இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் அறிவிக்கவேண்டும்

இலங்கை அரசியல்வாதிகள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு இந்தியா வரும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் முன் அறிவித்தலின்றி இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யக்கூடாதென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்களாகவா? அல்லது பிரபுக்களாகவா? இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றனர் என்பது பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமெனவும் குறைந்த பட்சம் நான்கு தினங்களுக்கு முன்னதாகவே இந்திய விஜயம் பற்றி அறிவிக்க வேண்டுமெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்குத் தெரிவித்துள்ளது.