இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக ரி.சி.பி. தமிழ் தொலைக்காட்சி சேவை நிறுத்தம்.

04.09.2008.

ஹொங்கொங்கிலிருந்து ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்த ரி.சி.பி. தமிழ் தொலைக்காட்சிச் சேவையை இரத்துச் செய்ய ஆசியா செற் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஆசியா செற் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது செய்மதியூடாக ஒளிபரப்புச் செய்து வந்த ரி.சி.பி. தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையை இரத்துச் செய்துள்ளதாக அந்த நிறுவனம் இலங்கை அரசிற்கு அறிவித்துள்ளது.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தொலைக்காட்சிச் சேவை மூலம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிகழ்ச்சிகளையும் பிரசாரங்களையும் மேற்கொண்டதாக இத்தொலைக்காட்சிச் சேவை மீது இலங்கை அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்படுவதால் இந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நன்மதிப்பிற்கு பங்கம் நேரிடக்கூடுமென இலங்கை அரசு எச்சரித்திருந்தது.

இதனால், இச்சேவையை தடை செய்யுமாறு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரக மூடாக ?ஆசியா செற்? நிறுவனத்திற்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாலும் இலங்கை அரசின் அழுத்தம் காரணமாகவும் இத்தொலைக்காட்சிச் சேவையை இரத்துச் செய்வதாக ஆசியா செற் நிறுவனம் அறவித்துள்ளது