Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை அரச தொங்குதசைகளின் மேதின ஊர்வலம் : அசோக் யோகன்

இனியொரு... by இனியொரு...
05/27/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

srilanka03வீடு பற்றியெரியும் போது பீடி பற்றவைப்பதற்கு நெருப்புக்கேட்ட மனிதனை சுயநலவாதி என்ற முது மொழி இன்று தமிழ் அரசியல் பரப்பில் காலாவதியாகிவிட்டது. ஒரு தேசமே பற்றியெரிகின்ற போது தமது வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்கின்ற கூட்டம் எமது நிழலை மிதித்துச் செல்வதைக் காண்கிறோம். அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ‘அடையாள அரசியல்’ என்பது மக்களைப் பிரித்து, பிளவுபடுத்தி அழித்துச் சூறையாடுவதையே அடையாள்ம் என்கிற மனித குல அவலத்தைப் பார்க்கிறோம்.

புலிகள் நிகழ்த்திய வன்முறைத் தர்ப்பாருக்குள் பதுங்கியிருந்த விசமிகள் கூட்டம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தி அழிவுகளின் இடுக்கில் வடியும் குருதியைச் சுவைப்பதற்காக தெருவிற்கு வந்திருக்கிறார்கள். அதுவும் வஞ்சம் புகுந்த மார்பை நிமிர்த்தி மக்கள் மத்தியில் நச்சை விதைக்கிறார்கள். புற்று நோய் போன்று சமூகத்தின் ஒவ்வோர் அங்கங்களிலும் நச்சை விதைக்கிறார்கள்.

மனித குலத்தின் அரசியல் அறம் என்பதை கொலைகளால் அழித்துச் சுவைத்தவர்கள் தொழிலாளர் தினத்தைக்கூடக் கொச்சைப்படுத்த தவறவில்லை.

பிள்ளையானும் கருணாவும் புரிந்த போர்க்குற்றங்களின் பின்னணியில் செயலாற்றிய பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் எம்.ஆர்.ஸ்டாலினின் அடையாள அரசியல் பரிஸ் வீதிகளில் சிவப்புக் கொடியோடு மேதின இரத்தம் கேட்டது.

gnam -pilayaanகிழக்குப் பிரிவினைவாதியின் அடையாளம் தமிழ்ப் பேசும் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பல மில்லியன்களோடு அடங்கிவிடவில்லை. பரிசிலிருந்து மட்டக்களப்பிற்குச் சென்று பிள்ளையானின் தேர்த்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்து திரும்பியதோடு பசியாறவில்லை. இன்றும் தொடரும் இவர்களின் இறுமாப்பிற்கு செங்கொடி துக்கிக்கொடுத்தது முன்னிலை சோசலிசக் கட்சியும், சம உரிமை இயக்கமும் அதன் ஏகப் பிரதிநிதியான ரயாகரனுமே.சின்ன மாஸ்டர் என்ற எம்.ஆர்.ஸ்டாலின் குழுவிற்கு முன்னிலை சோசலிசக் கட்சி இப்போது பாதுகாப்பு அரண். இவர்களின் இணைவு சோசலிசத்திற்குச் சாபக்கேடு.

இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும் போது இந்த அடையாள அசிங்கங்கள் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக சம உரிமை இயக்கத்தோடும் முன்னிலை சோசலிசக் கட்சியோடும் கைகோர்த்துக்கொள்கிறார்கள்.

பிள்ளையானின் கிழக்கு அடையாளத்திற்கு மக்கள் செருப்படி வழங்கிய கதையையெல்லாம் இவர்கள் கண்டுகொள்வதில்லை. காலகாலமாக வடக்கிலும் கிழக்கிலும் ஒடுக்கப்படும் தலித்துக்கள்இவர்களின் தலித் கதையாடலுக்கும் கூறுபோடுதலுக்கும் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டார்கள்.

அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை எங்காவது ஒரு இடத்தில் கூறுபோட முடியுமானால் அங்கே இந்தக் கும்பல் தனது கைவரிசையை ஆரம்பித்துவிடும்.

Oஇவ் இன்னோரன்ன இலங்கை அரச ஆதரவுக் கும்பல் உருவாக்கிய அமைப்பே இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம். பிரான்ஸ் இலங்கை துதரகத்தின் ஆசியோடு தோற்றம்பெற்ற இந்த அமைப்பு முதல் தடவையாக பாரிசில் மே தினம் நடத்தியது. புலம் பெயர் தமிழர்களின் மேதின ஊர்வலமா போர்க்குற்றவாளிகளினதா என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை.

பாசிசத்தின் தொங்குதசைகளான இந்தக் கும்பல் சம உரிமைக்காக கிளம்பியிருப்பது வியபுக்குரியதல்ல. சுயநிர்ணய உரிமை என்றாலே தீண்டாப் பொருள் என்று பதைபதைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி தோற்றுவித்த சம உரிமை இயக்கம் எம்.ஆர்.ஸ்டாலின் அல்லது சின்ன மாஸ்டர் என்ற பிள்ளையானின் ஆலோசகரோடும் இலங்கை அரச ஆதரவு தலித் முன்னணியோடும் இவர்களின் ஜால்ராக்களோடும் ஐக்கிய முன்னணி கட்டியிருப்பது தற்செயலானதல்ல.

மே தினத்தன்று பாரிஸ் நகரில் இக் குழுக்களுன் ஒன்றுகூடலில் “அராஜகத்தை அழிப்போம், அமைதி வேண்டி அராஜகம் அழிப்போம், இனங்களுக்கு சம உரிமை, வேற்றுமையைக் கடந்து ஐக்கியப்படுவோம்” போன்ற சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை என்ற நாட்டினுள் பாலும் தேனும் ஒடுவது போன்றும் யாரோ இனம் தெரியாத பூதங்கள் அராஜகம் புரிந்து வருகின்றன என்பது போலவும் சுலோகங்களை முன்வைத்தார்கள். இன அழிப்பு என்பது இவர்களது கண்ணுக்கு அராஜகமாகத் தெரிகிறது போலும்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தில் இணைந்து இனச் சுத்திகரிப்பில் ஈடுபடும் இந்தக் கும்பலின் ‘இராணுவத்தலைவன்’ கீரனின் அராஜகம் சமாதானத்துக்கானதாக தெரிகிறது போலும்.

இலங்கையில் காணாமல் போய் விடுபட்டுக்கொண்ட பிரேம்குமார் குணரத்தினத்தின் பாரிஸ் ஏகப் பிரதிநிதியான ரயாகரனும் இந்த அரச ஆதரவுக் கும்பலோடு இணைந்து இடது பாட்டாளி வர்க்கப் புரட்சியை மே தினத்தன்று நடத்தினார்.
இவர்களின் வன்மம் அழிக்கப்பட வேண்டியது. மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவோருவரும் இவர்கள் தொடர்பாக எச்சரிக்கையடைய வேண்டும்,

இவர்கள் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள். அங்கு பேரினவாதம் இல்லை சுய நிணய உரிமை என்ற ‘இனவாதக் ‘ கோஷமே பிரச்சனையானது என்று போலிப் பிரச்சாரம் செய்கிறார்கள். இலங்கை அரச தொங்குதசைகளான இந்தக் கும்பலின் அரஜகம் அழிக்கப்படுவது மக்களின் சமாதனத்திற்கு அவசியமானது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அசாத் சாலி கைதிற்கு எதிரான போராட்டம்

Comments 9

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Our Chellaih Rajadurai like to say that you have to kick everything up and so when all that settles down you will have a sense of what is happening.

  2. அரசு-மணி -குமார் says:
    13 years ago

    சிறீலங்கா அரசாங்க ஆதரவு இணையமான தேனீ இணையத்தளத்தில் இந்த இலங்கை ஒருமைப்பாட்டு மையம் பற்றிய செய்திகள் வந்தபோது இவ் அமைப்பின் பின்னணி பற்றி எங்களுக்கு சந்தேகம் வந்ததது. சிறீலங்கா அரசு சமீபகாலமாக தங்களது எம்பசி ஊடாக அந்தந்த நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்புக்களை உருவாக்குகிறார்கள். இதனாலேயே தேனீயில் செய்தி வந்தபோது சந்தேகப்பட்டோம். சந்தேகம் தீர்ந்தது. தோழர் அசோக் யோகன் உங்கள் நாட்டில் வசிக்கும் ஈழ எழுத்தாளர் சோபாசக்தி அவர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டாரா? அறியவிரும்புகிறோம். நன்றி.

  3. அசோக் யோகன் says:
    13 years ago

    தோழர்கள் அரசு – மணி – குமார் நீங்கள் மேல் குறிப்பிட்ட சோபாசக்தி என்ற நபர் இலங்கை அரச தொங்கு தசைகளின் மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

  4. Thavaraj says:
    13 years ago

    இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து வேலைசெய்தால் என்ன? அதில் என்ன பிழை?? அப்படியாவது அவர்களோடு சேர்ந்த்து பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு உதவிசெய்யலாம் தானே?நீங்கள் இதுவரைக்கும் என்ன செய்திர்கள். முப்பது வருடமாக தவளை மாதிரி கத்தியே செத்துப் போக போகிறீர்கள்.

    • Kumar says:
      13 years ago

      புலிகளாக இருந்தபோது தமிழ் மக்களை துன்புறுத்தியவா்கள்,பின்பு புலிகளையே காட்டிக்கொடுத்த துரோகம் இழைத்தவா்கள் இப்போது பேரினவாதிகளின் அடிமைகளாக இருந்து அண்டிப்பிழைப்பு நடத்துவதே சிறந்தவளியென்று தத்துவம் பேசுகின்றார்கள் இந்த அா்த்தமற்ற பிறவிகள். இவா்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் எங்காவது உண்டா என்பதே கேள்வி.

      இரந்து வாழும் இலங்கை அரசிடம் இருந்து இவா்கள் உதவி பெற்று தமிழா்களுக்கு வாழ்வளிப்பதை நம்பி மோசம் போகாமல் நம்மையே நாம் நிர்வகித்து நமது உழைப்பில் கெளரவமான மனிதா்களாக வாழும் வளியை தேடமுற்படுவோம் தேவராஜ்.
      ஆமா யார் அந்த சோபா சக்தி?

      • S.G.Ragavan says:
        13 years ago

        சோபா என்கின்ற  சக்தி கொடுக்கக் கூடிய திருநம்பி இவர் அவரே சொன்னாரே பாருங்கள் இவ்வாறு…… நடுவாலே  போனதால் என்னை ‘பாதி தொங்குதசை’ எனச் சொல்வதே சரியானது என்று.

        ஏற்கனவே அம்பலப் பட்டவர்களை, அம்பலத்தில் இருப்பேன் என அடம் பிடிக்கும் இவர்களை அம்பலப் படுத்தல் என பத்தி எழுதுவதை விடுத்து ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்வோம். கட்டுரை பல தர்க்க நியாயங்களில் தடம் பதித்தாலும் இவற்றை தாண்டி இவர்களை விட மிகக் கடின பக்கங்களை நாம் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.

  5. shobasakthi says:
    13 years ago

    நான் இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்திற்கும் சம உரிமை இயக்கத்துக்கும் நடுவாலே பேரணியில் போனதால் என்னை ‘பாதி தொங்குதசை’ எனச் சொல்வதே சரியானது.

  6. watch human says:
    13 years ago

    பிள்ளையானும், கருணாவும் புரிந்த போர்க்குற்றங்களின் பின்னணியில் செயலாற்றிய பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் எம்.ஆர்.ஸ்டாலினும், பெண்ணிய பெருந்தகை!!! சனநாயகப் பெருமகன்!!! பெண்ணிய காப்பாளன்!!! சோபாசக்தியும் பரிஸ் வீதிகளில் சிவப்புக் கொடியோடு மேதின இரத்தம் கேட்டு பவனிவரும் காட்சி.
    தமிழ் நாட்டு ”பெண்ணியச் செம்மல்கள்”; சோபாசக்தியின் தொங்கு தசைகளுக்கு watch human னின் சமர்ப்பணம்!!!
    https://www.facebook.com/photo.php?fbid=164480743718891&set=a.104276259739340.10345.100004708987476&type=1&theater

  7. ஒணான்  says:
    13 years ago

    ஒரெ… புழுக்கமாய் இருக்கு, ஐரொப்பாவில் வெயில் காலம் ஆரம்பிசசுட்டோ  ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...