புரட்சிகர அரசியல் மக்களை அணிதிரட்டுவது குறித்த உறுதியான அரசியல் திட்டங்களைக் கொண்டிருக்கும். இதற்கு எதிரான மாபியா பாணியிலான அரசியல் திட்டமிட்டு உலகம் முழுவதும் முன்நகர்த்தப்படுகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இதன் பாத்திரம் பிரதான பங்கை வகித்து அழிவுகளுக்கு வித்திட்டது. பண முதலைகளையும் வியாபாரிகளையும், மாபியா தொடர்பாடல்களையும் தோற்றுவித்த லொபி அரசியலை போருக்குப் பின்னர் கையகப்படுத்தியிருப்பது இலங்கை அரசு. பிரித்தானியாவிலிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக பல அரசியல் பிரமுகர்களுக்கு பணம் மற்றும் ஏனைய வளங்கள் தாரைவார்த்துக் கொடுத்தது இலங்கை அரசு.
இதே போன்று ராஜபக்ச அரசின் பாசிச செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக இலங்கை உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் வட்டியிலாக் கடனை பிபிசி ஊடகவியலாளர்கள் இருவருக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வந்துள்ளது.
இலங்கை அரசின் இந்த வட்டியில்லாத கடனைப் பெற்றுக்கொள்வதற்கு பிபிசி இன் சர்வதேச சேவை ஊடகவியலாளரான எல்மோ பர்ணாண்டோவும் சிங்கள சேவையின் நீண்டகால ஊடகவியலாளருமான சந்திரகீர்த்தி பண்டாரவும் விண்ணப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே பிபிசி சிங்கள சேவை ரனில் விக்கிரமசிங்காவின் ஊடக மாநாட்டில் பேசப்பட்டவையைத் திரித்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
////ஊடகவியலாளரான எல்மோ பர்ணாண்டோவும் ///// இவர்களை ஊடகவியலளார் என்பது மாபெரும் த்வறு . ஊடக சிப்பாய் என்பதே பொருந்தும். இந்த விடயம் தமீழ விடுதலையை நேசிப்பவர்களுக்கு ஊடக சிப்பாய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஈழதமிழ் மக்கள் மத்தியிலும் , ஊடகசிப்பாய்களும் , இணைய சிப்பாய்களும் இறக்கப் பட்டுள்ளனர். இவர்கள் எழுத்துக்களிலே அடிக்கடி தேசியம் தோன்றி மறையும். இது வாசகர்களை கவர்ந்து வைத்திருக்க செய்யும் தந்திரம். மக்கள் சிறீலங் க அரசு தொடர்பாக காத்திரமான எதிர்ப்புநடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டக் கூடிய செய்திகளை இவர்கள் அடக்கியே வாசிப்பர். இவர்களை நான் ஊடக விபச்சாரிகள் என்பேன். அல்லது திசை திருப்புவர் . இதற்கென இணைய வழி சிப்பாய்க்ள் வேறு இருப்பதாகவும் தோன்ருகின்றது .
ஊடக சிப்பாய் எழுத்திலே , இலக்கியம் இருக்கும் ,
கலை நயம் இருக்கும் , தேசியம் தோன்றி மறையும் ,
தோல்வி இருக்கும் , சோகம் இருக்கும், வெற்றிகள் எதுவும் இருக்காது ,தீர்வு சொல்லப்படாது .
வெற்றி கிடைக்கும் என்ற தைரியம் ஊட்டப்படாது.
இந்த வடிவத்தில் எவன் எழுதுகின்றானோ ,பேசுகின்றானோ
அவன் தான் நான் சொல்லப் போகும் விபச்சாரி
முள்ளி வாய்க்கால் அழிவின் பின் ,
புலம் பெயர் சமூகம் தான் அடுத்த இலக்கு என ,
வெளிப்படையாக அறிவித்தான் தமிழின எதிரி ,
அவன் நிச்சயம் அதை செய்கின்றான் என்பது தெரிகின்றது .
தகவல் போர் நடத்த ஆட்கள் தேவை என அண்மையில் அறிவித்தான் எதிரி .
அவன் அதை செய்கின்றான் என்பது தெரிகின்றது .
எமக்குள் நாம் மிக முக்கியமாக கேட்கவேண்டியது ,
எதிரியின் அந்த ஊடக விபச்சாரிகள் யார் என்பது ?
அவர்கள் தான் பிரச்சார போரில் எதிரியின் ஏவுகணைகள் .
முதலில் இலக்கு வைத்து தகர்க்க வேண்டியது அவர்களைத் தான்
எமக்குள் நாம் தேட வேண்டியது எதிரியின் அந்த ஊடக போர் விபச்சார “தளம்/தளங்கள் ” எது என்பது ?
இதுவரை அவர்கள் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை .
ஒரு கணம் மூச்சை நிறுத்தி சித்தித்து பாருங்கள்
எந்த ஊடகமாவது ஒரு ஊடக விபச்சாரியை அம்பலப்படுத்தி உள்ளதா ?
ஏன்? ஏன்? ஏன்?, ஏன் அது நடக்கவில்லை. ?
சும்மா வியாபார போட்டிக்காக ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தல் அர்த்தமற்றது .
அது நடப்பது தெரியும் அது வியாபார போட்டி .
தேசிய பாதுகாப்புக்காக அல்ல .
தேசிய பாதுகாப்புக்காக எவரையும் எவரும் ஊடக சிப்பாயாக அடையாளம் காணவில்லை .
ஊடக சிப்பாயை அனுப்புகின்றேன் அனுப்புவேன் என எதிரி சொல்லிவிட்டான் .
பின்னடைவுகளை சந்தித்தித்து , நொந்து போய் பலமற்று இருக்கும் எம்மை எதிரியின் சிப்பாய் எவ்வாறு அணுகுவான் .? சிந்திப்போம்
* எமக்கு இரங்குவது போல் வருவான் . எதிரி மீது குறை சொல்வதை கச்சிதமாக தவிர்த்து கொள்வான் .
*எம்மிடையே மீண்டும் ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வான் .
*வதந்திகளை பரப்பி விடுவான் .
*மறைந்திருந்து தாக்குவது போல் “ஜனநாயக” கருத்துக்களை மறைந்திருந்தே வெளியிடுவான் .
*நாங்கள் நடந்து வந்த பாதை பிழை என்று மட்டும் சொல்லி எம்மை மயங்க வைப்பான் .
*அவனிடம் எமது உரிமை பற்றி கருத்து இருக்காது .
* நாடு , தேசம் தொடர்பாக உனக்கென எதுவும் இல்லை என பேசுவான் .
* ஊடக சிப்பாய் எழுத்திலே , இலக்கியம் இருக்கும் , கலை நயம் இருக்கும் , தேசியம் தோன்றி மறையும் , தோல்வி இருக்கும் , சோகம் இருக்கும், வெற்றிகள் எதுவும் இருக்காது , வெற்றி கிடைக்கும் என்ற தைரியம் ஊட்டப்படாது. தீர்வு சொல்லப்படாது .
சமூகத்தின் பாதையை நிர்ணயிப்பது ஊடகம் தான் .
வேறு எந்த இலாப நோக்கமும் அற்ற சமூக நோக்கமுள்ள ஊடகங்கள் தேவை
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் எவன் நிதி வழங்குகின்றனோ அவனுடன் பகைக்காது இருப்பது மட்டும் தான், தேச விடுதலை அல்ல .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் எவன் நிதி வழங்குகின்றனோ அவனை திருப்தி மட்டும் தான், தேச விடுதலை அல்ல .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் வாசகர் தொகையை அதிகரிப்பது மட்டும் தான் தேச விடுதலை அல்ல .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் செய்திகளை முந்திக் கொண்டு பிரசுரிப்பது தான், தேச விடுதலை அல்ல.
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவது தான், தேச விடுதலை அல்ல .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை பிரசுரிப்பது தான் , தேச விடுதலை அல்ல .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் கவர்ச்சியான செய்திகளை வெளியிடுவதுதான் , தேச விடுதலை அல்ல .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் பணம் ஈட்டுவதுதான் .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் விளம்பரம் தருபவர்களை திருப்பதி படுத்துவது தான் .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் தேசிய செய்திகளை வெளியிடுவது வாசகர்களை அதிகரிக்க மட்டும் தான் .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் நடு நிலை வாதிகள் என கூறி வாசகர் தொகையை அதிகரிப்பது மட்டும் தான் .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் கருத்து சுதந்திரம் எனக் கூறி குழப்பத்தை விளைவிப்பது தான் .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் சில செய்திகளை திரித்து வெளியிடுவது தான் .
நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் நழுவல் போக்கை கடைப்பிடித்து விலாங்கு மீனாக வாழ்வது தான் .
சமூகத்தின் பாதையை நிர்ணயிப்பது ஊடகம் தான் .
வேறு எந்த இலாப நோக்கமும் அற்ற சமூக நோக்கமுள்ள ஊடகங்கள் தேவை .
இந்த எல்லா செயல்பாடுகளும் சிறிலங்கா அரசின் ஊடக சிப்பாய்கள் உட்புக இலகுவான ஓட்டைகள் .
சில சிப்பாய்கள் ஊடகங்களுக்குள்ளேயே நிலை கொண்டு விட்டார்கள் போலவும் தெரிகின்றது .
சில ஊடகங்கள் அந்த சிப்பாய்களாலேயே நடத்தப்படுவது போலவும் உள்ளது .
இவர்கள் இனம் காணப்பட வேண்டியது இன்றைய அவசியத் தேவை .
அந்தவகையில் பஸ்தியாம் பிள்ளை முதல் ….வேறு பலர் வருவார்கள் .
மிகச் சிறந்த பார்வை சந்திரமொவ்லிசன்! இத்தோடு நில்லாமல் சகல இணையங்கள் அதில் வரும் கட்டுரைகள். அக்கட்டுரைகள் ஊடாக சொல்லப் படும் சாதக பாதகங்களை இனங்கண்டு மக்கள் முன் சொல்லும் போது, இன ஒடுக்கல் கொள்கை கொண்ட பெளத்த சிங்கள அரசின் தொங்கு தசைகளை சமுகத்தின் முன் அடையாள படுத்த முடியும். என்பதுவும்
ஒடுக்கப் படும் இனத்தின் இன்னொரு துயரம்! ஊடக விபச்சாரிகள்!!
டி பி எஸ் ஜெயராஜ் என்கின்ற ஊடக விபச்சாரி தான் இலங்கை அரசிடம் பெறும் விபச்சார கூலிக்கு அதி உச்ச சேவையை செய்கின்றார். அண்மையில் ஐ நாவினால் வெளியிடப் பட்ட அறிக்கையால் நொந்து போயிருப்பவர்களை காப்பாற்றும் பொருட்டு பிரபாகரனை குற்றவாளியாக்கும் தோரணையில் அவர் கே பி இடம் கேள்விகளை நகர்த்திச் செல்கிறார். யாழ்ப்பாண மையவாத கூறு கெட்ட விபச்சாரி என்ற தன்மை இவருக்கே பொருந்தும். அவர் அண்மையில்
‘கே. பி’ உடன் டி பி எஸ் ஜெயராஜ்கண்ட நேர்காணலின் சில பகுதியை இங்கு இணைத்துள்ளேன்.
* “கேள்வி: எனவே இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியாது. எல்.ரீ.ரீ.ஈ, குறிப்பாக அதன் தலைவர் அவரது உறுதியான மற்றும் விட்டுக்கொடுக்காத தன்மையினால் இந்த நிலைக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். புலிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், தங்களது சொந்த உயிர்களுக்கு அப்பால் பெருமளவிலான பொதுமக்களின் உயிர்களையும் அவர்களால் காப்பாற்றியிருக்கு முடியும்.
பதில்: இதுதான் எனது ஆறாத் துயரம். இதுதான் தமிழர்களின் சோகம். ஒரு முன்னாள் மூத்த எல்.ரீ.ரீ.ஈ என்ற வகையில் இது எனக்கு ஒரு சுமையாக உள்ளது,அதனுடன்தான் நான் வாழ்கிறேன்.
கேள்வி: ஆனால் நீங்கள் மானிடத்துக்கு சேவையாற்றுவதன் மூலம் அதற்கு பிராயச்சித்தம் செய்ய முயற்சிக்கிறீர்கள். நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதைப்பற்றி நாங்கள் பேச வேண்டும்.
பதில்: ஆம். நிச்சயமாக அந்த விடயங்களைப்பற்றி பேச விரும்புகிறேன்.” *
இப்படிச் செல்கிறது இல்லை செல்ல வைக்கப் படுகிறது KP உடனான ஊடக விபச் சாரியின் பேட்டி. .
முள்ளிவாய்க்கால் பொதுமக்களின் படுகொலையை, மரணங்களை சர்வதேச சமுகத்தின் துணையுடன் ஓரளவுக்கேனும் கட்டாயம் தடுத்திருக்க வேண்டிய கடப் பாடு புலிகளுக்கும் அதன்தலைமைக்கும்இருந்திருக்கவேண்டும். இருப்பினும் இங்கு எனது பேசு பொருள் இலங்கை அரசின் இனப் படுகொலை முகத்தை அதன் இனவெறி மதவெறி கொள்கையை இலாவகமாக மறைக்கும் விபச்சாரிகளின் அபச்சாரமான கருத்துக்களையும், கருத்துருவாகிகளையும் தோலுரித்து காட்டுவதே.
மூதூர், வாகரை, முள்ளிவாய்க் கால் படுகொலைகள் என்பன இலங்கை அரசின் மிகத்திட்டமிடப்பட்ட ஒழுங்கு படுத்தப் பட்ட இன அழிப்பு நடவடிக்கை ஆகும். இருப்பினும் அப்படுகொலை இலங்கை அரசால் நிகழ்த்தப் படும் என்பதை ஒரு போராடும் இயக்கம் அறிந்து இருக்கும் ஆனால் இதனை எதிர் கொள்ள புலிகள் தவறியது கண்டிக்கப் பட வேண்டியது.ஆனால் அவ்வாறு கண்டிப்பதில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பொறுப்புகள் தட்டிகழிக்க முடியாத விடயமாக இருத்தல் வேண்டும்.
மாறாக டி பி எஸ் ஜெயராஜ் போன்ற ஊடக விபச்சாரிகளின் இனவெறி பௌத்த சிங்கள அரசை காப்பாற்றும் பிற்போக்கு சந்தர்ப்பவாத கொடுங்கோல் குணாதிசய கூலிக்கு மாரடிக்கும் ஊடக விபச்சாரம் தோற்கடிக்கப் பட வேண்டும். அண்மைக் காலமாக பல இணையத் தளங்களில் இனவெறி சிங்கள பௌத்த சிறீலங்கா அரசு சார்ந்த இணையங்களில் மாத்திரம் இன்றி புலிசார்பு அல்லது தேசியம் பேசும் இணையங்களிலும் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல சிங்கள பௌத்த சித்தாந்த பாசிச சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லவும் ஒடுக்கப் படும் சிறுபான்மை மக்களின் போராட்ட வீரியங்களை அவர்தம் நியாயங்களை புதை குழி தோண்டி புதைக்கும் வகையிலும் மிகச் சிறந்த ஊடக விபச்சாரிகள் செயல் படுகின்றனர். ஆகவே ஒடுக்கப் படும் மக்கள் ஒடுக்கு முறையாளர்களையும் அவர்களின் ஒட்டுண்ணிகளையும் இனம் பிரித்து அறியும் காலம் விரைவில் வரும், அதுவரை ஒடுக்கப் படும் இனங்கள் சூழ் நிலை குழப்பங்களால் அவதியுரவேண்டிவரும்.
S G ராகவன் (கனடா)