மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. மகேந்திரன் ஞாயிறன்று வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளரும் இந்நாளில் இலங்கை அரசின் ஆதரவாளருமான குமரன் பத்மநாதன் நேற்று (21.8.2010) இலங்கையில் பத்திரிகைக்கு ஒரு பேட்டி யளித்துள்ளார். அதில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திர னிடம் இலங்கை ராணுவத்திற்கும், விடு தலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத் தம் கொண்டுவரும் ஆலோசனை சொன்ன தாகவும், இத்தகவலை கே.மகேந்திரன் மதிமுக தலைவரிடம் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை நான் முழுமையாக மறுக்கிறேன்.நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். எனக்கோ, என் னுடைய கட்சிக்கோ விடு தலைப்புலிகளோடோ, மேற் கூறிய நடேசனோடோ எந்தக் காலத்திலும் எந்தவிதத் தொடர் பும் இருந்ததில்லை. இலங் கைத் தமிழர்கள் சொல் லொண்ணா துயரத்திற்கு ஆளான போது இப்பிரச்ச னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியான சுமூ கத்தீர்வு காண வேண்டும் என்ற நிலையைத் தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் எங்கள் கட்சி வலியுறுத்தியது. இப்போதும் எங்கள் கட்சி அதையே வலியுறுத்துகிறது. விடுதலைப்புலி களின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எப்போதுமே ஏற்புடையதல்ல.எனவே போர் நிறுத்தம் குறித்து என் னிடம் நடேசன் பேசியதாக குமரன் பத்ம நாதன் அளித்துள்ள பேட்டியில் கூறப் படுவது உண்மையானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்.