வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது அரசாங்கம் கடந்து சென்ற சவால்கள் இலகுவில் மறக்கப்படக்கூடியதல்ல. அதே போன்று வடக்கு மக்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அரசாங்கம் பெருமை கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வ நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரரும் வட-கிழக்கில் சுந்ததிரமாகச் செயற்பட இயலாத சூழலில் அமரிக்கத் தூதரின் இந்தக் கருத்து அமரிக்காவின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஈராகில் 1 மில்லியன் கொலைகளை நிகழ்த்திய அமரிக்கக் கூட்டணி, ஒரு மில்லியன் மனித் உயிர்களில் 90 வீதமானோர் அப்பாவிப் பொது மக்கள் என்று வெளியான குற்றச்சாட்டுக்களை இதுவரை மறுத்ததில்லை. அமரிக்க அரச வலைப்பின்னளுள் தமது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிவிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியிருக்கும் அவலத்தையும் இங்கு சுட்ட்டிக்காட்டலாம்.