இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 318 முறைப்பாடுகள்.

21.09.2008.

கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களை விட இவ்வருட முதல் எட்டு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 318 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலேயே கூடுதலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை தெரிவிப்பதற்காக 199 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.