ஈ.பி.டி.பி உறுப்பினர் எனவும் புலனாய்வாளர் எனவும் கூறிக்கொண்டு பல்கலைக்கழக மாணவனொருவனை அச்சுறுத்திய ஒருவர் சில மணி நேரமாக அவரை மிரட்ட்லுக்கு உட்படுத்தினார்.. எனினும் பின்னர் பொதுமக்களதும் ஊடகவியலாளர்கள் சிலரதும் தலையீட்டையடுத்து மாணவன் விடுவிக்கப்பட்டதுடன் குறித்த நபர் விசாரணைக்கென பொலிஸாரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை யாழ்.நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பல்கலைக்கழக மாணவன் புதிய அண்டு மாணவியான தனது தங்கையின் செயற்றிட்டத்தை போட்டோ பிரதி பெறுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்துள்ளான்.
இதன் தலைப்பு யுத்தத்தின் பின்னரான சமகால சூழலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எற்படுத்த அகிம்சையே ஒரே வழி என்பதே. இந்நிலையில் போட்டோ பிரதி எடுக்கும் இடத்திற்கு வந்த அந்த நபர் குறித்த செயற்றிட்டத்தை வாங்கிப் பார்த்துவிட்டு யார் நீ? ஏப்படி நீ எழுதலாம் என்றெல்லாம் அச்சுறுதியுள்ளார்.
இதற்கு குறித்த மாணவன் நீங்கள் யார்? என வினவியபோது தான் ஈ.பி.டி.பி எனவும் புலனாய்வாளர் எனவும் உன்னை சுடுவேன் எனவும் அச்சுறுத்தி குறித்த மாணவனது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவனை அச்சுறுத்தியுள்ளான்.