பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்ற கோபிதாஸ் விஸ்வலிங்கம் என்ற தமிழர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2007ம் ஆண்டு மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்ட இவர் வெலிகட்டைச் சிறைச்சாலையின் குளியலறையில் பிணமாகக் காணப்பட்டார். வெள்ளியினத்தைச் சேர்ந்த் உல்லாசப் பயணம் செல்லும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நாய் கடித்தாலே விசாரணைக்கு உத்தரவிடும் பிரித்தானிய அரசு கோபிதாஸ் பலியெடுக்கப்ப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது. பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது பிரஜையின் சிறைச்சாலையைக் கடந்தே டேவிட் கமரன் சென்றுள்ளார்.
கோபிதாசின் மரணம் சந்தேகத்திற்கு இடமானது என ஏனைய கைதிகள் தெரிவிக்கின்றனர். பிரித்தானிய அரச அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து இணையங்களில் செய்திகளாகப் பதிந்துகொள்ளும் பிரித்தானிய அமைப்புக்கள் கோபிதாசின் மரணம் குறித்த விசாரணையை நடத்துமாறு பிரித்தானிய அரசைக் கோரவேண்டும். பிரித்தானிய அரசு வெள்ளையினத்தைச் சாராதவரின் மரணம் என்பதால் அக்கறை காட்டவில்லை என்பதை உலகத்திற்குக் கூறவேண்டும். பிரித்தானிய அரசு விசாரணை நடத்த மறுத்தால் புலம்பெயர் மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தவேண்டும்.
மகசீன் சிறையில் மரணமான பிரித்தானிய பிரஜை தொடர்பில், முழுமை விசாரணை தேவை: பிரித்தானிய தமிழர் பேரவை
இலங்கையின் மகசீன் சிறையில் மரணமான பிரித்தானிய பொதுமகன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது
இந்தக் கோரிக்கையை பிரித்தானிய தமிழ் பேரவை விடுத்துள்ளது.
செஸ்சிங்டன், சரேயை சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரஜை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிறைக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் 2007 ஆம் ஆண்டு இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏனைய சிறைக்கைதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் விஸ்வலிங்கம் உயிர்தப்பினார்.
2012 ஆம் ஆண்டிலும் அவர் தாக்குதல் ஒன்றில் இருந்து உயிர் தப்பினார். இந்தநிலையில் அவரின் மரணம் தற்போது நிகழ்ந்துள்ளது.
கோபிதாஸின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.
எனவே பிரித்தானிய பிரஜை ஒருவர் வெளிநாடு ஒன்றில் மரணமானால் மேற்கொள்ளவேண்டிய அனைத்து விதமான விசாரணைகளும் விஸ்வலிங்கம் விடயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுவதோடு சரி. தமது பிரித்தானிய அரச எஜமானர்களுக்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை தெருவில் இறங்கி போராடுமா? ஒரு போதும் போராடமாட்டாது.
“வெள்ளியினத்தைச் சேர்ந்த் உல்லாசப் பயணம் செல்லும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நாய் கடித்தாலே விசாரணைக்கு உத்தரவிடும் பிரித்தானிய அரசு கோபிதாஸ் பலியெடுக்கப்ப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது.”, சும்மா பீலா விட வேணாம் இங்க, அவனுக்கு நிறத்துவேசமுன்னா உம்மைப்போல ஆட் களையெல்லாம் அங்க என் இருக்க வுடுறான், ஏதோ நீர் இல்லாம பிரித்தானியா இயங்காதா என்ன. என்னதான் எண்டாலும் இந்த சில யாழ் தமிழருக்கு தங்களை பற்றி பெரும் நெனைப்புத்தான்.
அப்ப அண்ணன் கொழும்பு போல.
அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அந்த குடியுரிமை ஒரு சிறப்பு சலுகையேதவிர உரிமை எதுவும் கிடையாது என்று மேற்குலகம் கூறத்தொடங்கியுள்ளது அத்தோடு சிறு குற்றங்கள் செய்பவா்களைக்கூட நாடுகடத்தவும் தொடங்கியுள்ளார்கள்.
தனது நாட்டு பூா்வீக குடிமக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வந்தேறிகளுக்கு கொடுப்பதில்லை என்பது அனுபவத்தில் கண்டவிடயம் இதில் பிரித்தானியா,கனடா,பிரான்ஸ் யாவும் அடங்கும்.
மேற்குலகினா் பலவகையில் நம்மைவிட சிறந்தவா்கள்தான் அதற்காக எல்லாவற்றையுமே ஒன்றாக பார்ப்பது விவேகமானதல்ல, அத்தோடு ஏன் எதை எடுத்தாலும் யாழ்ப்பாணத்தை அழைக்கின்றீா்கள்.
அவுங்க சொல்லாதையெல்லாம் நீங்களாகவே கற்ப்னை செய்துகொண்டு பேசுறீங்க நன்றி உணர்வேயில்லாம. வெள்ளையர்களும் மற்ற நாட்டு சிறைகளில் வாடத்தான் செய்கிறார்கள். எல்லா உரிமையும் உங்களுக்கும் இருக்கு எண்டு உங்களுக்கு தெரியும் ஆனா போக்கிரித்தனம் பண்ணினா நாடு கடத்துவாந்தான். யாழில் சிலரைதான் சொல்கிறேன, பெரும்பான்மையானவர்கள் மிக நல்லவர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்,
சிறையில் யாருமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.நான் அறிந்தவரை ஒரு சில இத்தாலியா்கள் ஏதாவது சிறு குற்றங்களை புரிந்து மகிழ்ச்சியாக சிறை செல்வார்களாம்,காரணம் அங்கு மூன்று நேரமும் தடையின்றி உணவு கிடைப்பதால். மறியலில் குற்றம் புரிந்தவா்கள் இருப்பார்கள்,குற்றம் நிரூபிக்கப்படவேண்டியவா்கள் இருப்பார்கள் இங்கே ஒரு மனிதா் ஐந்து வருடங்களுக்கு எந்த நிரூபித்தலும் இன்றி அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அந்த மனிதா் நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம் என்பதை மனதில் நிறுத்தவேண்டும்.
இங்கே வெள்ளை வாடுது கறுப்பு வாடுது என்பதல்ல பிரச்சனை யாராக இருந்தாலும் கேள்வி கேட்கவேண்டியவா்கள் ஏன் கேட்கவில்லை என்பதே.
இத்தாலியின் இரு மாலுமிகள் தங்கள் நாட்டு கப்பலுக்கு பாதுகாப்பிற்கு சென்று இரு இந்திய மீனவா்களை சுட்டார்களல்லவா, இந்தியா தங்கள் நாட்டு சட்டங்களுக்கமய அவா்களுக்கு தீா்ப்பு வழங்கப்போவதாக கூறிவருகிறது ஆனால் இத்தாலி என்ன சொல்கிறது, எந்த நிபந்தனையும் இன்றி அவா்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் இல்லையேல் இந்தியா இதற்காக பெரிய விளைவுகளை சந்திக்கவேண்டிவரும் என்று ஒவ்வொரு நாளும் மிரட்டிக்கொண்டே உள்ளார்கள்.
இங்கே இந்தியாவின் நிலையை நான் புகழமாட்டேன் ஏனெனில் சுத்த சந்தா்ப்பவாதிகள் ஆனால் இத்தாலியின் ஆணவத்தை பார்க்கவேண்டும் அந்த இருவரும் நையீரியா்களாகவும் இத்தாலி படையைச்சோ்ந்தவா்களாக இருந்திருந்தால் இப்படி இந்தியாவை பகைப்பார்களோ.
You are contradicting yourself. First you said our man was descriminated because he was colored and you are saying that it doesn’t matter. There is no use in debating you. I do not want the man’s death with disrespect. Let him rest in peace.
“வெள்ளையா்களும் மற்ற நாட்டு சிறைகளில் வாடத்தான் செய்கிறாங்க”
இலங்கையில் நடந்த கொலைக்கும், குற்றங்களை புரிந்து தண்டனை பெற்றவா்கள் சிறையில் வாடுவதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டுமே வித்தியாசமான விடயங்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அப்படி வாடுபவா்கள் வெள்ளையா்களாக இருந்தாலென்ன வேறு நிறத்தவா்களாக இருந்தாலென்ன என்பதே நான் கூறியிருப்பது. அவா்களுக்கு எந்த அரசுகளும் எதையும் செய்யமுடியாதல்லவா.
Now you want to differentiate them as criminals but not our man ? Like our man a number of them too are charged with fabricated crimes only. Don’t try to wiggle out of your initial claim that whites are treated differently. When you say sorry for that only anything you say here becomes valid.
Sutharsan and Kumar what was his kith and kin doing all these times. Now Sinhala lawyers are appearing for Tamils charged under. PTA. Prevention of Terrorism Act. The concern is money. Solid cash payments. They will do a fine job.