13.01.2009
இலங்கையில் யுத்தம் மற்றும் வறுமை காரணமாக 20 ஆயிரத்திற்கு அதிகமான சிறுவர்கள், சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
மேற்படிச் சிறுவர்கள் அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான சிறுவர் இல்லங்களில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் 22 அரச நிலையங்களிலும் 400 தனியார் நிலையங்களிலும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களில் அதிகமான சிறுவர்கள் தமது குடும்ப வறுமை காரணமாகப் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.