விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஒரு சிலர் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெரும்பாலான போராளிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சமூகத்திலிருந்து அவர்கள் திட்டமிட்டுத் தனிமைப்படுதப் படுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை 6000 போராளிகள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகின்ற போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. புலிகளின் பிரதான உறுப்பினர்கள் சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கைப் பிரதமர் பாராளுமன்றத்தில் வழங்கிய இந்த வாக்குமூலம் இலங்கை அரச பாசிசத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டுகின்றது.
புலிகள் “தற்கொலை” செய்வதை வீரத்தின் சகுனமாகக் கருதியவர்கள். பலரைக் கொலை செய்தவர்கள். சாதாரண மக்களின் உழைப்பைக் கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள். அவர்களால் திடீரென்று சாமான்யர்களுடன் “சேர்ந்து” உழைத்து வாழ முடியாது. இவர்களின் அட்டகாசங்களை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் கண்டிப்பாக இவர்களை ஒதுக்கியே வைப்பர் என்பதை உணர்வதுநல்லது. பிரதமரின் கருத்தில் என்ன “பாசிசம்” இருக்கிறதென்பது புரியவில்லையே!
கக்குவது இலகு, ஆனால் அதை அள்ளி வழித்து சுத்தம் செய்வது யார்? நாற்றம் தங்க முடியவில்லை. இதை விளங்கிக்கொள்ள ஆகக் குறைந்தது ஐந்தாம் வகுப்பென்றாலும் படித்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் புரியாமல் புரக்கடிக்கும்.
வரலாற்றிலேயே அதிகளவு தமிழர்களைக் கொன்று கொள்ளையடித்த புலிக் கும்பலை “போராளிகள்” என்று நாமகரணம் செய்வதே அபத்தமான “பாசிச” முகம். 5 ஆம் வகுப்பு பிரபாகரன் “தேசிய தலைவர்” என்று கூக்குரல் இட்டதே பாசிசத்தின் அகோரம். அந்த நாத்தம் காணாமல் போக பல காலம் செல்லும்.