சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான புதிய தகவல்களின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 597 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியை தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஒருகோடியே 87 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக இருந்தது. 2012 மார்ச் 20 ஆம் நடத்தப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் அறிக்கை நேற்று (26) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு இருந்த மொத்த சனத் தொகையுடன் ஒப்பிடும் போது, தற்போது இலங்கையின் சனத் தொகையானது 7.9 வீதமாக அதிகரித்துள்ளது.
30 வருடங்களின் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் தற்போதைய சனத்தொகை 20,227,597 என குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டில் யாழ். குடாநாட்டில் 20 சதவீதமான சனத்தொகை குறைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டின் சனத்தொகை 1981ம் ஆண்டு 734,000ஆக காணப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 583,000ஆக குறைந்துள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட – கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் பல்தேசிய நிறுவனங்களின் திட்டமிட்ட நிலப்பறிப்பும் நிகழும் நிலையில் சனத்தொகை மதிப்பீடு குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன.
இக் கணக்கெடுப்பை வைத்துகொண்டு எவ்வளவு நிலம் எந்த நிறுவனத்துக்கென்று பேரம் பேச இலகுவாக இருப்பதுடன் குறைந்த தொகையில் இருக்கும் மக்களை வேறு இடத்திற்கு துரத்தியடிக்கவும் கணக்கெடுப்பு உதவும்.
It is interesting that the East is now more populous than the North. It is time to hold the elections for the Northern Provincial Council. Dr. Dayan Jayathilaka wrote that it is already devolved. Dr. Neelan (Neelakandan) Thriuchelvam wrote that what is already given cannot be taken back.