22.01.2009.
இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறையில் பணிபுரியும் 30-40,000 பேர் வேலைவாய்ப்புக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆடை ஏற்றுமதித்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆடை உற்பத்திக்கான கேள்வி குறைந்திருப்பதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், இதனால் ஆடை ஏற்றுமதித் துறையில் பணியாற்றும் 30,000 முதல் 40,0000 வரையானோர் இந்த வருடம் வேலைவாய்ப்புக்களை இழக்கவிருப்பதாகவும் இணைந்த ஆடைஉற்பத்தி நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் அஜித் டயஸ் கூறினார்.
ஆடை உற்பத்தித்துறையிலுள்ள திறமைவாய்ந்த நடுத்தர நிர்வாக அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ள என அவர் குறிப்பிட்டார்.
சிறிய சிறிய ஆடை உற்பத்தி நிறுவனங்களை பாரிய நிறுவனங்கள் கொள்வனவு செய்வதன் மூலம் இந்த நிலைமையை தவிரக்க முடியும் எனத் தான் நம்புவதாகவும் டயஸ் தெரிவித்தார்.
“நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்குவதில் சிக்கல் காணப்படுகிறது. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களை நம்பியே பலர் உள்ளனர். 10-15 வீதமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துவிடுவார்கள்” என்றார் அவர்.
27 வருடங்கள் பழமைவாய்ந்த ஆடை உற்பத்தி நிறுவனமான சிநோடெக்ஸ் நிறுவனம் மூடப்பட்டதால் 2,000 பேர் வேலையிழந்தனர். அமெரிக்க சந்தையிலிருந்து குறைந்தளவு கேள்வி ஏற்பட்டதாலேயே அந்த நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆடை உற்பத்தி சம்மந்தமாக மேலும் தகவல்கள் வழங்கவேண்டும்