போர்க்குற விசாரணைகளின் ஊடாக ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாகக் கூறும் பிரித்தானியாவின் தமிழர் அமைப்புக்கள் 2007 ஆண்டிலிருந்து இலங்கை பாசிஸ்டுக்களின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கோபிதாஸ் விசுவலிங்கம் என்ற தனி மனிதனைக் காப்பாற்ற முடியாமல் பலிகொடுத்துள்ளனர். 43 வயதான கோபிதாஸ் 7 வருடங்களாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டமைக்கான காரணம் புலிகளுக்குப் பணம் வழங்கியமை என்பதாகும். இலங்கை அரசின் அடியாட்களாகச் செயற்படும் நூற்றுக்கணகான தமிழர்கள் ராஜபக்சவின் மாளிகைக்குள்ளும் ஐந்து நட்சத்திரவிடுதிக்குள்ளும் விருந்துண்ணும் போது சிறைக்குள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் அவமனாம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் கல்விபயல வரும் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைச் சட்டங்களை டேவிட் கமரன் அரசு நிறைவேற்றிய போது வேற்று தேசங்களைச் சார்ந்த மக்களின் எதிர்ப்புக் குரல்கள் பரவலாக எழுந்தன. பிரித்தானியத் தமிழர் அமைப்புக்களின் துண்டறிக்கைகூட இதற்கு எதிராக வெளியிடப்படவில்லை. ஆளும் கட்சிகளின் ஆதரவாளர்களும் அவர்களோடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஐந்தாம் படைகளுமே தமிழர்களின் தலைமைகள் என்ற அவமானம் தமிழ்த் தேசிய இனத்தையே சாரும். இந்த அவமானத்திற்கு அவர்கள் புலி ஆதரவாளர்கள் என்ற முகமூடியை அணிந்துள்ளனர். மரணச் சடங்குகளும், உலகின் பிழைப்புவாதிகளை அழைத்து இவர்கள் நடத்தும் கூட்டங்களும், தன்னார்வ நிறுவனங்களும் இவர்களுக்கான பணத்தின் ஊற்று மூலம்.
இதன் மறுபக்கத்தில், நாம் வாழும் உலகின் பயங்கரவாதிகளில் மிகவும் முக்கியமானவரும், உலகின் கிரிமினல்கள் குறிப்பிடத்தக்கவருமான ராஜபக்சவுடன் விருந்துண்டு வியாபாரம் செய்யும் ஒரு குழு உருவாகியுள்ளது. முன்னை நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனும், தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆயுதக் குழுவினை இந்திய அரசுடன் இணைந்து தோற்றுவித்தபோது அதனை வழி நடத்தியவருமான பகிதரன் அமிர்த்தலிங்கம் கடந்தவாரம் ராஜபக்சவுடன் விருந்துண்ட அருவருப்பு வெளியானது. ராஜபக்சவின் அபிவிருத்தி என்ற அழிப்பை அவர் நியாயப்படுத்திய செய்திகளும் வெளியாகின.
இலங்கை அரசு சிறைச்சாலைக்குள் வைத்து கொலைசெய்த கோபிதாசின் அரசியல் கொலைக்கு இந்தப் பிழைப்புவாதிகள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.
பிரித்தானிய அரசு கோபிதாஸ் கைது செய்து விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டதை அறிந்திருந்தது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்துப் பேசியிருந்ததாகக் கூறுகிறார்.
தனது நாட்டின் சொந்தப் பிரஜையே பாதுகாக்கத் திரணியற்ற பிரித்தானிய அரசு போர்க்குற்றத்திற்காக ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாக நாடகமாடி வருகிறது.
கோபிதாசின் மரணத்தை அடுத்து, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிட்டனிலிருந்து இலங்கை சென்றுள்ளனர் .இந்நிலையில் அவரது சடலம் பொறுப்பேற்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அவரது மரணத்தினில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் குடும்பத்தவர்கள் கோரியுள்ளனர்.
Whu can’t you do somthing about it ? Perhaps pick you phone and call MR right away. You make it sound like it is so easy for you but not others ?
பகீரதன் விருந்துண்ண போகவில்லை. அவர் பேராசிரியர் ஹுலை யாழ் பல்கலைக்கழகத்தின பேராசிரியராக சிபார்சுசெய்யவே போயிருநதார். தகவல்களை சரிபார்த்து பிரசுரிக்கவும்.
பகீரதன் சிபார்சு செய்து… hmm…
பச்சை பொறுக்கி பரதேசி என கொச்சையாக பகீரதனை அழைப்பவர்களும் உண்டு. சந்தர்ப்பவாதி சமுகத் துரோகி என்றும் அழைக்கிறார்கள்.மேட்டுக்குடி மிதவாதி அமிர்தலிங்கத்தின் வாரிசு என்றும் அழைக்கமுடியாது. இந்திய உளவுத்துறையின் அள்ளக்கை அமிர்தலிங்கம் தன் மகன் காண்டீபனை வைத்து உருவாக்கிய TENA என்கின்ற ராணுவ அமைப்பே அமிர்தலிங்கத்தை மிதவாதி அல்ல என்று நிருபிக்க போதுமானது. மிக முக்கியமான அன்றைய கால கட்டங்களில் தமிழ் தலைமையை பொறுப்பேற்ற விட்டேத்தி அமிர்தலிங்கம் இன்றைய அவல நிலைமைகளுக்கு காரணம் என்பதை எவரும் மறுக்கவில்லை. தமிழ் அமைப்புகளை ஒற்றுமை படுத்தினால் தனது பதவிக்கு ஆபத்து வந்திடும் எனப் பயந்து இயக்கங்கள் பிரிந்து இருப்பதையே விரும்பிய பெருமகன் அவர்.
அவரது மகன் பகீரதன் என்கின்ற பக்கிரி இன்னொரு காமடி பீசுக்கு VC பதவி வாங்கி கொடுக்க அலைவது ஒன்றும் வியப்பில்லை. பாருங்கள் இரத்தின ஜீவன் கூலின் கூத்தை சந்திரிகாவை, ராயபக்சாவை பிடித்து VC யாக வர விரும்பினார். முடிந்தது ஆனால் முடியல… புலிகளிடம் தூது விட்டார் முடியல… முடியல…. முண்டி கூடப் பார்த்தார். இறுதியில் தெருவில போனவன் வந்தவன், ஜீவன்ஹூலை யார் எண்டு தெரியாதவனும், கொழும்பில் லொட்ச்சுகளில் தங்கி நின்று லூட்டி அடிச்ச பொடியள் கூட போன் பண்ணி நாங்கள்வன்னியில் இருந்து கதைக்கிறம் நீங்கள் அந்த VC யோ கீசியோ பதவி எடுக்கப் போறியளோ அல்லது சும்மா இருக்கப் போறியளோ எண்டது தான் தாமதம்.
கழித்த காலை கடனை கழுவாமல் அமெரிக்கா ஓடின பெருமகன் அவர். ஒரு D.Sc பட்டத்தை மட்டும் வைத்துகொண்டு (வேறு எந்த தகுதியும் அவரிடமில்லை) அதுவே ஒரு தகுதி மானுட ஜென்மத்துக்கு போதுமானது என்ற யாழ் மனநிலை (மனநோய்) பீடித்த கூ(ழ்)ல் போன்றோருக்கும் பகீரதன் போன்றோருக்கும் கூட்டு வருவதும், கூட்டு மனநிலையில் இவர்கள் சிந்திக்க தோன்றுவதும் ஒன்றும் வியப்பில்லை.
பாவம் அந்த தமயந்தி ஹூல் மாத்திரம். யாழ்பாணத்தில் இருந்து பெரதேனியா ஓடி அங்கிருந்து நாவல university ஓடி பின்னர் இனவாதிகளும் பெண்பிடிகாரன்களும் துரத்துறாங்கள் என்று பிறகும் பேராதனை ஓடி. பின்னர் அங்கிருந்தும்விலகி யாழ் பல்கலை கழகம் ஓட வெளிக்கிட்டு இப்ப அமெரிக்காவரை ஓடி மூச்சிரைத்தும், ஓடும் விருப்பத்தை நிறுத்தவில்லை.
தமயந்தி அக்கா எங்கையெல்லாம் மூச்சிரைக்க ஒடி , ஒடி அமெரிக்க போய் சேர்ந்தார் என்பதை சொன்ன நீங்கள் , தாங்கள் எப்படி எப்படியெல்லாம் மூச்சிரைக்க ஒடி கனடா போய் சேர்ந்தீர்கள் என்பதை சொல்லவேயில்லை ..
மன்னிக்கவும் தமயந்தி ஹூல் அல்ல துஸ்யந்தி ஹூல் என மாற்றி வாசிக்கவும் . நான் இலங்கை அரச பாசிசச் சூழலில் வாழ விருப்பமின்றி. எனது தேசத்தை பிரிய மனமும் இன்றி கனடா வந்து சேர்ந்தேன். இருப்பினும் எத்தகைய பாசிச அடக்கு முறைகளுக்கும் எதிராக எனது குரலை பதிவு செய்து கொண்டுமிருப்பேன்.
அலரிமாளிகையில் அரைமணி நேரம்
– அமிர்தலிங்கம் பகீரதன்
Pயமசையவாயnஇலங்கை ஜனாதிபதி அவர்களை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலே நான் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. இந்தச் சந்திப்புக்கு உதவியவர் ம.இ.பியின் பாராளுமன்ற உறுப்பினரும்இ பிரதி அமைச்சரும்இ என் நண்பருமாகிய திரு கீதன்சலி குணவர்த்தன ஆவர். இவர் அரசியல் பாரம்பரியம் மிக்க திரு பிலிப் குணவர்த்தன அவர்களின் புதல்வர்களில் ஒருவர். என் சந்திப்பின்போதுஇ இவருடன் தொழிற்சங்கவாதியும் சட்டத்தரணியுமான திரு சிறிதரனும் இருந்தார்.
அலரிமாளிகையை நான் அடைந்தபோது என் நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றன. 1978ஆம் ஆண்டு அது. என் தந்தையார் அமரர் திரு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம். அப்போது ஜனாதிபதியாக இருந்த திரு ஜெயவர்த்தனாவை சந்திக்க என் தந்தை அலரி மாளிகைக்குச் சென்றிருந்தார். . தந்தையைத் திருப்பி அழைக்கச் சென்ற காரில் நானும் இருந்தேன். தந்தையை வாசல் வரை வழியனுப்ப வந்த திரு ஜெயவர்த்தனாவிடம் தந்தை என்னை அறிமுகம் செய்துவைத்தார். எனக்கு முகமன் கூறிய அன்றைய ஜனாதிபதிஇ ‘ உங்கள் மூத்தமகனையும் இனி இங்கே திரும்ப அழைக்கலாம்’ என்று கூறினார். என் தமையனார் திரு காண்டீபன் அப்போது அரசியல் அடைக்கலம் கோரி இங்கிலாந்தில் இருந்தார். அவரை அழைக்கலாம் என்று கூறிய அதே ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்திலேயேஇ தந்தையாரின் சந்திப்பு நடந்து இரு வருடங்களின் பின்இ தேடப்படும் நபர்கள் என்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதில் திருவாளர்கள் பிரபாகரன்இ குட்டிமணிஇ தங்கதுரைஇ உமாமகேஸ்வரன் ஆகியோருடன் காண்டீபன் என்ற பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அது ஒரு காலம். இனி இன்றைய நிகழ்வுக்கு வருவோம்.
கெடுபிடிகளும் கடும் பாதுகாப்பு சோதனைகளும் கூடிய இல்லத்திலே தற்போதைய ஜனாதிபதியைச் சந்தித்தோம். வரணி பாடசாலை நூற்றாண்டு விழாவையொட்டி அதன் மேல்வகுப்பு மாணவர்கள் சுமார் நூறு பேர் வரை பாடசாலை அதிபருடனும் சில ஆசிரியர்களுடனும் அலரிமாளிகையில் உள்ள திறந்தவெளி முற்றத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஜனாதிபதியின் உரையை அங்கிருந்த மாணவர்களுக்கு திரு டக்ளஸ் தேவானந்தா தமிழிலே மொழிபெயர்த்து வழங்கினார். இதைத்தொடர்ந்தே என் சந்திப்பு ஜனாதிபதியுடன் நடந்தது. முதலாவது நிகழ்ச்சியிலே கலந்துகொண்ட அமைச்சரும் தொடர்ந்து இதிலும் கலந்துகொண்டார்.
கடந்த நான்கு வருடங்களாக மாணவர்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு வன்னி மாவட்டங்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். இப்போது போனபோது அங்கு ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களையும் புனருத்தாரணங்களையும் பார்க்க முடிந்தது. அதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டிஇ அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் எம்முடைய இந்தப் பணியும் மாணவரின் கல்வியும் எவ்வித இடையூறும் இல்லாது தொடருவதறீயமசையவாயn-1்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைத்தேன். இதற்கு ஜனாதிபதி சம்மதித்து உத்தரவாதமும் அளித்தார். வடக்கில் வாழும் மக்கள் தொடர்ந்தும் தம் கட்சியைப்புறக்கணித்தாலும் தன்பணி தொடரும் என்றும் உறுதியளித்தார். மாணவரின் கல்வியும் வாழ்க்கையும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதே தம்முடைய நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிளிநொச்சியில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இன்று யாழ் பல்கலைக்கழப் பொறியியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது பற்றியும் அவர் குறிப்பிட்டார். பல்லாண்டுகளாகப் புனர் வாழ்வுக்கு அனுப்பப்படாமல் சிறையில் வாடும் தமிழ் மக்கள் பற்றி ஆவன செய்யுமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
இதன் பின் மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நீதியமைச்சரிடமும் பேசினேன். விவரங்களைத் தன்னிடம் தந்தால்இ தான் தன்னால் முடிந்த நடவடிக்கைகள் எடுப்பேன் என அவர் உறுதியளித்தார். தற்போதைய காலகட்டத்தில்இ அதிகாரப் பரவலாக்கம்இ ஜெனிவா ஐக்கியநாடு விசாரணை போன்ற பல விடயங்கள் இருந்தாலும்இ அதனால் பாதிப்போ தாமதமோ ஏற்படாமல்இ போரினாற் பாதிக்கப்பட்டு அடிப்படை வாழ்வாதாரம்இ வசதிகளை இழந்து தவிக்கும் எம் மக்களின் அடிப்படைத் தேவைகள் மேம்பட்டு எம் சிறார்களின் கல்வி சீராகவேண்டும் என்பதே என் தீராத அவாவாகும். ஜனாதிபதியுடன் நான் சந்தித்தமை இந்த நோக்கிலேயே ஏற்பட்டது. இதற்கு எந்த விதமான அரசியல் நோக்கமோஇ தனிப்பட்ட காரணமோ இல்லை என்பதை உறுதிபடத் தெரிவிப்பது என் கடமையாகும்.
தேனீ.கொம்
தங்கள் குடும்பத்திற்கும் மக்களை கொன்று வாழும் அரச அதிகாரத்திற்கும் இடையேயான வாஞ்சையான உறவாடலை பெருமையாக பறை சாற்றும் பகீரதன் இந்த சந்திப்பிற்கு எந்த விதமான அரசியல் நோக்கமோஇ தனிப்பட்ட காரணமோ இல்லை என்கிறார். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மாணவர்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு வன்னி மாவட்டங்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். இப்போது போனபோது அங்கு ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களையும் புனருத்தாரணங்களையும் பார்க்க முடிந்தது. அதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டிஇ அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் எம்முடைய இந்தப் பணியும் மாணவரின் கல்வியும் எவ்வித இடையூறும் இல்லாது தொடருவதறீயமசையவாயn-1்கு உதவவேண்டும் என்பதன் மூலம் தனது என்ஜிஓ (எது என்று தெரியவில்லை) விற்கு மகிந்தவிடம் ஆதரவு கோருகின்றார்.
சிறையில் வாடும் தமிழ் மக்கள் பற்றி ஆவன செய்யுமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தாராம். அடிப்படை வாழ்வாதாரம்இ வசதிகளை இழந்து தவிக்கும் எம் மக்களின் அடிப்படைத் தேவைகள் மேம்பட்டு எம் சிறார்களின் கல்வி சீராகவேண்டும் எனவும் கோரினாராம். ஆனாலும் அரசியல் நோக்கம் இல்லையாம். தனது தனிப்பட்ட நோக்கத்தையும் அரசியல் கோரிக்கைகளையும் மகிந்தவிடம் வைத்து விட்டு வந்து இப்படி ஒரு அறிக்கை யாரை ஏமாற்ற?