தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று மற்றும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இதன்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் காணிப்பதிவு, மன்னாருக்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமை, சம்பூர் மற்றும் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களின் மீள்குடியேற்றம், மணலாறு என்ற வெலிஓயா என்று தற்போது அழைக்கப்படும் பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டுள்ளமை ரத்துச் செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்டன.
குறிந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் அத்துடன் அதற்கான பகிகாரங்களையும் வழங்க வேண்டும்.
அதுவே, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்ல உதவும் என்று தமது தரப்பு கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.