ராஜபக்ச குடும்பமும் இலங்கையின் பேரினவாதிகளும் வன்னியில் நிகழ்த்திய இன அழிப்பை வெறும் போர்க்குற்றம் என்ற பிரச்சாரத்தை அமரிக்க அரசும் அதன் புலம்பெயர் அடிவருடிகளும் மேற்கொண்டுவந்தனர். வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறான போராட்ட வழிமுறைகளால் அழிக்கப்பட்ட பின்னர் ஏகாதிபத்திய அரசுகளின் நேரடி உளவாளிகளாக தமிழ்ப் பேசும் மக்களை வாழுமாறு அழைப்புவிடுக்கும் அவர்களின் புலம்பெயர் தலைமைகளின் சதிவலை எஞ்சியோரயும் அழித்தொழிக்கும் வலிமை பெற்றது.
ஏகாதிபத்தியங்களால் கையாளப்பட்ட போராட்டம் தொல்வியடைந்தது என்ற உணமையை மறைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட தலைமைகள் அமரிக்கா ராஜபக்சவை தூக்கில் போடப்போகிறது என்று வரைக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருந்த நிலையில் அமரிக்கா மேற்கொள்ளவிருக்கும் தீர்மானத்தின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நிறைவேற்றிய அதே தீர்மானங்களையே மீண்டும் ஒப்புவிப்பதக அமரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கத் தயார் என்ற செய்தியையும் வழங்கியுள்ளது.
மில்லியன் கணக்கில் மக்களின் பணத்தைச் செலவிட்டு புலம்பெயர் தலைமைகள் மேற்கொண்ட அமரிக்க ஆதரவுப் பிரச்சாரங்களும் ஜெனீவா பயணங்களும் அர்த்தமிழந்த ஆர்ப்பாட்டங்களும் இதுவரை தோவியடந்த வழிமுறைகளையே மீண்டும் முன்னிறுத்தியது. அழிக்கும் நாடுகளை நம்பி எஞ்சியவர்களைக் காட்டிக்கொடுக்குடும் அரசியலைத் துறந்து ஒடுக்கப்படும் உலக மக்களோடு இணைந்து போராடும் அரசியல் திட்டம் ஒன்றை வகுத்துக்கொள்ள வேண்டிய நேரமிது.
தலைகீழாக மாறிய அமரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம் கீழே:
1) ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.
2) போரின் போதான கற்கைகள் மற்றும் இனங்களின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் ஆரோக்கியமான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கைத் தீவின் அனைத்துப் பிரஜைகளிற்கும் நீதி, சமத்துவம், மீளிணக்கம், பொறுப்பாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான சுயாதீன நடைமுறையை ஏற்படுத்துதல்
3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரின் சுயாதீனச் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களிற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலிறுக்க வேண்டுதல், சுதந்திரமாக கருத்துக்கூறல், தனிநபர்களின் ஒன்றுகூடுதலிற்கான உரிமை, நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், விசாரணையற்ற கொலைகள், சிறுபான்மையினரின் விவகாரங்கள், காணமற் போதல் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறைகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்தல்
4) மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பாக விடயங்களில் சிறீலங்காவிற்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குதல்.
5) மேற்கண்ட விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை ஆணையகம் சமர்ப்பித்தல்.
ஆகியனவே அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானமாகும்.
அமெரிக்கா , இந்தியா தவறு என்றால் நீங்கள் முன் மொழியும் தீர்வு என்ன? அது எவ்வளவு கால இடைவெளியில் நிறைவேறும்?
சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு அமைய சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் . அத்துடன்
சுய நிர்ணய கோட்பாட்டுக்கு அமைய தமிழ் மக்களின் அரசியல் விருப்பு என்ன என்பதை அறிய அந்த நிலத்துக்குச் சொந்தமான அனைத்து மக்களிடமும் பாரபட்சமற்ற வாக்கெடுப்பு ஒன்றி ன் மூலம் அறிதல் வேண்டும் .
இதில் சொந்த நிலத்தில் இருந்து புலம் பெயர் தேசத்துக்கு தூக்கி எறியப்பட்டவர்களும் அடங்கவேண்டும் .
இதனைத்தான் தமிழர் நலன் விரும்பும் அரசியல் அமைப்புக்கள் முன் வைக்கவேண்டும் .
அதனைச் செய்யாது வரதராஜப் பெருமாள் கும்பல் ஐக்கிய இலங்கைக்குள் மாகாணசபை சகதிக்குள் விழுந்தது மாதிரி இன்னொரு மொக்கானா சபைக்குள் GTF -TNA கும்பல் சென்று கொண்டிருக்கின்றது .
இது மாகாண சபை மாயாமான் மாதிரி இன்னொரு மாயமான் விட சிங்களத்துக்கு விருப்பமான பாதை . அந்த துரோகத்தை செய்ய ஒரு பாதிரியும் துணை போவது தான் வேதனை .
இந்த காலத்தில் பாதர் மார் பதர்களாகி இருக்கினம் தானே
மகிந்த -TNA -தென் ஆபிரிக்கா -GTF சதி அம்பலம் !!!!!http://tamilwhiteelephant.blogspot.co.uk/2013/03/tna-gtf.html
தலைப்பில் சொல்லப்பட்டது போல இது 180 பாகை அல்ல. 360 பாகை. ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வருதலாகும்.
IDHU KAN THUDAIPPA- ALLADHU-UNARVUHALAI OODHI VIDUM MUARCHIA ENPAHAI KALAM THAN SOLLAVENDUM.
இது எதன் வெளிப்பாடு என்றால் உலக மக்கள் அமெரிக்காவை பார்த்து உலக அமைதிக்கு எதிராக பயங்கரவாதம் உள்ளது அதை நாங்கள் வேரறுப்போம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவே இலங்கையில் நடந்தது அரச பயங்கரவாதம் இல்லையா/ என்று கேட்டுவிட்டால் அதற்க்காக இந்த நாடகமேயொழிய அவர்கள் உண்மையான நீதிமாஙளோ, வீர சூரர்களோ என்பது உண்மை100%.