இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை வன்னியில் நடத்தப்பட்டது. சாட்சியின்றி பகல் வெளிச்சத்தில் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொலைகளின் சூத்திரதாரிகள் இன்றும் மாளிகைகளில் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், மோதல்கள் இடம்பெறும் பல நாடுகளில் படுகொலைகளில் இருந்து பாதுகாப்பு பெறுதல் சம்பந்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்தும், இந்த கொலைகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை இன்றும் மக்களின் அவலங்கள், சிறைகளில் மர்மமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து இந்த அறிகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.