Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையில் போரை நடத்தும் சீன அரசின் பில்லியன்கள் : ஜெரமி பேஜ்

இனியொரு... by இனியொரு...
05/02/2009
in அரசியல்
0 0
0
Home அரசியல்

இலங்கையின் தென் கடலோரப் பகுதியில், உலகின் மிகவும் சுறு சுறுப்பான கடற்பாதையிலிருந்து பத்து மைல்கள் மட்டுமே தொலைவிலுள்ள உறக்கமடைந்து கிடந்த மீன்பிடி நகரான ஹம்பாந்தோட்டை பாரிய கட்டிட வேலைகளில் அமிழ்ந்து போயுள்ளது.

இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையிலான வட கிழக்குக் கடற்கறைப் பகுதியில் இடம்பெறும் போரில் ஈடுபாடுள்ள ஒருவரின் மன நிலையிலிருந்து மிகத் தொலைவிலிலுக்கும் 21 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டது இக்கிராமம்.
எது எவ்வாறோ, இலங்கை இராணுவம் துணிவுற்று எழுந்தமைக்கும், மேற்குலக அரசுகள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடாத்துவதற்குக் கூட அதிகாரமற்றுக் காணப்படுவதற்குமான காரணத்தை திடீரென மேலெழுந்த கட்டிட வேலைகள் புரிய வைப்பனவாக உள்ளன.
இந்த ஹம்பாந்தோட்டையில் தான் சீன அரசு 1 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகமொன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.சவுதி அரேபியா எண்ணை வினியோகத்தைப் பாதுகப்பதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தைக் காவல் செய்வதற்கும் சுற்றிவரும் சீனக்க்டற்படைக்கு இத்துறைமுகமானது, எரிபொருள் நிரப்பும் தரிப்பிடமாகவும் தங்குமிடமாகவும் பயன்படும்.
2007 பங்குனி மாதம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இத்துறை முகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து, புலிகளை வெற்றி கொள்வதற்கான ஆயுத மற்றும் இராஜதந்திர உதவிகளை சீன அரசு இலங்கை அரசிற்கு வழங்கிவருகிறது.
இந்திய உள்துறை அமைச்சரான பழனியப்பன் சிதம்பரம் சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகக் குற்றம சுமத்துகிறார்.
ஹம்ப்பாந்தோட்டை என்பது வெறும் துணிச்சல் மிக்க வியாபார முயற்சி என்று சீன குறிப்பிடும் போதிலும்,பாக்கிஸ்தானில் குவாட்டர் துறைமுகத்தையும்,
 பங்களாதேஷின் சிட்டாகோங் துறைமுகத்தையும், பர்மாவின் சிர்வீ துறைமுகத்தையும் நிர்மாணிக்கும் அல்லது புனரமைக்கும் சீனாவின் “முத்துமாலை” (“string of pearls”) தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்திய மற்றும் அமரிக்க இராணுவத் திட்டமிடலாளார்கள் கருதுகின்றனர்.
சீனாவின் இவ்விராணுவ நகர்வானது, 2006ம் ஆண்டு பென்டகன் வான்படை அதிகாரியான கேணல் கிறிஸ்தோபர் ஜே.பெர்சன் என்பவரால் உருவரை செய்யப்பட்டது. இதே ஆண்டு நவம்பர் மாதத்தில், அமரிக்காவின் இணை படைக் கட்டளையகத்தின் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும், போருக்கும் சமாதானத்திற்குமாமன கற்கை நிறுவனத்தைச் சேர்ந்தவருமான மேஜர் ஜெனெரல் தீபன்கார் பனர்ஜீ குறிப்பிடுகையில், “ஹம்பாந்தோட்ட என்பது சீனவிற்கு இன்று வியாபார நோக்குள்ளதாயினும் எதிர்காலத்தைப் பொறுத்தவரை மிகவும் தந்திரோபயமான தளம்” எனக் குறிப்பிடுகிறார்.
பிரித்தானியக் கடற்படை 1957 வரை திருகோணமலைத் துறைமுகத்தைத் தனது பிரதான பிராந்திய கடற்படைத்தளமாகப் பயன்படுத்தியது மட்டுமல்ல, இன்றும் அருகிலுள்ள டியாகோ கார்சியா தீவிலிள்ள கடற்படைத் தளத்தை அமரிகாவுடன் இணைந்து பயன்படுத்திவருகிறது.
சீனாவைப் பொறுதவரை முழுமையான கடற்படைத்தளம் ஒன்றை உருவாக்குவதற்கான எந்த உடனடித் திட்டம்மும் இல்லாதிருப்பினும், எண்ணை வினியோகத்திதை கடற்கொள்ளை மற்றும் அன்னியத் தடைகளிலிருந்து பாதுகாப்பதற்கான தேவையை நோக்கியதாகவே இது அமைவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சீனா தனது இலங்கையுடனான தனது பிணைப்புக்களை 1990ம் ஆண்டிலிருந்து வளர்த்தெடுத்துள்ளதுடன் மட்டுமன்றி,உள்நாட்டு யுத்தத்தில் பயன்படும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு இந்தியாவும் அமரிக்காவும் மறுப்புத் தெரிவித்த நிலையில் இலங்கையின் பிரதான ஆயுத வினியோக நாடாகவும் 90 களில் உருவானது. 2007 இலிருந்து சிறீ லங்காவிற்கான ஆயுதவிற்பனையை சீனா அதிகரித்திருந்தது.
இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும். பாதுகாப்புச் செயலாளருமான கோதாபாய ராஜபக்ஷ இணைப் பங்குதாரராகவுள்ள “Lanka Logistics Technologies Limited” இனூடாகவே பெரும்பாலான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
Jane’s Defence Weekly கூற்றுப்படி, இலங்கை அரசு சீன அரசுடன் 37.6 மில்லியன் பெறுமதியான வெடி பொருட்களையும், படைகளுக்குத் தேவையான பீரங்கி வகைகளையும் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஏப்பிரல் 2007 இல் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கிறது.
2007 இல் புலிகளால் விமானப்படையின் 10 விமானங்கள் நிர்மூலமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வருட்டம் சீன அரசானது ஆறு F7 விமானங்களை இலங்கை அரசிர்கு இலவசமாக வழங்கியிருந்தததாக ஸ்ரொக்ஹோல்ம் சர்வதேச சமாதானத்திற்கான நிறுவனம் தெரிவிக்கிறது.
2007 இலிருந்து சீன அரசானது பாக்கிஸ்தானை இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குத் தூண்டியதாகவும் இலங்கை விமானிகளுக்குப் பயிற்சியளிப்பதை ஊக்கமளித்ததாகவும், இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பிரச்சனையைப் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலிலில் இணைப்பதற்கான முயற்சிகளை தடைசெய்வதனூடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சீனா சிக்கலான இராஜதந்திர ஆதரவை வழங்கியிருந்தது.

மேற்கு நாடுகள் உதவி வழங்கும் தொகையைக் குறைத்துக் கொண்ட வேளையில் சீனா அதனை அதிகரித்துக் கொண்டது.

சில மில்லியன்களாக இருந்த சீனாவின் தொகையானது, 2005 இல் ஒரு பில்லியன் டொலராக பாய்ச்சல் நிலைக்குச் சென்றது, இதனால் ஜப்பானை இலங்கையின் மிகப்பெரிய உதவி வழங்கும் நாடு என்ற நிலையிலிருந்து நீக்கியது. சீனாவுடன் ஒப்பிடும் போது, அமரிக்கா 7.4 மில்லியன் டொலரையும், பிரித்தானியா 1.25 மில்லியன் டொலரையும் உதவித் தொகையாக கடந்த வருடம் வழங்கியது.

சீனக் கற்கைகளுக்கான சென்னை நிலையத்தைச் சேர்ந்த பீ.ராமன், “இந்தக் காரணத்தால் தான் மேற்கின் கண்டனங்களை இலங்கை நிராகரிப்பதாகவும், இலங்கையை பொறுத்தவரை சீனாவின் ஆதரவை நம்பியிருக்கலாம் எனத் தெரியும்” என்றும் கருதுகிறார்.
-ரைம்ஸ் இதழில்(UK) 01/05/2009 இல் வெளியான ஜெரமி பேஜ் இன் கட்டுரைய்லிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது-


குறிப்பு:
சீனாவை எதிர்கொள்ளும் நோக்குடன் இந்திய அரசானது இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதையும், தெற்காசியப் பிராந்தியத்தின் இராணுவ சமநிலை மற்றும் ஆதிக்கம் தொடர்பாக அமரிக்காவின் புதிய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவில்லை. தெற்காசியாவில் ஏகாதிபத்தியங்களின் இராணுவப் போட்டியானது, அப்பாவி மக்களின் பிணங்களின் மேல் தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள முற்படுகிறது. சீனாவுடனான மகிந்த குடும்பத்தின் வியாபாரப் பேரம் ஒரு அழகிய தீவை மக்களின் உயிருக்கு அடகு வைக்கிறது. இலங்கையை மையமாகக் கொண்டு சீனா,இந்தியா,அமரிக்கா ஆகிய நாடுகளின் தெற்காசிய அதிகாரப் போட்டி இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொள்ளப் போகிறது?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அப்பாவி மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்து மேதின எழுற்சி!(படங்கள்)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In