1312.2008.
18 வயதுக்குக் குறைவானவர்கள் திருமணம் செய்து கொள்வது இலங்கையில் அதுகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால், இவர்கள் திருமணம் செய்த பின்னர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தடுப்பதற்கு எதிர் காலத்தில் திருமணச் சான்றிதழில் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல இளைஞர், யுவதிகள் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருமணமாகி குடும்பம் பிள்ளைகள் என்று வரும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக 18 வயதுக்குக் குறைவான பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துள்ள சம்பவங்களும் அதிகரித்துள்ளன எனவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.
இலங்கையில் திருமணம் செய்பவர்கள் 18 வயதைத் தாண்டியிருக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
இதேபோல திருமணப் பதிவு செய்யாமல் பலர் குறைந்த வயதில் திருமணம் செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.