Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையில் குடிகொள்ள ஆரம்பித்துள்ள அமெரிக்க இராணுவமும் அமெரிக்கத் தீர்மானமும்

இனியொரு... by இனியொரு...
09/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 27 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில்

இலங்கை இனப்படுகொலை இராணுவத்துடன் அமெரிக்க இராணுவம்(வவுனியா)
இலங்கை இனப்படுகொலை இராணுவத்துடன் அமெரிக்க இராணுவம்(வவுனியா)

ஆரம்பமாகிறது. எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்ள இந்த கூட்டத்தொடரில் மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை குறித்த வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் தொடர்­பா­கவும் பல நாடு­களின் பூகோள கால மீளாய்வு நிலை­மைகள் குறித்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
இலங்கை விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசாரணை குழுவின் ஏற்­பாட்­டாளர் சன்ட்ரா பெய்டா அல்­லது புதிய மனித உரிமை ஆணை­யாளர் இந்த வாய்­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ளார்.
கடந்த கூட்டத்தொடரில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் இறையாண்மைக்கும் தன்னாதிக்கத்திற்கு பாதிப்பற்ற வகையில் இலங்கையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இத்தீர்மானம் கோரியது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரித்து போர் நடைபெற்ற வேளையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய வேண்டும் என்பதே தீர்மானத்தின் அடிப்படை. இறுதிக்கட்ட போரின் போது எந்த வித மனித உரிமை மீறலும் நடைபெறவில்லை என்றும், அப்படி ஏதாவது மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்திருந்தால் அது குறித்து நாங்களே விசாரணை நடத்துவோம் என்றும் இலங்கை அரசு அறிவித்தது.
ராஜபக்ச அரசு தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அமெரிக்காவும் ஐ.நாவும் தம்மைத் தண்டிக்கப் போவதாகவும் அனுதாப வாக்குகளை சிங்கள மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டது.
இது தவிர அமெரிக்க அரசு இலங்கையை இராணுவ மயப்படுத்தி வருகின்றது. இலங்கை அரசுடன் இணைந்து நடக்கும் இந்த இராணுவ மயமாக்கலை மறைப்பதற்கே இத் தீர்மானங்களைப் பயன்படுத்துகின்றது.
கோத்தாபயவின் தலைமையில் இரண்டு மிகப்பெரும் தனியார் இராணுவ அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை இந்துசமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பிரித்தானிய அரசு இத்தனியார் இராணுவ அமைப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு அனுமதியளித்ததாகக் கூறுகிறது.
கண்ணி வெடிகளை அகற்றுகிறோம் என்ற அடிப்படையில் பலாலி வவுனியா போன்ற பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து சிறிய விமானங்கள் ஊடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ளும் அமெரிக்க இராணுவம், தாய்லாந்து டியாகோகார்சியா போன்ற இராணுவ நிலைகளுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு டியாகோகார்சியாவில் அமெரிக்க இராணுவம் நிலைகொண்டிருப்பதற்கான ஒப்பந்தம் முடிவிற்கு வந்த பின்னர் அத் தளத்தை இலங்கைக்கு மாற்றம் செய்யலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில், குறிப்பாக வடக்கில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை மறைப்பதற்காகவே போர்க்குற்ற விசாரணை என்ற நாடகம் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இராணுவத்த்தின் செயற்பாடுகள் வெளியில் தெரிவதில்லை. கொழும்பில் பிரபல பல்தேசிய வியாபாரி தம்மிக பெரேராவின் ஐந்து நட்சத்திர விடுதியான கிங்ஸ்பரி ஹொட்லிலிருந்தே ஹெலிகொப்டர்கள் ஊடாக அமெரிக்க இராணுவத்திற்கு உணவு எடுத்துச்செல்லப்படுகிறது. கடந்த 9 மாதங்களாக நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகளில் விமானப்படை மற்றும் கடற்படையினரும் அடங்குவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு இணையம் தெரிவிக்கிறது.
அமெரிக்க இராணுவத்தின் இணையத்தளம் இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைக்கிறோம் என்ற தலையங்கத்தில் தமது நிலைகள் குறித்துத் தெரிவித்திருக்கும் போது தமிழ்த் தலைமைகளோ, புலம்பெயர் இணையங்களோ தகவல்களை இருட்டடிப்புச் செய்கின்றன.
சாரிசாரியாக மக்களின் உயிரையும் வளங்களையும் இலங்கை பாசிச சர்வாதிகரிகளிடம் ஒப்படைத்து, மக்களை இரத்ததால் குளிப்பாட்டிய அதே தமிழ்த் தலைமைகள் அமெரிக்க இராணுவப் பிரசன்னம் தொடர்பாக கேள்வியெழுப்பக் கூடத் தயாரில்லை.
தாய்லாந்தை உலகத்தின் பாலியல் தொழிற்சாலையாக மாற்றிய அதே அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்ள ஆரம்பித்திருக்கும் போது கலாசாரக் காவல்படைகள் போல கருத்து வெளியிடும் பிற்போக்கு தமிழ்த் தலைமைகள் மௌனம் சாதிக்கின்றன.
இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் புதிய ஆணை­யாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்­த­வுள்ளார். அந்த உரை­யின்­போது இலங்கை விவ­காரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணை­யாளர் பிரஸ்­தா­பிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
.அந்த வகையில் ஜெனி­வாவில் உள்ள இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத் ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான தூதுக்­குழு 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­ள­வுள்­ளது. அத்­துடன் சட்டமா அதிபர் திணைக்களத்திலி­ருந்து இரண்டு உயர் அதி­கா­ரிகள் ஜெனி­வா­வுக்­கான தூதுக்­கு­ழுவில் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐ.நாவின் போர்க்குற்ற நாடகமும்  புலம்பெயர் அமெரிக்க விசிறிகளும்

ஐ.நாவின் போர்க்குற்ற நாடகமும் புலம்பெயர் அமெரிக்க விசிறிகளும்

Comments 4

  1. Alex Eravi says:
    11 years ago

    No comments…

  2. Thileeba says:
    11 years ago

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்களுக்கான ஆங்கில மூலத்தை தர முடியுமா. அமொpக்க பாதுகாப்ப இணையத்தில் குறிப்பிட்டிருப்பதாக நீங்கள் குறிப்பிடும் தகவலுக்கான ஆதாரத்தை பகிரங்கப்படுத்துக்கள். ஏனெனில் எனது தேடுதலில் நீங்கள் குறிப்பிடுவது போன்று எதுவும் அமொpக்க இராணுவ இணையத்தளத்தில் இல்லை. அப்டியாயின் நங்கள் குறிபிடும் அமொpக்க பாதுகாப்பு இணையம் என்பது என்ன? பென்ரகன் தள்ளத்திலும் நீங்கள் குறிப்பிடுவது போன்று ஏதும் தகவல்களை காண முடியவில்லை. ஆங்கில இணைப்புக்களை தாருங்கள். அதன் பின்னர்தான் இந்த தகவல் குறித்து விவாதிக்க முடியும். 

    • இனியொரு... says:
      11 years ago

      http://www.army.mil/article/113556/U_S__Forces_Partner_with_Sri_Lanka_for_Mine_Training_Program/

      • Thileeba says:
        11 years ago

        இது சாதாரண பயிற்சியல்லவா. பயிற்சிக்கும் ஒரு இராணுவப்பரிவு இலங்கையில் நிலைகொள்வதற்கும் பெரிய வித்தியாசமுண்டு. மேலும் இந்த இணைப்பில் தம்பிக்க பெரோ பற்றி எதுவும் இல்லையே. அதனை எங்கிருந்து எடுத்தீhகள். ‘இராணுவத்த்தின் செயற்பாடுகள் வெளியில் தெரிவதில்லை’ அதெப்படி இனியொருவிற்கு மட்டும் தொpயவந்தது. மக்களை குழப்பாதீர்கள்? 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...