ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக சமாதனத்தின் காவலர்கள் என்ற நம்பிக்கை பல தடவைகள் சிதறடித்துள்ளது எனினும், இலங்கைப் பிரச்சனையில் வெளிப்படையாகவே இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவதனூடாக இனப்படுகொலைக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்க முனைகிறது. பன் கீ மூன் மற்றும் அவரின் நிர்வாகாக் குழுவும் பல தடவைகள் இது குறித்து விமர்சிக்கப்பட்டன. இப்போது கோடன் வைஸ் இன் சாட்சியிலிருந்து ராஜபக்ச அரசைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஐ.நா இறங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் அண்மையில் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்களாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு பிரதிபலிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அல்லது சிரேஸ்ட அதிகாரிகளினால் மட்டுமே உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை இராஜினாமா செய்த கோர்டன் வைஸ் வெளியிட்ட கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் நிலைப்பாடாக கருதப்பட முடியாது எனவும், அவை தனிப்பட்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் சேத விபரங்கள் தொடர்பில் நம்பகமானத் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும், அதனால் அவை குறித்து உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட முடியாது எனவும் அறிவித்துள்ளது.
இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை காப்பாற்ற முயற்சி எடுப்பீர்கள் என்பது ஏலவே தெரிந்தது தான்!ஆனால்,போர்க் குற்ற விசாரணை என்று ஒன்று நடந்தால் முன்னாள் அய்.நா பேச்சாளர் என்ற முறையில் அவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படுமா, இல்லையா?ஜோர்ஜ் புஷ் கூட பதவியை விட்டுப் போன பின் ஈராக் போர் தவறானது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்!அவரின் கூற்றை எவரும் மறுக்கவில்லையே?ஈராக்கில் அணுவாயுதங்கள் எவையுமில்லை என்று அய்.நா பரிசோதகர்கள் உறுதிப்படுத்திய போதும்,புஷ் நம்பிக்கையற்ற நிலையிலேயே தன்னிச்சையாக பிரித்தானியாவை துணைக்கழைத்து ஈராக்கை துவம்சம் செய்தார்!அதே பாணியில் தானே வன்னிப் பெரு நிலப் பரப்பில் வெறும் நாற்பதாயிரம் மக்கள் தான் சிக்குண்டிருக்கிறார்களென்று பொய்யுரைத்த சிறீ லங்கா அரசை நம்பினீர்கள்.முட் கம்பி முகாமுக்குள் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அடைத்த போது கூட சிறீ லங்கா அரசை கேள்விக்குள்ளாக்க உங்களால் முடியவில்லை!கோர்டன் வைஸ் சொல்வது உண்மையென்று தெரிந்தும் கூட,நீங்கள் கையறு நிலையிலேயே இப்போதும் கூட இருக்கிறீர்களென்பது புரிகிறது!ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?…………………………………………………………………….ஏன்?
கண்னை மூடி ஆழ்ந்த தூக்கதில் இருப்பதாய் அய்.நா. நடிக்கிறது எப்படி எழுப்பமுடியும்?