அரசாங்கம் வெளிநாடுகளில் இதுவரை 75,000 கோடி ரூபா கடனை பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். தேசிய சேமிப்பு வங்கியில் 9 சதவீத வட்டிக்கு அரசாங்கம் 750 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுகாக 500 கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மாநாடு முடிவடைந்த பின்னர் அமைச்சர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கப்படும்.
அதேவேளை மாகாண சபைத் தேர்தலை கிரிக்கெட் போட்டியாக அரசாங்கம் மாற்றியுள்ளது. அபிவிருத்தியை கண்காட்சியாக்கி தேசத்திற்கு மகுடம் கண்காட்சி தற்போது கடனுக்கு மகுடமாக மாறியுள்ளது.
மக்களின் பணத்தைச் சுரண்டி அன்னிய நாடுகளின் கடனுக்கு வட்டியாக வழங்கும் இலங்கை அரச பாசிசம் தமது மேற்கு எஜமானர்களை திருப்திப்படுத்த 500 கோடி ரூபாவைச் செலவு செய்கிறது.
75,000 கோடி ரூபாவிற்கு ஆயிதம் வாங்கி கடன் என்றாள் என்னவாகி இருக்கும்…………
Sooner or later the United National Party will rule while the Rajapakse Family will hold on to the Presidency. Now K.. P. is also an expert in arms procurement. Let us forget the past.
டாக்குத்தர் அல்லது கலாநிதி ஐயா தாங்கள் கூறியதன் அர்த்தம் என்ன? ஏன் என்றால் தாங்கள் ஆங்கிலத்தில் செப்பிய இராச தந்திரம் விளங்கவில்லை
அது எவருக்குமே புரியாது
இனியொரு ” கருத்துக்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக அமையும் போது அங்கீகரிக்கப்படும்.” குழுவிற்குப் புரிந்திருக்கும்
ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலியத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி
ஓமந்தை முதல் பலாலி வரையான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றர் வரையான பாதையை அமைக்க 270 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் மாத்தறை முதல் பெலியத்தை வரையான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றரை அமைப்பதற்கு 1,412 மில்லின் ரூபா செலவிடப்படுகின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஒரே காலப்பகுதியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்காக செலவிடப்படும் நிதியில் இந்தளவு பெரிய வித்தியாசம் காணப்பட முடியுமா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையங்களை சீனாவுக்கு அடகு வைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை குறிப்பிட முடியும்.
ஓமந்தை முதல் பலாலி வரையில் அமைக்கப்படவுள்ள ரயில் பாதையானது 91 கிலோ மீற்றர் நீளமாகும். அதில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதையை அமைக்க 270 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.
அதேபோன்று பலாலி முதல் காங்கேசன்துறை வரையில் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. அதில் ஒரு கிலோ மீற்றருக்கு 343 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
ஆனால் மாத்தறை முதல் பெலியத்தை வரையில் 27 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றரை அமைப்பதற்கு 1412 மில்லின் ரூபா செலவிடப்படுகின்றது. இந்நிலையில் ஒரே காலப்பகுதியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்காக செலவிடப்படும் நிதியில் இந்தளவு பெரிய வித்தியாசம் காணப்பட முடியுமா? இது அசாதாரணமாக காணப்படுகின்றதே?
இது தொடர்பில் நாட்டுக்கு அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும். சீன நிறுவனம் ஒன்றுக்கே இது தொடர்பான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் இவ்வளவு அதிகரிப்பு இடம்பெறுவதற்கான காரணம் என்ன? இந்தக் கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்துவது? என்றார்.
2011 வருடத்திலும் 2012 வருடத்திலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி வலய விவசாயக் குடிமக்கள் எதிர்நோக்கிய அனர்த்தங்களால் பாதிப்புற்ற 1901 குடும்பங்களின் குடியிருப்புக்களை புனரமைப்புச் செய்ய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது
மொத்த நிதியுதவியாக (2011, 2012) இரு வருடங்களிலும் ரூபா 3 கோடி 92 இலட்சம் வழங்கப்பட்டதாகவும் 7072 குடியிருப்பாளர்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளனர்.