இலங்கையில் R2P எனப்படும் பாதுகாப்பதற்கான பொறுப்பு தோல்வியடைந்திருப்பதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவாகாரங்களுக்கான செயலாளர் ஜான் ஈக்லண்ட் தெரிவித்துள்ளார்.
பயங்கரங்களை தாம் ஊகிக்கமுடியுமென இன்னர்சிற்றி பிரஸ{க்கு குறிப்பிட்டிருந்த ஜான் ஈக்லண்ட், இலங்கையில் பெண்கள், தமிழ் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து திகில் நிறைந்த விடயங்களை தாம் ஊகித்துக்கொள்ளமுடியுமெனவும் தெரிவித்தார். அத்துடன், மனிதாபிமானப் பணியாளர்களை முழுவளவில் செல்லவிடாமல் மறுத்துவருவதால் மனிதாபிமான விடயங்களை ஆய்வுசெய்வதற்கு அப்பால் சாட்சியங்கள் தொடர்பிலும் பயனற்ற நிலைமையைத் தோற்றுவிக்கின்றதெனவும் அவர் கூறினார். மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான, சாட்சியங்களுக்கான, மனிதாபிமான நிவாரணத்திற்கான, பொதுமக்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கான மறுப்பை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அனுமதித்திருப்பதற்கு இலங்கை பின்னூதாரணமெனவும் ஜோன் ஹோல்ம்சுக்கு முன்னர் ஐ.நா. மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளராகப் பணியாற்றிய ஜான் ஈக்லண்ட் குறிப்பிட்டார்.
2005ஆம் ஆண்டு பாதுகாப்பதற்கான பொறுப்பை ஐக்கிய நாடுகள் உருவாக்கியிருந்ததுடன், எனினும், இது இலங்கைக்கு பயன்படுத்தப்படவில்லையெனவும் அவர் கூறினார். நாடுகளின் தலைவர்கள் தவறியுள்ளனரெனக் கூறிய ஜான் ஈக்லாண்ட், அநீதி இடம்பெறுகின்றபோது முரண்பாடுகள் அதிகரிக்குமெனவும் தெரிவித்தார்.