கடந்தது.கூலித் தொழிலாளீயும் ஒரு துண்டுக் காணீ வைத்திருந்த தேசம் இன்றூ இராணூவ முகாம்களாய் மாறீப் போய்க் கிடக்கிறது.
ஐயா
ஒன்று மட்டும் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
நீங்கள் எல்லாம் தாய் நாட்டிற்காக, தமிழீழ விடிவிற்காக புறப்பட்டவர்கள் தானே?
புலி பிரித்து விட்டது என்று தானே புலம்பினீர்களென்றிருந்தோம் – இனியாவது எம்
தமிழ் தாய் மானம் காத்து விலங்குடைக்க
இறுதி சந்தர்ப்பமிது
வருவீரோ இல்லை வாழாதிருப்பீரோ?
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
ஈழவன்