இலங்கையில் நிலவும் “பயங்கரமான சூழ்நிலை” பற்றி விவாதிக்க ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்றை கூட்ட, தான் கோரியிருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது.
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் ஒரு சில பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்சின் இந்தக் கோரிக்கை வருகிறது.
சர்வதேச சமூகம், இந்த போர்ப்பிரதேசத்தில் சிக்கியிருக்கும் தமிழ்ப் பொதுமக்களின் நிலை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளதாக பிரான்ஸ் அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க ராஜாங்கத்துறை, இலங்கை அரசு விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே, போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் சுடுவதாகவும், உயிர்ச்சேதங்கள் அதிகரிப்பதாகவும் கூறுகிறது.







